twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் 10 உதவி கமிஷனர்கள் இடமாற்றம்

    By Staff
    |

    Tamilnadu Police
    போதைப்பொருள் தடுப்புப்பிரிவு உதவி ஆணையர் மனோகரன் வட பழனிக்கும், வடபழனி உதவி ஆணையர் விஜயராகவன் தி.நகருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    தி.நகர் உதவி ஆணையர் சைலத்ராஜ் ராயப்பேட்டைக்கும், ராயப்பேட்டை உதவி ஆணையர் ரவீந்திரன் விபச்சார தடுப்புப் பிரிவுக்கும் இடமாற்றமாகியுள்ளனர்.

    விபச்சார தடுப்புப்பிரிவு உதவி ஆணையர் சுகுமாரன் போலீஸ் நலன் மற்றும் நிர்வாகப்பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளனர்.

    ஆவடி உதவி ஆணையர் விஜயகுமார் அண்ணாநகருக்கும், அண்ணாநகர் ஸ்ரீதர்பாபு வேப்பேரிக்கும், வேப்பேரி ராமச்சந்திரன் வில்லிவாக்கத்திற்கும், வில்லிவாக்கம் சந்திரசேகர் ஆவடிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய டி.எஸ்.பி. சவுகத்அலி, அம்பத்தூர் சரக உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

    நெல்லை - 3 போலீசார் அதிரடி மாற்றம்:

    இந் நிலையில் நெல்லையில் ரவுடிகளுக்கு ஆதரவாக காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து பேசிய 3 போலீசார் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

    இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மானூர் பகுதியில் கொலை, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல், வழிப்பறி ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த மதார், பெத்த பெருமாள் கோஷ்டியினர் மீது மானூர் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

    பல கொலைகளை செய்த கூலிப்படையினர் காவல் நிலையத்திலேயே கட்டப்பஞ்சாயத்து நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கூலிபடை தலைவர் மதார் கம்மாளன் குளத்தில் நாட்டாமையாக இருந்தவராம். அவரை மீறி யாராவது நடந்தால் அவர்களை தீர்த்து கட்டவும் தயங்கமாட்டார் என்கிறார்கள். இதனால் அங்குள்ள மக்கள் அவருக்கு அடங்கி நடந்துள்ளனர்.

    மேலும் கம்மாளன்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் சிறு திருட்டு, அடிதடி சம்பவங்களை குறித்து மானூர் போலீசுக்கு புகார் வந்தால் மதார் நேரில் சென்று பேசி முடிப்பாராம். மேலும் போலீஸ் இன்பார்மர் போலவும் செயல்பட்டு வந்துள்ளார்.

    இத் தகவல்களை ரகசியமாகத் திரட்டிய உளவு பிரிவு போலீசாரும் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து உளவு பிரிவு ஏட்டு சுடலை அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.

    அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இமேலும் மானூர் ஏட்டு தனசேகர், தலைமை காவலர் சொக்கலிங்கம், டிரைவர் சந்திரன் ஆகியோரும் இன்று மாற்றப்பட்டனர். தனசேகர் திசையன்விளைக்கும், சொக்கலிங்கம், சந்திரன் ஆகியோரை சிவகிரிக்கும் மாற்றி எஸ்பி உத்தரவிட்டார்.

    இது தவிர மதாருக்கு உடந்தையாக செயல்பட்ட மேலும் சில போலீஸ்காரர்கள் சிக்குவார்கள் என்று பரபரப்பாகக் கூறப்படுகிறது, காக்கிகள் வட்டாரத்தில்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X