40 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் அண்ணன் படத்தில்தான் நடந்தது... இசையமைப்பாளர் D இம்மானின் சுவாரஸ்ய தகவல்

சென்னை: இப்போதுள்ள இசையமைப்பாளர்களில் ஆல்பமாக ஹிட் கொடுப்பது ஒரு சிலரே. அந்த வரிசையில் இசையமைப்பாளர் D இம்மான் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு

மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்று அவரது பல படங்களில் அனைத்து பாடல்களுமே ஹிட் ஆனவை

நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய் என்று முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள இம்மான், நடிகர் சிவ கார்த்திகேயனின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர். கிராமப்புற பட்டி தொட்டியெல்லாம் சிவாவை கொண்டு சேர்த்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் பாடல்கள்தான்.

 வெளியாகவுள்ள படங்கள்

வெளியாகவுள்ள படங்கள்

அவரது இசையில் கடைசியாக வந்தப் படங்கள் எதற்கும் துணிந்தவன் மற்றும் யுத்த சத்தம். அடுத்ததாக கேப்டன், மலை, காரி, பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம், பப்ளிக் மற்றும் வள்ளி மயில் ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அனைத்துமே முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பணிபுரியும் படங்கள்.

 அறிமுகம்

அறிமுகம்

தனது 14 வயதிலேயே விளம்பரப் படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கிய இம்மான், 17 வயதில் காதலே சுவாசம் என்கிற படத்திற்கு இசையமைத்துவிட்டார். அதே போல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். குட்டி பத்மினி இயக்கிய காதலே சுவாசம் திரைப்படம் வெளிவரவே இல்லை. ஆனால் அந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளரும், இயக்குநர் மணிரத்தினத்தின் அண்ணனுமான G வெங்கடேஸ்வரன், இம்மானின் திறமையை அறிந்து தமிழன் படத்தில் வாய்ப்பளித்தார்.

 விஜய்க்கு பிடித்த சீரியல் பாடல்

விஜய்க்கு பிடித்த சீரியல் பாடல்

தமிழன் படத்திற்கு முன்னதாகவே தான் இசையமைத்திருந்த கிருஷ்ணதாசி சீரியலின் டைட்டில் கார்டில் இடம்பெரும் "சிகரம் பார்த்தாய் சிறகுகள் எங்கே" பாடல் நடிகர் விஜய்க்கு மிகவும் பிடிக்கும் என்று இம்மான் கூறியுள்ளார். 19 வயதில் இசையமைத்த தமிழன் பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக இம்மான் அவர்களே பாடிய "மாட்டு மாட்டு" பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

 விஜய் - பிரியங்கா சோப்ரா

விஜய் - பிரியங்கா சோப்ரா

அந்தப் படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலை பாடப் போவது ஏற்கனவே முடிவாகி இருந்தது. அப்படி இருக்கும்போது அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ஹாட் பார்ட்டி என்ற பாடலை படமாக்கும்பொழுது பிரியங்கா சோப்ரா ஹம் செய்து கொண்டே இருந்தாராம். அதனை கவனித்த விஜய் இம்மானிடம் சொல்ல, ஹீரோ ஹீரோயினை சேர்த்து பாட வைக்கலாம். படத்தின் புரமோஷனுக்கு அது உதவும் என்று முடிவெடுத்தார்களாம். கிட்டத்தட்ட அதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான் நடிகர்களே பாடி நடித்த சம்பவங்கள் நடந்துள்ளதாம். தமிழன் படம் மூலம் மீண்டும் அது நடந்தது என இம்மான் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X