இதுவரைக்கும் எனக்கு பிடிச்சமாதிரி படம் எடுக்கவே இல்லை..செல்வராகவன் சொன்னதை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை: 2003 ஆம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன்.

தற்போது இவர் ஒரு இயக்குநராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் தன்னை நிரூபித்து உள்ளார்.

தனது திரை பயணத்தை பற்றி இயக்குநர் மற்றும் நடிகருமான செல்வராகவன் கூறி இருக்கும் விஷயங்கள் தற்போது ரசிகர்களை ஷாகில் ஆழ்த்தியுள்ளது.

நிரூபித்த செல்வராகவன்

நிரூபித்த செல்வராகவன்

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன். முதல் படத்திலேயே தன்னை திரையுலகில் நிலை நிறுத்திக் கொண்டார். தனுஷ், சோனியா அகர்வால் நடித்த காதல் கொண்டேன் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் அருமையாக அமைக்கப்பட்டிருக்கும். இப்படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவின் இசை இப்படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதுடன், தனுஷ் மற்றும் சோனியா அகர்வாலின் நடிப்பு வேற லெவலில் ஹிட்டானது. இந்த படத்தின் மூலம் செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா காம்போ மிகவும் பிரபலமானது.

மனதை வருடும் காதல் படங்கள்

மனதை வருடும் காதல் படங்கள்

அதன் பிறகு 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்று பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் செல்வராகவன். ரொமான்டிக் லவ் படங்களாக எடுத்து வந்த செல்வராகவனுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இவர் இயக்கிய வரலாறு சம்மந்தப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வேற லெவலில் பேசப்பட்டது. இந்த படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் போன்ற பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஜி வி பிரகாஷ். இவர் இயக்கும் படங்களில் எதார்த்தமான கதைகளும், அதற்கு ஏற்றவாறு பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது.

பாடலாசிரியராக செல்வராகவன்

பாடலாசிரியராக செல்வராகவன்

இவர் இயக்கிய படங்களில் சில பாடல்களையும் எழுதி உள்ளார் செல்வராகவன். நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமையுடன் தற்போது முன்னணியில் இருக்கிறார் செல்வராகவன். சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு சாணி காகிதம், நானே வருவேன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.சாணிக் காகிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவனின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.

மீண்டும் இணைந்த கூட்டணி

மீண்டும் இணைந்த கூட்டணி

சமீபத்தில் நானே வருவேன் படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன். மயக்கம் என்ன படத்திற்கு பிறகு செல்வராகவன் மற்றும் தனுஷ் ஒன்றாக இணைந்த படம் என்பதால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. நானே வருவேன் திரைப்படத்தில் யோகி பாபு, இந்துஜா ரவிச்சந்திரன் போன்ற பலர் நடித்துள்ளனர். பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல் வரவேற்பை பெற்றிருக்கும் செல்வராகவனிடம், நீங்கள் இயக்கியதில் உங்கள் மனதிற்கு பிடித்த படம் என்ன என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு, செல்வராகவன் சொன்ன பதில் அனைவரையும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.

இனிமேல் தான் எடுப்பேன்

இனிமேல் தான் எடுப்பேன்

அதாவது என் மனதிற்கு பிடித்த படம் இனிமே தான் நான் எடுக்கப் போகிறேன், கண்டிப்பாக அப்படிப்பட்ட படம் வெளிவரும் என்று கூலாக பதில் சொல்லியுள்ளார் செல்வராகவன். நான் இயக்கிய எந்த படமும் எனக்கு மன நிறைவை தரவில்லை, எனக்கு மன நிறைவு தரும் அளவிற்கு கண்டிப்பாக நான் ஒரு படம் எடுப்பேன் என்று தைரியமாக தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார் செல்வராகவன். இந்த பதில் ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியதுடன், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X