twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனிதர்கள் மடியலாம்... மண் மடியக்கூடாது! - 'தேன் கூடு' சொல்லும் ஈழத்தின் வீரப்போர் கதை!

    By Shankar
    |

    Thenkoodu
    ஈழத்தின் வீரப் போர் கதையை முதல் முறையாக ஒரு படத்தில் பதிவு செய்துள்ளனர் தமிழ்ப் படைப்பாளிகள்.

    இத் திரைப்படத்தில் நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில் எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த்திரைப்படமான '1999' நாயகருமான சுதன் மகாலிங்கம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் நாயகியாக நவீனா என்பவர் நடித்துள்ளார்.

    படத்தின் இயக்குநர் இகோர் இதற்கு முன் தமிழில் ஆர்யாவை வைத்து கலாபக்காதலன் படத்தைக் கொடுத்தவர்.

    தேன்கூடு படத்தினை இலெமூரியா சர்வதேச திரைப்பட நிறுவனம் தயாரிக்க பிளசிங் எண்டர்டெய்னர்ஸ் பிரபாதிஷ் சாமுவேல் வழங்குகிறார்.

    1984-ல் இலங்கை திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள தென்னமரவாடி என்ற பசுமை நிறைந்த தமிழ் கிராமம் சிங்கள வெறியர்களால் சூறையாடப்படுகிறது. அந்த கிராம அழிவிலிருந்து ஒரு ஈழ விருட்சம் வீரமாய் துளிர்விடுகிறது. அதன் போராட்டக் கதை 2009 முள்ளிவாய்க்கால் வரை தொடர்கிறது. முடிவே வரலாறு….. இல்லை அது முடியாத வரலாறு, என்பதுதான் படத்தின் அடிநாதம்.

    இலங்கை வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்ட ஒரு தமிழீழக் கிராமத்தை தேன்கூடு

    திரைப்படத்தில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்களாம்.

    தமிழீழ மக்கள் மண்ணை விட்டுதான் போகிறார்கள்.. மண் அவர்களை விட்டுப்போகாது.. ஆண்ட தமிழினம் மீண்டும் ஆளும்…மனிதர்கள் மடியலாம்.. மண் மடியாது! இதை தேன்கூடு உணர்த்தும் என்கிறார்கள் லெமூரியா படக்குழுவினர்.

    பிப்ரவரியில் உலகமெங்கும் வெளிவருகிறது 'தேன் கூடு' .

    English summary
    Thenkoodu is the new movie based on the war of Tamil; Eelam. This is the first Tamil movie made on the war of Tamil Eelam. Directed by Igore of Kalaba Kathalan, the movie is expecting to release in coming February.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X