டூயட்டுக்குத் தயாராகும் திருமா

By Staff

முழு நேர நடிகராக அவதாரம் எடுக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன். புதிதாக கலகம் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் திருமாவளவன். இதில் அவருக்கு டூயட் பாட்டெல்லாம் உண்டாம்.

முழு வீச்சில் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, தமிழ் சினிமாவின் போக்கைக் கண்டித்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த, போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த திருமா, நடிகர் ஆவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் திருமா ஒரு நாள் நடிகரானார். அவரை வைத்து அன்புத்தோழி என்ற படம் பஜை போடப்பட்டது. இதில் புரட்சிக்காரராக நடித்துள்ளார் திருமா. பலவித தடைகளுக்குப் பின்னர் படம் முடிந்து சென்சார் போர்டுக்குப் போனது.

ஆனால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கேரக்டராக திருமாவின் பாத்திரம உள்ளது. அதை கட் செய்தால்தான் சான்றிதழ் தர முடியும் என்று சென்சார் போர்டு கூறி விட்டதால் அன்புததோழி ரிலீஸ் ஆக முடியாமல் சிக்கலில் தொக்கி நிற்கிறது.

இதையடுத்து மறு பரிசீலனைக் குழுவில் விண்ணப்பிக்கவுள்ளனர். திருமாவும், முதல்வர் கருணாநிதியை அணுகியுள்ளார். நல்லது விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கையில் அன்புதோழி யூனிட் உள்ளது.

இந்த நிலையில் கலகத்தை ஆரம்பித்துள்ளார் திருமா. இது அந்தக் கலகம் இல்லை, படத்தின் பெயர். பூந்தோட்டம், பூமணி ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குநர் மு.களஞ்சியத்தின் புதிய படம்தான் கலகம். திருமாதான் இதில் நாயகன்.

இப்படத்தில் திருமாவுக்கு டூயட் பாட்டெல்லாம் உண்டாம். எனவே அவருக்குப் பொருத்தமான ஜோடியைத் தேடி வருகிறார்களாம்.

அசத்துங்க தலைவா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X