twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பகத் பாசில் கேரக்டருக்கு ரீப்ளேஸ்மெண்ட்டே கிடையாது.. இயக்குனர் ரத்னகுமார்!

    |

    சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளது

    கமல்ஹாசன்,பகத் பாசில், விஜய்சேதுபதி, நரேன் என பலர் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் வெளியாகியுள்ளது

    இந்த நிலையில் விக்ரம் படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ள இயக்குனர் ரத்னகுமார் பகத் பாசில் கதாபாத்திரத்திற்கு ரீப்ளேஸ்மெண்ட்டே இல்லை என கூறியுள்ளார்.

     என் படங்களில் நடிக்கும் ஹீரோக்களை 100 வருடங்கள் கழித்தும் ஞாபகம் வைத்திருப்பார்கள்... பாலா! என் படங்களில் நடிக்கும் ஹீரோக்களை 100 வருடங்கள் கழித்தும் ஞாபகம் வைத்திருப்பார்கள்... பாலா!

    வித்தியாசமான மேக்கிங் ஸ்டைல்

    வித்தியாசமான மேக்கிங் ஸ்டைல்

    தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் ஆக கலக்கி கொண்டுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் முதல் படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது வித்தியாசமான மேக்கிங் ஸ்டைல் அதிரடியான ஆக்ஷன் திரைக்கதையுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வெற்றி பெற்று வருகின்றன

    இருட்டிலேயே நடக்கின்ற

    இருட்டிலேயே நடக்கின்ற

    முழுக்க முழுக்க இருட்டிலேயே அந்த வகையில் மாநகரம் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. கார்த்தியின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வழக்கமான மசாலா படங்களை போல அல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியானது முழுக்க முழுக்க இருட்டிலேயே நடக்கின்ற வாறே கைதி படத்தை இயக்கியிருந்தார். கைதி இப்பொழுது ஹிந்தியில் அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகி வருகிறது

    விஜய் ஸ்டைலில் பாதி

    விஜய் ஸ்டைலில் பாதி

    விஜய்,விஜய்சேதுபதி முதல்முறையாக இணைந்து நடித்த திரைப்படம் மாஸ்டர். விஜயின் கெரியரிலேயே மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. வழக்கமான லோகேஷ் திரைப்படங்கள் போல் இல்லாமல் விஜய் ஸ்டைலில் பாதியும் லோகேஷ் l ஸ்டைலில் பாதியும் இப்படம் உருவாகியிருந்தது

    பகத் பாசில் கேரக்டருக்கு ரீப்ளேஸ்மெண்ட்டே கிடையாது

    பகத் பாசில் கேரக்டருக்கு ரீப்ளேஸ்மெண்ட்டே கிடையாது

    இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் நீண்டகால கனவான கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு விக்ரம் படத்தில் அமைந்தது விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று உலக அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் உருவாகியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் பகத் பாசில் விஜய் சேதுபதி நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள சினிமாவில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் வியக்க வைத்து வந்த பகத் பாசில் இப்போது தமிழ் சினிமாவிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். விக்ரம் படத்திலும் பகத் பாசில் நடிப்pu அபாரமாக இருந்த நிலையில் இந்த படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி உள்ள இயக்குனர் ரத்னகுமார் விக்ரம் படத்தில் பகத் பாசிலின் கதாபாத்திரத்திற்கு மட்டும் ரீப்ளேஸ்மெண்ட்டே கிடையாது அவரைத் தவிர அந்த கதாபாத்திரத்திற்கு வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

    English summary
    There is no replacement for Fahad Faazil Says Director Rathnakumar
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X