பொங்கலுக்கு 5 காட்சிகள் - தமிழக அரசு அனுமதி

இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் விடுத்துள்ள அறிக்கை:
"தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிரந்தர மற்றும் பகுதி நிரந்தர திரையரங்குகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 18, 19, 20 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி, அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோல் வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகள் அரசு விடுமுறையானதால், அன்றைய தேதிகளிலும் அதிகப்படியாக ஒரு காட்சி நடத்திக்கொள்ளலாம்.''
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications