பயில்வான் செய்வதில் தவறில்லை.. அவர் வேலையை தானே செய்கிறார் - நடிகை ஐஸ்வர்யா கருத்து

சென்னை: பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. அவர் தனது வேலையை தான் செய்கிறார் என நடிகை ஐஸ்வர்யா தெரிவித்திருக்கிறார்.

பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டாலே நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் தயார் ஆகிட வேண்டும் என்றும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல்களில் நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்கள் குறித்து அப்பட்டமாகவும், கற்பனைகளாகவும் பேசி வருவது சினிமா வட்டாரங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 பயில்வானின் கர்மா

பயில்வானின் கர்மா

சினிமா நட்சத்திரங்களைப் பற்றி பல விசயங்கள் அவதூறாகவும், விமர்சனமாகவும் பேசுகிறார் என்றால், அது அவரது வேலை. ரிப்போர்ட்டரின் வேலையே அது தானே. அவர் தனது வேலையை செய்கிறார். என்னவெல்லாம் செய்கிறாரோ? அது அவரது கர்மா. பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டாலே நம்மை பற்றி நல்லதும் பேசுவார்கள், கெட்டதும் பேசுவார்கள். அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்துவிட வேண்டும். அப்போது தான் நிம்மதியாக இருக்க முடியும். இல்லையென்றால், மன அழுத்தம் ஏற்பட்டு நாலு தூக்க மாத்திரைகளை முழுங்கி சாகும் நிலை ஏற்பட்டுவிடும் என நடிகை ஐஸ்வர்யா தெரிவித்திருக்கிறார்.

 ஐஸ்.. வர்றியா? எனக் கேட்ட ரசிகர்

ஐஸ்.. வர்றியா? எனக் கேட்ட ரசிகர்

1990-ம் ஆண்டு, ஊரெல்லாம் உன் பாட்டு திரைப்படத்தில் ராமராஜனுடன் நடித்த போது ஏற்பட்ட சம்பவம் ஒன்றையும் ஐஸ்வர்யா பகிர்ந்திருக்கிறார். அத்திரைப்படத்தில் பாவாடை தாவணி போட்டு ஒரு ஹோம்லியான கேரக்டரில் நடித்திருக்கிறார். அப்போது படப்பிடிப்பு இடைவேளையில், நடந்து போகும் போது, அங்கு கூடியிருந்த ரசிகர்களில் ஒருவர், "ஐஸ் வர்றியா?" எனக் கேட்டிருக்கிறார். அந்தக் காலத்திலேயே தனக்கு அப்படி நடந்தது என்பதை ஐஸ்வர்யா நினைவு கூர்ந்திருக்கிறார். மேலும், ஒரு திருமணம் ஆன குடும்பப் பெண் நன்றாக உடுத்தி ரோட்டில் நடந்து போனாலே, யாரைப் பார்க்க இப்படி மினுக்கிக் கொண்டு போகிறாரோ? என பேசும் சமூகத்தில் தான் வாழ்கின்றோம் என்றும் ஐஸ்வர்யா அப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

 அட்ஜஸ்ட்மெண்ட் கிடையாது

அட்ஜஸ்ட்மெண்ட் கிடையாது

சினிமாவில் நட்சத்திரங்களின் பிள்ளைகள் யாரும் இந்த காஸ்டிங் கவுச்சில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள் என ஐஸ்வர்யா தெரிவித்திருக்கிறார். ஒரு நடிகையின் வாரிசு, தான் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அழைக்கப்பட்டதை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறாரே? என அவரைப் பேட்டி எடுத்த வீஜே பார்வதி கேட்க அதற்கு மறுக்கும் வகையிலேயே ஐஸ்வர்யா கருத்து தெரிவித்திருக்கிறார். அவ்வாறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து சினிமாவில் முன்னேறியவர்கள் எப்படி நிம்மதியாக உறங்குகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். இத்தனை ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில் எனக்கென ஒரு கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகிறேன் என ஐஸ்வர்யா தெரிவித்திருக்கிறார்.

 ஒரு Small டிஷ்யூ ,But Big இஷ்யூ

ஒரு Small டிஷ்யூ ,But Big இஷ்யூ

கற்பு குறித்து உங்கள் கருத்து என்ன? என விஜே பார்வதி கேட்க அதற்குப் பதிலளித்த ஐஸ்வர்யா, "அது ஒரு Small Tissue.. But people making it as a big issue" எனத் தெரிவித்திருக்கிறார். அந்த திசு விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கும் சேதமாகும். அது மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவே அது ஒரு சின்ன விசயம் அதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றும் ஐஸ்வர்யா தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X