சன்னி லியோன் படத்தை காட்டி, இவருடன் தான் பேய் படத்தில் நடிக்க போகிறீர்கள் என்றார்கள்... ஜி.பி.முத்து

சென்னை: வடகறி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சன்னி லியோன்.

தற்சமயம் ஓ மை கோஸ்ட், வீரமாதேவி, ஷீரோ போன்ற தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

ஓ மை கோஸ்ட்

ஓ மை கோஸ்ட்

விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற சிந்தனை செய் என்கிற படத்தை இயக்கியிருந்த யுவன் தற்சமயம் இயக்கியுள்ள திரைப்படம்தான் ஓ மை கோஸ்ட். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, சன்னி லியோன், தர்ஷா குப்தா மற்றும் ஜி.பி.முத்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

சன்னி லியோனை வேறு ஒரு தளத்தில் பெரும்பாலான மக்களுக்கு தெரியும் என்றாலும் இந்தியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு மேலும் பிராபலமானார். திரை உலகை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி என்று இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் கதாநாயகியாகவும் சிறப்பு தோற்றத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் பிசியான நடிகையாகிவிட்டார். ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் ராணி வேடத்தில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் ஜி.பி.முத்து

பிக் பாஸ் ஜி.பி.முத்து

பிக் பாஸ் சீசன் 6 தமிழ்ப் போட்டியாளர்களில் முக்கிய நபராக கருதப்பட்டவர் ஜி.பி.முத்து. லட்சக் கணக்கான மக்களின் விருப்பமான போட்டியாளராக அவர் விளங்கினார். ஆனால் தன் மகனை பிரிந்து இருக்க முடியாத சூழ்நிலையில் தானாகவே விருப்பப்பட்டு அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார். அதன் பின் எந்த ஊடகத்திற்கும் பேட்டியளிக்காத முத்து, நேற்று நடைபெற்ற ஓ மை கோஸ்ட் டிரைலர் விழாவில் கலந்து கொண்டார்.

சன்னி லியோன் படம்

சன்னி லியோன் படம்

முதலில் இந்தப் படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் அணுகியபோது முத்து பயந்தாராம். அப்போது, நீங்கள் பயப்பட வேண்டாம் நாங்கள் உங்களை பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் நடித்தால் மட்டும் போதும் என்று அழைத்து வந்தார்களாம். சன்னி லியோன் படத்தில் தான் நீங்கள் நடிக்கப் போகிறீர்கள் என்று கூறியபோது தன் உடன் இருந்த்அ ஒரு நபர் சன்னி லியோன் படத்தை காட்டினார்கள். அதன் பிறகுதான் அவருடன் நடித்தேன் என்று ஜி.பி.முத்து எதார்த்தமாக கூற அரங்கமே சிரித்துவிட்டது. பிறகு படம் என்றால் புகைப்படம் என்று விளக்கம் அளித்தார் ஜி.பி.முத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X