அடக்கொடுமையே.. எல்லாமே இல்லீகல்.. தக் லைஃப் பட ஜிங்குச்சா பாடகியின் பர்த்டே பார்ட்டியில் கஞ்சா..

ஹைதராபாத்: தெலுங்கில் இருக்கும் பிரபலமான பாடகி மங்லி. இவரது பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. இவர் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு மட்டும் சுமார் 3.3 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளார்கள். இவர் சமீபத்தில் தனது 31 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவரது பிறந்த நாள் பார்ட்டியில் கஞ்சா மற்றும் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது.

பாடகி மங்லியின் இயற்பெயர், சத்யவதி ரத்தோட். இவர் பாடகி மட்டுமல்லாமல் தொகுப்பாளினியாகவும் கலக்கி வருகிறார். இவரது நாட்டுப்புற பாடல்களுக்கு பல முன்னணி நிறுவங்களே தயாரிக்க முன் வரும் அளவுக்கு அவருக்கு தெலுங்கு திரையுலகில் குறிப்பாக இசையுலகில் செல்வாக்கு உள்ளது. இந்நிலையில் நேற்று அதாவது ஜூன் 10ஆம் தேதி தனது 31 வது பிறந்தநாளை பாடகி மங்லொ கொண்டாடியுள்ளார். அவருக்கு அன்றைய நாள் முழுவதும் ரசிகர்கள் இணையத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

நேற்று இரவு, செவல்லாவை அடுத்துள்ள இர்லபள்ளியை அடுத்துள்ள திரிபுரா தனியார் நட்சத்திர ஹோட்டலில் பிறந்த நாள் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கிட்டத்தட்ட 48 பேர் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக இவரது பெற்றோர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரைத்துறையினர் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சா மற்றும் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள், போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

Thug Life Jinguchaa Telugu Version Singer Mangli Ganja and Illegal Drug Party 9 Arrested
Photo Credit:

கஞ்சா மற்றும் வெளிநாட்டு போதைப்பொருள்: இது தொடர்பாக தகவல் தெரிந்து கொண்ட செவெல்லா காவல்துறையினர் திரிபுரா நட்சத்திர விடுதியில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மது பானங்களை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் எடை எவ்வளவு என்பது குறித்தோ, வெளிநாட்டு மதுபானங்கள் குறித்து காவல்துறை அறிவிக்கவில்லை.

9 பேர் கைது: அதே நேரத்தில் பார்ட்டியில் கலந்து கொண்ட 48 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 9 பேர் கஞ்சா பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது. இவர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்த பாடகி மங்லி மீது தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கு திரையுலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Thug Life Jinguchaa Telugu Version Singer Mangli Ganja and Illegal Drug Party 9 Arrested
Photo Credit:

பிரபலங்கள்: அதேபோல் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பட்டியலில், "பிக் பாஸ் புகழ் திவி, பாடலாசிரியர் காசர்லா ஷ்யாம், பாடகி தனுஜயா ஆகியோர் பெயர்களும் உள்ளது. அதே நேரத்தில் நெருங்கிய தகவலின்படி, இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஒரு தயாரிப்பாளர் என்றும் கூறப்படுகிறது. பாடகி மங்லி மீது மட்டும் இல்லாமல் ரிசார்ட் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இவர் தக் லைஃப் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிங்குச்சா பாடலை தெலுங்கில் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X