ஈகோவை மறந்து.. கூட்டத்தை மறந்து.. மேடையில் உடைந்து அழுத நடிகர்கள்.. கண்ணீரில் இருக்கும் வலி!

சென்னை: என்னதான் முரட்டுத்தனமான ஆளாக இருந்தாலும், அவங்களுடைய ஆடி ஆழ் மனதில் ஒரு குழந்தைத்தனமான மனசு இருக்கணும்னு சொல்லுவாங்க. அப்படி சினிமாவில், ஹீரோவாக, ஹீரோனியா, வில்லனாக நாம் பார்த்து நெகிழ்ந்த பலர் நடிகர்கள் சின்ன விஷயத்துக்கெல்லாம் மனசு உடைந்து, கண் கலங்கி மேடையிலேயே எந்த வித ஈகோவும் இல்லாம, பலர் முன் அழுது இருக்கிறார்கள். அந்த அழுகைக்கு பின்னாடி இருக்கும் வலி என்ன என்பதைத்தான் இந்த செய்தியில் நாம் பார்க்கலாம்.

நேற்று தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடந்தது, அதில், பல நடிகர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். கோலாகலமாக நடந்த இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கண்கலங்கி பேசினார். சின்ன வயதில் இருந்து நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். மற்ற குழந்தைகள் எல்லாம் விளையாடிகிட்டு இருக்கும்போது நான் மட்டும் சினிமா, படிப்பு என பிசியாக இருந்தேன். அப்போதெல்லாம், என்னுடைய அப்பா,அம்மா மேல கோபம் வரும். என் வயசு பசங்க எல்லாம் விளையாடிட்டு இருக்கும் போது, என்ன மட்டும் இப்படி கஷ்டப்படுத்துகிறார்கள் என நினைத்து பல முறை அழுது இருக்கிறேன். ஆனால், இன்னைக்கு 40 வருஷம் கழிச்சு கமலஹாசனுடன் நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதற்கு காரணம் என்னை நடிகனாக்கி அழகு பார்த்த என்னுடைய அப்பா அம்மா தான் அவர்களுக்கு என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன் என கண் கலங்கி பேசி இருந்தார்.

Kollywood actor story

நடிகர் சிம்பு: வழக்கமாகவே சிம்பு உணர்ச்சி வசப்பட கூடியவர் தான், மாநாடு படத்தின் இசைவெளியீட்டு விழாவிலும், இப்படித்தான் அவர் உடைந்து அழுதார். இவரை விட இவருடைய தந்தை டி ராஜேந்திரன், மென்மையானவர், எந்த விஷயமாக இருந்தாலும், பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கி விடுவார். அப்பாவை பற்றி நேற்று மேடையில் பேசி சிம்பு, இந்த நிகழ்ச்சிக்கு அப்பாவை வர வேண்டாம் என்றேன். ஏன் என்றால், அவர் வந்தால் எமோஷனலாக பேசிவிடுவார். மேடையே ஒரு விதமாக எமோஷனலாகிவிடும். ஆகையால், நீங்க வராதீங்க என்று சொன்னேன். கடைசில நானே எமோஷனல் ஆயிட்டேன் என்று சிம்பு சொல்லி இருந்தார்.

8 மாத போராட்டம் : அதே போல, திரையில் நாம் பார்த்து வியந்த நடிகை சமந்தா, மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டார். அது குறித்து பேட்டி அளித்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் என் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. தசைகள் பயங்கரமாக வலியை கொடுத்தன. சில நாட்கள் படுகையில் இருந்து என்னால் எழுந்தரிக்க கூட முடியவில்லை. மேலும் கடுமையான ஒற்றைத் தலைவலி, சாதாரணமான செயலைகளை கூட என்னால் செய்ய முடிவில்லை. இதே வலியுடன் எட்டு மாதம் பல சித்திரவதைகளை நான் அனுபவித்தேன் என்று சமந்தா அந்த பேட்டியில் உடைந்து அழுதார். உடல் வலியை விட, அவர் மனதளவில் சோர்ந்துவிட்டதால், அவர் அன்று உடைந்து அழுதார்.

நடிகர் சூரி: கிடைத்த வேலைகள் எல்லாம் செய்து சினிமாவில் கூட்டத்தில் ஒருவராக இருந்து பின் நகைச்சுவை நடிகராக மாறி, இன்று கதாநாயகனாக பரிமாணம் எடுத்திருக்கிறார் நடிகர் சூரி. அவர் நடித்த மாமன் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசிய நடிகர் சூரி, திருப்பூரில் நான் வேலை செய்த போது, அங்கு தேங்காய் பன் சுவையாக இருக்கும். ஆனால், அதை வாங்கி சாப்பிடுவதற்கு கூட என்னிடம் காசு இருக்காது. இதனால், நான் பல நாட்கள் டீயை மட்டுமே குடித்துக்கொண்டு இருந்தேன். ஆனால், இன்று உங்களால், ரசிகர்களால் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன். உங்களை நான் என்றுமே மறக்க மாட்டேன் என மேடையிலேயே கண் கலங்கி பேசினார்.

Kollywood actor story

அப்போவே வாழ்க்கை முடிஞ்சி இருக்கும்: தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சிவக்குமார், தற்போது படங்களில் நடிக்காமல் இருக்கிறார். ஆனால், தனது மகன்கள் நடிக்கும் படத்தின் இசைவெளியீட்டு விழா, இன்னும் சில விழாக்களில் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். அந்த வகையில் அண்மையில் நிகழ்ச்சியில் தனது அம்மா குறித்து பேசினார். அதில், என் அம்மா, கணவரும் இறந்துவிட்டார், குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய மகனும் போய்விட்டான். இனி மேல் எதற்கு வாழ்ந்து கொண்டு என நினைத்து ஒரு அரளி விதையை கொடுத்து இருந்தாள், என் கதை 1941ல்லேயே முடிந்து இருக்கும். ஆனால், அந்த பாவி மக என்னை காப்பாற்றினாள். இன்னைக்கு நான் நடிகனா உங்க முன்னாடி இருக்கிறேன். அப்போது பள்ளிக்கூடம் இல்லை பிரைவேட் பள்ளியில் படிக்க வேண்டும் என்றால், அதற்கு பணம் தர வேண்டும். அந்த நேரத்தில் படிக்க வைக்கக்கூட பணம் இல்லை. அப்படி கஷ்டமான சூழ்நிலையிலும் என் தாய் மிகவும் சிரமப்பட்டு என்னை வளர்த்தார் என்று நடிகர் சிவக்குமார், தனது தாயை நினைத்து கண்ணீருடன் அதில் பேசியிருக்கிறார்.

மனம் உடைந்த மகேந்திரன்: AMIGO Garage இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் மகேந்திரன், AMIGO Garage படத்தை எடுப்பதற்கே மிகவும் கஷ்டப்பட்டோம், படம் வெளியே வருமா.. வராதா என்று யோசித்த நேரத்தில் கொரோனா வந்தது. தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டன. அப்படியே கொரோனா முடிந்தாலும், மீண்டும் பழைய நிலைக்கு சினிமா வராது. தியேட்டருக்கு மக்கள் வர மாட்டார்கள் அதன்பின் நாம் என்னவாவோம். எனக்கு சினிமாவை தவிர வேறு தொழிலே தெரியாது, எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டும் தான். என்ன செய்வது என நான் யோசித்துக் கொண்டு இருந்த நேரத்தில் தான், சினிமா அல்லாத ஒருவர் சினிமாவை காப்பாற்றுவதற்காக இந்த படத்தை வெளியிட முன்வந்தார். ரொம்ப கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்து இருக்கிறோம்.

மூன்று வருட போராட்டத்திற்குப் பிறகு இன்று இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. சின்ன படம், பெரிய படம் என்ற வேற்றுமை பார்க்காமல் எங்களுக்காக, இரண்டு மணி நேரம் படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள் என்று கண் கலங்கிய படி பேசுகின்றார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகர் மகேந்திரன், மாஸ்டர் திரைப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்து பெயரெடுத்தார். இவர் நடித்த AMIGO Garage திரைப்படம் கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியானது. அதன் இசைவெளியீட்டு விழாவில் தான் மகேந்திரன் மனம் உடைந்து பேசி இருந்தார்.

More from Filmibeat

Read more about: story கதை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X