»   »  இன்று இளையராஜா ஆயிரம்... திரளும் திரையுலகம்!

இன்று இளையராஜா ஆயிரம்... திரளும் திரையுலகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று சென்னையில் நடக்கும் இளையராஜா ஆயிரம் எனும் நிகழ்ச்சியைக் காண இந்தியத் திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கிறது. இந்திய அளவில் புகழ்பெற்ற பல நட்சத்திரங்கள், கலைஞர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.

சமீபத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை, இளையராஜாவின் 1000-வது படம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் இளையராஜா 1000 என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Today Ilaiyaraaja 1000

நாளை சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான விளம்பரங்களும் இதுதொடர்புடைய இளையராஜாவின் பேட்டிகளும் விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளார்கள். பாலிவுட்டிலிருந்து அமிதாப் பச்சன், தெலுங்கு படவுலகைச் சேர்ந்த சிரஞ்சீவி, மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோர் இதில் பங்கு பெறுவார்கள் எனத் தெரிகிறது.

இதுபற்றி கலைப்புலி தாணு ஒரு பேட்டியில் கூறும்போது, இளையராஜாவைக் கெளரவப்படுத்த இந்த விழாவில் கலந்துகொள்ள திரையுலகினர் ஆர்வமாக உள்ளார்கள். இளையராஜாவைப் பெருமைப்படுத்தும் இந்த நிகழ்ச்சியை முன்நின்று நடத்தும் விஜய் டிவிக்கு வாழ்த்துகள் என்று கூறினார்.

தமிழ் திரையுலகிலிருந்து ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோரும் பங்கு பெறவுள்ளனர்.

English summary
Ilaiyaraaja 100, a musical tribute to Maestro Ilaiyaraaja will be happening today at Chennai YMCA Ground and the whole film industry is eager to watch the concert.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil