இது தான் என் பிரச்சனை.. ஹேர் ஸ்டைல் குறித்து சீக்ரெட் உடைத்த ரஜினிகாந்த்!

சென்னை : 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரஜினிகாந்த்.

70களில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய ரஜினிகாந்த் இன்று வரை ஹீரோவாக மிரட்டி வருகிறார். கிட்டத்தட்ட மூன்று நான்கு தலைமுறையினரை ரசிகர்களாக கொண்டுள்ளார்.

தான் செய்த தவறை பற்றியும், தனது ஹேர்ஸ்டைல் குறித்த இவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

தனி ஸ்டைல் தான்

தனி ஸ்டைல் தான்

1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்தவர் ரஜினிகாந்த். 16 வயதிலேயே, ஆறு புஷ்பங்கள், 6 முதல் 60 வரை போன்ற படங்களின் மூலம் பல ரசிகர்கள் மனதை வென்றவர். 70களில் தொடங்கி இன்று வரை தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். ஸ்ரீ ராகவேந்திரர், மிஸ்டர் பாரத், படிக்காதவன், வேலைக்காரன், ஊர் காவலன், ராஜாதி ராஜா என்று இவர் ஹிட் லிஸ்டில் இருக்கும் திரைப்படங்கள் வேற லெவல் தான்.

தனி ரகம் தான்

தனி ரகம் தான்

ரஜினிகாந்தின் நடிப்புக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும் சமயத்தில், இவரது ஸ்டைலுகென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிகரெட்டை தூக்கி போட்டு வாயில் பிடிப்பது, தலையை கோதுவது, துப்பாக்கியை சுழட்டுவது, என்று இவரது ஸ்டைலுக்கு சிறிய குழந்தைகளும் அடிமை தான். ஹீரோவாக இவர் நடிக்க துவங்க காலத்தில் இருந்து இன்று வரை அவரது ஸ்டைல் கொஞ்சமும் குறையவில்லை, தற்போது நிஜத்தில் வழுக்கை தலையாக இருக்கும் ரஜினிகாந்த், படத்தில் அவருக்கு ஏற்றவாறு விக்குகளை பயன்படுத்துகிறார்.

கொட்டிப்போன முடி

கொட்டிப்போன முடி

ஸ்டைலு ஸ்டைலு தான் சூப்பர் ஸ்டைலு தான் என்றும், வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்களை விட்டு போகல என்ற வசனங்களும் பாடல்களும் மிகவும் பிரபலமானவை மட்டும் இல்லை இவருக்காகவே எழுதப்பட்டவை. ரஜினி என்று சொன்னாலே ஸ்டைல் என்று சொல்லும் அளவிற்கு தனித்துவமான ஸ்டைலை ரசிகர்கள் மனதில் பதிய வைத்துள்ளார். பல நடிகர்கள் பேச தயங்கும் ஒரு விஷயத்தை நடிகர் ரஜினிகாந்த் ஓபன் ஆக பேசி உள்ளார், தனக்கு எப்படி முடி கொட்டியது என்பதையும், தான் செய்த தவறையும் ரசிகர்களுக்கு கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

டை தான் பிரச்சனை

டை தான் பிரச்சனை

இது குறித்து அவர் கூறுகையில் , "18, 19 வயதிலேயே வெள்ளை முடி வந்ததாகவும், அதனை மறைப்பதற்கு வித விதமான டைகளை பயன்படுத்தியதாலும், தனக்கு முடி கொட்டியதாக கூறியுள்ளார். இந்த பிராண்ட் போட்டால் முடி கொட்டுகிறது என்று வேற பிராண்ட் ஹேர் டை பயன்படுத்த, மாற்றி மாற்றி பயன்படுத்தி தனது முடி மொத்தம் கொட்டிய பிறகு தான் தனக்கு டையே ஒத்துக்கவில்லை என்பது தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார் ரஜினிகாந்த். தாடிக்கும் அதே டை தான் பயன்படுத்தினேன். ஆனால் தாடி கொட்டவில்லை. தலை முடி மட்டும் கொட்டியது. தாடி ஏன் கொட்டவில்லை என்ற நான் யோசித்தது இல்லை. அந்த அளவுக்கு சீரியஸ் ஆக நான் யோசிக்கமாட்டேன். தாடி இருந்தால் ஒரு பவர் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்" என்று ஜாலியாக கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X