twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேவர் படத்துக்கு சிக்கல்! முன்னாள் சபாநாயகர் காளித்துவின் மகன் வேங்கை மார்பன் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகவுள்ளதாகஅறிவிக்கப்பட்ட பசும்பொன் தேவர் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.முக்குலத்தோர் சமூகத்தினரால் கடவுளாக மதிக்கப்படும் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்வாழ்க்கை வரலாற்றை பசும்பொன் தேவர் என்ற பெயரில் படமாக்கப்படுவதாகவும்,காளிமுத்துவின் வசனத்தில், இளையராஜா இசையில், காளிமுத்துவின் மகன் வேங்கை மார்பன் தேவர் வேடத்தில்நடித்து, இயக்கவுள்ளதாகவும் பட அதிபர் ஏ.எல்.எஸ். கண்ணப்பன் அறிவித்தார்.இந் நிலையில் வேங்கை மார்பனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், தான் தயாரிக்கவுள்ளபசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிகே.வி.குணசேகரன் என்ற தயாரிப்பாளர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.அதில் ஜி மூவிஸ் என்ற பெயரில் நான் படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். அருவா வேலு உள்பட60க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளேன்.பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் என்ற பெயரில் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளேன்.இப்பெயரை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும் பதிவு செய்துள்ளேன். கடந்த மாதம் 18ம் தேதி இதுமுறைப்படி பதிவாகியுள்ளது.படப்பிடிப்பு வருகிற 30ம் தேதி தொடங்கும் எனவும் அறிவித்து பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டேன். இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளதாகவும்,இதற்காக அரசிடம் மானியம் கோர முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் வேங்கை மார்பன், பட அதிபர்கண்ணப்பன் ஆகியோர் முயற்சித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பால் எனது திரையுலக வாழ்க்கையே அழிந்து விடும். மேலும் எனது படத்தின் படப்பிடிப்பை 30ம்தேதி தொடங்கினால், எனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன். அப்படி ஏதாவதுஏற்பட்டால் அதற்கு வேங்கை மார்பனும், கண்ணப்பனும்தான் முழுப் பொறுப்பாவர்.எனவே பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் படப்பிடிப்பின்போது 30ம் தேதியிலிருந்து எனக்கும், படக்குழுவினருக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என கோரியுள்ளார். இதேபோல டிஜிபிக்கும் மனு அனுப்பியுள்ளார்.தேவர் கதை படமாகிறது!

    By Staff
    |
    முன்னாள் சபாநாயகர் காளித்துவின் மகன் வேங்கை மார்பன் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகவுள்ளதாகஅறிவிக்கப்பட்ட பசும்பொன் தேவர் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

    முக்குலத்தோர் சமூகத்தினரால் கடவுளாக மதிக்கப்படும் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்வாழ்க்கை வரலாற்றை பசும்பொன் தேவர் என்ற பெயரில் படமாக்கப்படுவதாகவும்,

    காளிமுத்துவின் வசனத்தில், இளையராஜா இசையில், காளிமுத்துவின் மகன் வேங்கை மார்பன் தேவர் வேடத்தில்நடித்து, இயக்கவுள்ளதாகவும் பட அதிபர் ஏ.எல்.எஸ். கண்ணப்பன் அறிவித்தார்.

    இந் நிலையில் வேங்கை மார்பனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், தான் தயாரிக்கவுள்ளபசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிகே.வி.குணசேகரன் என்ற தயாரிப்பாளர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

    அதில் ஜி மூவிஸ் என்ற பெயரில் நான் படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். அருவா வேலு உள்பட60க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளேன்.பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் என்ற பெயரில் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளேன்.

    இப்பெயரை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும் பதிவு செய்துள்ளேன். கடந்த மாதம் 18ம் தேதி இதுமுறைப்படி பதிவாகியுள்ளது.

    படப்பிடிப்பு வருகிற 30ம் தேதி தொடங்கும் எனவும் அறிவித்து பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டேன். இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளதாகவும்,இதற்காக அரசிடம் மானியம் கோர முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் வேங்கை மார்பன், பட அதிபர்கண்ணப்பன் ஆகியோர் முயற்சித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

    இந்த அறிவிப்பால் எனது திரையுலக வாழ்க்கையே அழிந்து விடும். மேலும் எனது படத்தின் படப்பிடிப்பை 30ம்தேதி தொடங்கினால், எனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன். அப்படி ஏதாவதுஏற்பட்டால் அதற்கு வேங்கை மார்பனும், கண்ணப்பனும்தான் முழுப் பொறுப்பாவர்.

    எனவே பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் படப்பிடிப்பின்போது 30ம் தேதியிலிருந்து எனக்கும், படக்குழுவினருக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என கோரியுள்ளார். இதேபோல டிஜிபிக்கும் மனு அனுப்பியுள்ளார்.

    தேவர் கதை படமாகிறது!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X