47 ஆண்டு சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்தை மிரள வைத்த இரண்டு வில்லன்கள்..அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்?
சென்னை: வரும் ஆகஸ்ட் 15 வந்தால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைத் துறைக்கு வந்து 47 ஆண்டுகள் நிறைவு பெரும். இன்னுமும் ஓய்வில்லாமல் அவர் உழைத்துக் கொண்டிருப்பது பிரம்மிக்க வைக்கிறது.
ரஜினியின் மேடை பேச்சுக்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் ஒரு பொது நிகச்சியில் பேசும்பொழுது, தனக்கு வில்லன்களாக நடித்தவர்கள் பற்றி அவர் பேசி இருப்பது இப்போது வைரலாகியுள்ளது.
கிட்டத்தட்ட 125 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள ரஜினிகாந்த், தனக்கு வில்லனாக நடித்தவர்களில் இரண்டே இரண்டு நபர்கள்தான் தனக்கு சிறப்பான வில்லன்களாக கலக்கியதாக கூறியுள்ளார்.

பாட்ஷா ரகுவரன்
ரஜினியின் திரை வாழ்க்கையில் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத மைல்கல் திரைப்படம் என்றால் அது பாட்ஷாதான். எத்தனையோ ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும், பட்ஷாவிற்கு என்று தனி மரியாதை உண்டு. பாட்ஷா என்றால் எப்படி ரஜினி நினைவிற்கு வருவாரோ, அதே போலத்தான் மார்க் ஆண்டனியாக நடித்த ரகுவரனும் வருவார். சிவாஜி படத்தில் டாக்டர் ரோலிற்கு யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சு வார்த்தை நடக்கும்பொழுது, ரகுவரனுடன் நடித்து நீண்ட நாட்கள் ஆகிறது. அவரை ஒப்பந்தம் செய்யலாம் என்று ரஜினி கூறியுள்ளார். கிட்டத்தட்ட ரகுவரனின் கடைசி படங்களில் அதுவும் ஒன்று.

படையப்பா ரம்யா கிருஷ்ணன்
வில்லன் கதாப்பாத்திரத்திற்காகவே பேசப்பட்ட ரஜினி படங்களில் படையப்பாவும் ஒன்று. நீலாம்பரி ரோலில் ரம்யா கிருஷ்ணன் மிரட்டி இருப்பார். முதலில் மீனாதான் அதில் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் பாட்டாளி படத்தின் தெலுங்கு ரீமேக்கை KS ரவிக்குமார் எடுக்கும்பொழுது, தமிழில் சிம்ரன் செய்த வில்லத்தனமான காட்சிகள் மீனாவிற்கு செட் ஆகவில்லையாம். நன்றாக நடித்தாலும், மீனாவின் முகத்தில் ஒரு இன்னொசன்ஸ் இருந்ததாகவும், அதனால்தான் ரம்யா தேர்வானார் என்றும் ரவிக்குமார் கூறியுள்ளார். நீலாம்பரி கதாப்பாத்திரம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிரதிபலிப்பு என்று ஒரு செய்தி உண்டு.

நானே வில்லன் டா…
இவ்வாறு தனது சினிமா வாழ்க்கையில் ரகுவரன் மற்றும் ரம்யா கிருஷ்ணன்தான் சிறந்த வில்லன்கள் என்று கூறியுள்ள ரஜினியே ஒரு சிறந்த வில்லன் நடிகர் என்பதை யாராலும் மறந்து விட முடியாது. பரட்டை முதல் எந்திரன் 2.O வரை வில்லனாக மிரட்டியிருப்பார்.

ரஜினி #169
இப்போது நெல்சன் திரைப்படத்தில் ஜெய்லர் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இந்தப் படத்திற்காக KS ரவிக்குமார் அவர்களும் திரைக்கதை எழுதுகிறார். கமலின் விக்ரம் படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளதால், பல ஆண்டுகளாக ஜென்யூன் ஹிட் இல்லாமல் இருக்கும் ரஜினிக்கு ஜெய்லர் படம் ஜெய்த்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடி உண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











