twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும்..அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்!

    By Sudha
    |

    சென்னை: எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல்தான்... ஆனால் இன்று டி.எம்.எஸ்.ஸுக்கும் இந்தப் பாடல் எவ்வளவு பொருத்தமாக மாறிப் போயிருக்கிறது பாருங்கள்.

    எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரத்தை என்றென்றும் மக்கள் மறக்க முடியாத வண்ணம் அந்தப் பாடல் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது என்றால், இன்று டி.எம்.எஸ். என்ற மூன்றெழுத்தையும் நமக்குள் மறக்க முடியாமல் ஆணி அடித்தாற் போல அடித்து நிறுத்தியிருக்கிறது.

    மறக்க முடியாத டி.எம். செளந்தரராஜனின் அட்டகாசமான பாடல்களில் சிலவற்றின் பட்டியல்...

    ஆறு மனமே ஆறு...

    ஆறு மனமே ஆறு...

    சிவாஜி, நடிப்புப் பட்டை தீட்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. டி.எம்.எஸ்.ஸின் குரலும் சேர்ந்து இந்தப் பாடல் இன்றளவும் மறக்க முடியாத அருமையான பாடல்களில் ஒன்றாக மனங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

    ஆஹா மெல்ல நட மெல்ல நட

    ஆஹா மெல்ல நட மெல்ல நட

    புதிய பறவையில் வந்த இந்தப் பாடலுக்கு தியேட்டர்களில் கிடைத்த அப்ளாஸ் இருக்கிறதே... அப்படி ஒரு கிளாப்ஸ். பாடலும் சரி, நடித்த சிவாஜி, சரோஜாதேவியும் சரி, பாடிய டி.எம்.எஸ்ஸும் சரி பின்னி எடுத்திருப்பார்கள்.

    ஏன் பிறந்தாய் மகனே

    ஏன் பிறந்தாய் மகனே

    விரக்தியின் உச்சத்திற்கேப் போய் விட்ட தந்தையின் உள்ளக் குமுறலை சிவாஜி தனது நடிப்பில் அப்படியே வடித்திருப்பார் இந்தப் படத்தில். டி.எம்.எஸ். தனது குரலில் அதை உருக்கமாக காட்டியிருப்பார்.. அட்டகாசமான பாடல் இது.

    அமைதியான நதியினிலே ஓடம்...

    அமைதியான நதியினிலே ஓடம்...

    அழகான, தென்றல் இந்தப் பாடல். எப்போது கேட்டாலும் மனசு லேசாகும்.. உள்ளம் குழைந்து காதல் ரசம் இழைந்தோடும்.

    மயக்கம் எனது தாயகம்

    மயக்கம் எனது தாயகம்

    கண்ணதாசன் தன்னை நினைத்தே, தன்னைப் பற்றிய எழுதிய பாடல்.. அதை டிஎம்எஸ் கண்ணதாசன் பாவத்தில் பாடியிருப்பதுதான் இந்தப் பாடலின் பெரும்
    சுவாரஸ்யம்..

    நான் பேச நினைப்பதெல்லாம்

    நான் பேச நினைப்பதெல்லாம்

    காதல் பாடல் என்றால் இதுதான்... என்று சொல்லும் அளவுக்கு அழகான பாடல்.. அதிலும் வரியின் முடிவில் வரும் அந்த ம் ம் ம் என்ற ஹம்மிங்குக்கு சிவாஜியும், சரோஜாதேவியும் வாயசைத்திருக்கும் விதம் ...ஆஹா.. அழகு.

    நான் ஆணையிட்டால்

    நான் ஆணையிட்டால்

    எம்.ஜி.ஆர். பக்தர்களின் தேசி கீதம் போல வலம் வந்த பாடல் இது. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடல் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த ஏற்றம் கொடுத்த பாடல். அந்தப் பாடலை டி.எம்.எஸ்ஸின் குரல் அப்படியே எம்.ஜி.ஆரை. நினைவுபடுத்துவது மிகுந்த ஆச்சரியம்.

    நதி எங்கே போகிறது

    நதி எங்கே போகிறது

    நதி எங்கே போகிறது கடலைத் தேடி..
    நாளெங்கே போகிறது இரவைத் தேடி..
    நிலவெங்கே போகிறது மலரைத் தேடி..
    நினைவெங்கே போகிறது உறவைத் தேடி....

    கண்ணை மூடிக்கிட்டு பாட்டை ரசிங்க.. காதல் கண்ணைக் கட்டிக் கொண்டு வருவதை உணர்வீர்கள்.

    ஞாயிறு என்பது பெண்ணாக

    ஞாயிறு என்பது பெண்ணாக

    ஞாயிறு என்பது கண்ணாக
    திங்கள் என்பது பெண்ணாக
    செவ்வாய் கோவைப் பழமாக
    சேர்ந்தே நடந்தது அழகாக.. அருமையான காதல் பாடல்...

    அன்று வந்ததும் அதே நிலா

    அன்று வந்ததும் அதே நிலா

    அழகான நிலாப் பாட்டு. கண்ணதாசனின் காவிய வரிகளில் எம்.ஜி.ஆருக்காக டிஎம்.எஸ். பாடிய இந்தப் பாடல் அவரது சாகாவரம் படைத்த எத்தனையோ பாடல்களில் முக்கியமானதும் கூட.

    அன்பே வா ..

    அன்பே வா ..

    உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா... அன்பே வா படப் பாடல். எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற காதல் பாடல்கள் வரிசையில் இதற்கும் தனி இடம் உண்டு.

    அதோ அந்தப் பறவை போல

    அதோ அந்தப் பறவை போல

    அடிமைப் பெண் படத்தில் வந்த இந்தப் பாடலும் பெரும் புகழ் பெற்ற பாடலாகும். கோழைகளையும், அடிமைகளையும் வீறு கொண்டெழ வைக்கும் நடிப்பை எம்.ஜி.ஆர். கொடுக்க, அதை தனது குரலில் கட்டி இழுத்து கலக்கியவர் டி.எம்.எஸ்.

    தர்மம் தலை காக்கும்

    தர்மம் தலை காக்கும்

    தலை சிறந்த எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்களில் இந்தப் பாடலுக்கு தனி இடம் உண்டு. அதேபோல இந்தப் பாடலைப் பாடிய டிஎம் செளந்தரராஜனின் கம்பீரக் குரலும் உள்ளம் மயக்கும்.

    உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்

    உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்

    நிறையப் பேருக்கு தன்னம்பிக்கை ஊட்டிய பாடல் இது. எப்போது கேட்டாலும் உத்வேகம் பிறக்கும். உள்ளத்தை தட்டிக் கொடுக்கும். அருமையான எம்.ஜிஆர். பாடல்..

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

    உண்மைதான்... எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல, டி.எம்.எஸ். என்ற மூன்றெழுத்துக்கும் சாகாவரம் கொடுத்த பாடல் இது...

    சொல்லச் சொல்ல சொல்லிக் கொண்டே போகலாம் டிஎம்எஸ் பெருமையை...உண்மையில் காலத்தால் மறக்க முடியாத நினைவுகள் டிஎம்எஸ்ஸின் நினைவுகள்..

    English summary
    A small list of the legendary TMS's mesmerizing songs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X