அட அதுக்குள்ள இரண்டு ஆண்டுகள் ஆயிடுச்சா...நேர்கொண்ட பார்வை ரிலீசை கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை : டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து, போனி கபூர் தயாரித்த படம் நேர்கொண்ட பார்வை. அஜித்துடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

நேர் கொண்ட பார்வை படம் 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி ரிலீசானது. இந்த படம் ரிலீசாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. ஜீ மியூசிக் கம்பெனி பேனரில் வெளியிடப்பட்ட இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

நேர்கொண்ட பார்வை கதை

நேர்கொண்ட பார்வை கதை

தனியாக வசித்து வரும் தோழிகளான 3 இளம் பெண்கள், தங்களின் ஆண் நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்லும் போது அவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். இது பற்றி போலீசில் அவர்கள் புகார் அளிக்க சென்று, சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். பணக்கார வீட்டு பிள்ளைகளான ஆண் நண்பர்கள் பண பலத்தால் வழக்கில் இருந்து தப்பிப்பதுடன், 3 இளம் பெண்கள் மீது வீண் பழி சுமத்துகின்றனர்.

வழக்கறிஞராக அஜித்

வழக்கறிஞராக அஜித்

மனைவியின் மறைவால் மனரீதியாக பாதிப்பிற்கு ஆளாகி, தனியாக வசித்து வரும் வழக்கறிஞரான அஜித்திடம் அந்த பெண்கள் உதவி கேட்கிறார்கள். முதலில் மறுக்கும் அஜித், பிறகு அந்த பெண்களுக்காக வாதாடி, அவர்களை காப்பாற்றுவது தான் படத்தின் கதை. வழக்கமான சால்ட் அன்ட் பெப்பர் கெட்அப்பில் அஜித் நடித்திருந்தார்.

நடிப்பால் வெற்றி பெற்ற படம்

நடிப்பால் வெற்றி பெற்ற படம்

அமிதாப் நடித்த பிங்க் படத்தில் சண்டைக் காட்சிகள் ஏதும் இருக்காது. ஆனால் அஜித் ரசிகர்களை கவர்வதற்காக ஒரு சில ஆக்ஷன் காட்சிகள் இந்த படத்தில் அமைக்கப்பட்டிருக்கும். பஞ்ச் டயலாக், அசத்தலான இன்ட்ரோ சாங், குத்தாட்டம் என எதுவும் இல்லாமல், கேரக்டர்களின் நடிப்பை மட்டும் வைத்து வெற்றி பெற்ற படம் தான் நேர்கொண்ட பார்வை.

முதல் முறையாக வழக்கறிஞர் ரோல்

முதல் முறையாக வழக்கறிஞர் ரோல்

பரத் சுப்ரமணியம் என்ற கேரக்டரில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள படம் இது. அஜித் முதல் முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்த படம். இதற்கு முன் சிட்டிசன் படத்தில் சட்டம் படித்த இளைஞர் ரோலில் நடித்திருந்தாலும், கருப்பு கோட் போட்டு வாதாடுவது போன்ற காட்சி இந்த படத்தில் தான் இடம்பெற்றிருக்கும். இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்து தமிழில் அறிமுகமானார் வித்யா பாலன்.

6 மாதங்களில் முடிக்கப்பட்ட படம்

6 மாதங்களில் முடிக்கப்பட்ட படம்

2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த படம் ஆகஸ்ட் மாதம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. வெறும் 6 மாதங்களில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டது. இந்த படத்தில் அஜித்திற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டு, சில சண்டைக்காட்சிகள் சேர்க்கப்பட்டது. தமிழிலும் இந்த படம் ஹிட் ஆனதால் சமீபத்தில் தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

4 சிங்கிள் டிராக் பாடல்

4 சிங்கிள் டிராக் பாடல்

யுவன் சங்கர் ராஜா இசையில் 4 பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றது. இந்த 4 பாடல்களும் சிங்கிள் டிராக்காக வெளியிடப்பட்டன. படத்தின் இசை உரிமத்தையும் ஜீ மியூசிக் கம்பெனியே பெற்றது.

வசூலை குவித்த படம்

வசூலை குவித்த படம்

நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் ஆன முதல் 5 நாட்களிலேயே சென்னையில் மட்டும் ரூ.6.70 கோடியை வசூலித்தது. மொத்தமாக 4 நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ.45 கோடிகளை வசூலித்தது. உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.70 கோடியை வசூலித்தது. 50 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.181.45 கோடியை வசூலித்தது.

மனம் கவர்ந்த கோர்ட் சீன்

மனம் கவர்ந்த கோர்ட் சீன்

தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்க பிறகு செப்டம்பரில் ஓடிடி.,யிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்களிடம் மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் இந்த படம் பெற்றது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் கோர்ட் சீன்கள் பலரின் மனம் கவர்ந்ததாக அமைந்தன.

ரசிகர்களை கவர்ந்த வித்யா பாலன்

ரசிகர்களை கவர்ந்த வித்யா பாலன்

பிளாஷ்பேக்கில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் வித்யாபாலனின் நடிப்பு கைதட்டல் பெற்றது. அஜித் - வித்யாபாலன் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X