twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேவர் கதை படமாகிறது! பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. முன்னாள்சபாநாயகர் காளிமுத்துவின் மகன், தேவர் வேடத்தில் நடிக்கிறார். படத்துக்குவசனத்தை காளிமுத்து எழுதுகிறார்.மகாகவி பாரதியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள்சில ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படமாக உருவாகின. தற்போது தந்தை பெரியாரின்வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. சத்யராஜ் பெரியார் வேடத்தில்நடிக்கிறார்.இந்த வரிசையில், மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், தென் தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்வாழ்க்கை வரலாறும் திரைப்படமாகிறது.பசும்பொன் தேவர் என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. தேவர் வேடத்தில்நடிப்பவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் வேங்கை மார்பன்.படத்தையும் அவரே இயக்குகிறார்.வேங்கை மார்பன், லண்டனில் திரைப்பட இயக்கம் குறித்த படிப்பை முடித்தவர்.இயக்குனர் மகேந்திரனிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். தற்போது தான்சார்ந்த சமூகமான முக்குலத்தோர் சமூகத்தினர் தெய்வமாக கருதும் பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை படமாக்க உள்ளார்.படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். படத்தின் வசனத்தைகாளிமுத்துவும், பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் இணைந்து எழுதவுள்ளனர்.ஏ.எல்.எஸ். புரடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனம்சக்கவர்த்தி திருமகள், அம்பிகாபதி, சிவகங்கை சீமை, கந்தன் கருணை உள்ளிட்ட பலபடங்களைத் தயாரித்துள்ள பழம் பெரும் நிறுவனமாகும்.கிட்டத்தட்ட 19 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்புக்குத் திரும்புகிறதுஏ.எல்.எஸ். புரடக்ஷன்ஸ் நிறுவனம்.இப்படத்தில் மனோரமா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதேபோல, நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் வேடத்தில் நடிக்க நடிகர் சரத்குமாரை அணுகியுள்ளனர். இவர்கள் தவிரதேவரின் தந்தை உக்கிரபாண்டிய தேவராக நாசர் நடிக்கிறார். மேலும் மணிவண்ணன்,செந்தில், எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி, சங்கிலி முருகன் உள்ளிட்டோரும்நடிக்கவுள்ளனர்.இப்படம் கற்பனை கலக்காமல், தேவரின் வாழ்க்கையில் நடந்த அரசியல், ஆன்மீகநிகழ்வுகளை மட்டும் அலசும் படமாக அமையுமாம்.தேவர் திருமணமே செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர். ஆனால், அவர்மீது ஒரு பெண் ஒரு தலைக் காதல் கொண்டிருந்தாராம். அந்தப் பெண்ணைப் பற்றியகதையும் இப்படத்தில் சித்தரிக்கப்படவுள்ளது. இந்த வேடத்தில் நடிப்பதற்காக மீராஜாஸ்மின், நயனதாரா, ஆசின் ஆகியோரை அணுகியுள்ளனராம். அனேகமாக மீராஜாஸ்மின் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.வருகிற 20ம் தேதி படப்பிடிப்பு மதுரையில் தொடங்குகிறது. தொடர்ந்து 7மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் வேங்கைமார்பன்.பெரும் பொருட் செலவில் இப்படத்தைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். பெரியார்படத்திற்கு அரசு நதியுதவி வழங்கியதைப் போல தேவர் படத்திற்கும் அரசின்உதவியைப் பெற திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ். கண்ணப்பன்தெரிவித்துள்ளார்.

    By Staff
    |
    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. முன்னாள்சபாநாயகர் காளிமுத்துவின் மகன், தேவர் வேடத்தில் நடிக்கிறார். படத்துக்குவசனத்தை காளிமுத்து எழுதுகிறார்.

    மகாகவி பாரதியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள்சில ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படமாக உருவாகின. தற்போது தந்தை பெரியாரின்வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. சத்யராஜ் பெரியார் வேடத்தில்நடிக்கிறார்.

    இந்த வரிசையில், மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், தென் தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்வாழ்க்கை வரலாறும் திரைப்படமாகிறது.

    பசும்பொன் தேவர் என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. தேவர் வேடத்தில்நடிப்பவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் வேங்கை மார்பன்.படத்தையும் அவரே இயக்குகிறார்.

    வேங்கை மார்பன், லண்டனில் திரைப்பட இயக்கம் குறித்த படிப்பை முடித்தவர்.இயக்குனர் மகேந்திரனிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். தற்போது தான்சார்ந்த சமூகமான முக்குலத்தோர் சமூகத்தினர் தெய்வமாக கருதும் பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை படமாக்க உள்ளார்.

    படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். படத்தின் வசனத்தைகாளிமுத்துவும், பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் இணைந்து எழுதவுள்ளனர்.

    ஏ.எல்.எஸ். புரடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனம்சக்கவர்த்தி திருமகள், அம்பிகாபதி, சிவகங்கை சீமை, கந்தன் கருணை உள்ளிட்ட பலபடங்களைத் தயாரித்துள்ள பழம் பெரும் நிறுவனமாகும்.

    கிட்டத்தட்ட 19 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்புக்குத் திரும்புகிறதுஏ.எல்.எஸ். புரடக்ஷன்ஸ் நிறுவனம்.

    இப்படத்தில் மனோரமா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதேபோல, நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் வேடத்தில் நடிக்க நடிகர் சரத்குமாரை அணுகியுள்ளனர். இவர்கள் தவிரதேவரின் தந்தை உக்கிரபாண்டிய தேவராக நாசர் நடிக்கிறார். மேலும் மணிவண்ணன்,செந்தில், எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி, சங்கிலி முருகன் உள்ளிட்டோரும்நடிக்கவுள்ளனர்.

    இப்படம் கற்பனை கலக்காமல், தேவரின் வாழ்க்கையில் நடந்த அரசியல், ஆன்மீகநிகழ்வுகளை மட்டும் அலசும் படமாக அமையுமாம்.

    தேவர் திருமணமே செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர். ஆனால், அவர்மீது ஒரு பெண் ஒரு தலைக் காதல் கொண்டிருந்தாராம். அந்தப் பெண்ணைப் பற்றியகதையும் இப்படத்தில் சித்தரிக்கப்படவுள்ளது. இந்த வேடத்தில் நடிப்பதற்காக மீராஜாஸ்மின், நயனதாரா, ஆசின் ஆகியோரை அணுகியுள்ளனராம். அனேகமாக மீராஜாஸ்மின் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

    வருகிற 20ம் தேதி படப்பிடிப்பு மதுரையில் தொடங்குகிறது. தொடர்ந்து 7மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் வேங்கைமார்பன்.

    பெரும் பொருட் செலவில் இப்படத்தைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். பெரியார்படத்திற்கு அரசு நதியுதவி வழங்கியதைப் போல தேவர் படத்திற்கும் அரசின்உதவியைப் பெற திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ். கண்ணப்பன்தெரிவித்துள்ளார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X