சாக்லேட் டே இருக்கட்டும்.. தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய்ஸ் யார் தெரியுமா?.. இதோ லிஸ்ட்

சென்னை: உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படவிருக்கிறது. அந்த நாளுக்காக காதலர்கள் ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். எத்தனையோ காதல்கள் அன்றைய தினம் திருமணத்தில் முடியலாம்; சில ஒரு தலை காதல்கள் வெற்றி பெறலாம். இப்படிப்பட்ட சூழலில் இன்று சாக்லேட் டே கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவின் தற்போதைய சாக்லேட் பாய்ஸ் யார் என்பதை இதில் பார்க்கலாம்.

பிப்ரவரி மாதம் என்றாலே ஸ்பெஷல்தான். அந்த மாதத்தில்தான் காதலர் தினம் வருவதால் உலகம் முழுவதும் பிப்ரவரி மாதத்துக்கு டிமாண்ட் இருக்கிறது. காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதிக்கு முந்தைய வாரத்தை காதலர் வாரம் என்று சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினம் என்று கொண்டாடுவார்கள். அந்தவகையில் காதலர் வாரத்தின் மூன்றாவது நாளை சாக்லேட் டே என்று சொல்வார்கள். அன்றைய நாள் காதலர்கள் தங்களுக்குள் சாக்லேட் போன்ற இனிப்பு வகைகளை பரிமாறி அன்பை வெளிப்படுத்துவார்கள். இன்று அந்த சாக்லேட் டே கொண்டாடப்படுகிறது.

valentines day tamil cinema

சாக்லேட் பாய்ஸ்: சாக்லேட் டே இன்று கொண்டாடப்படும் சூழலில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய்ஸ் குறித்து பார்க்கலாம். கோலிவுட்டை பொறுத்தவரை ஜெமினி கணேசன், கமல் ஹாசன், அரவிந்த் சாமி, மாதவன் ஆகியோர்தான் சாக்லேட் பாய்ஸ் என்று சொன்னாலே உடனடியாக நியாபகத்துக்கு வருவார்கள். இந்த நான்கு பேரில் ஒருவர் உயிரோடு இல்லை; மற்ற மூன்று பேரும் சாக்லேட் பாய் என்ற இமேஜிலிருந்து வயதின் காரணமாக விலகிவிட்டார்கள். சூழல் இப்படி இருக்க அவர்களுக்கு அடுத்த தலைமுறையில் இருக்கும் டாப் 5 சாக்லேட் பாய்ஸ் லிஸ்ட் இதோ.

ஆர்யா: நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ஹீரோவாக நிலைத்திருக்கிறார். அவரை சாக்லேட் பாய் என்றுதான் பலரும் அழைப்பார்கள். உள்ளம் கேட்குமே, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, சர்வம் போன்ற படங்கள் அவருக்கு அந்த இமேஜை பெற்றுக்கொடுத்தன. அதேசமயம் காலம் செல்ல செல்ல அவர் அந்த இமேஜை உடைத்து ஆக்‌ஷன் ஹீரோ என்ற இமேஜுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வந்துவிட்டார். இருந்தாலும் தற்போதைய தலைமுறை நடிகர்களில் மூத்த சாக்லேட் பாய் என்றால் அது ஆர்யாதான். அவர் நடிகை சாயிஷாவை திருமணம் செய்திருக்கிறார்.

சித்தார்த்: ஆர்யா போலவே சித்தார்த்தும் ஒரு சாக்லேட் பாய் இமேஜ் உள்ளவர்தான். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக தனது திரை பயணத்தை ஆரம்பித்த அவர் பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமானார்.அந்தப் படத்திலிருந்தே அவர் சாக்லேட் பாய் சித்தார்த் என்ற இமேஜுக்குள் வந்துவிட்டார். தொடர்ந்து பல படங்களில் க்யூட் ரோல்களில் நடித்து ரசிகைகள் மத்தியில் அந்த இமேஜை தக்க வைத்திருந்தார். அவர் இப்போது நடிகை அதிதி ராவை காதலித்து திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். இவருக்கும், ஆர்யாவுக்கும் கொஞ்சம் வயதாகிவிட்டாலும் இந்த சாக்லேட் பாய் இமேஜ் இவர்களை விட்டு போகாது என்பதுதான் எதார்த்தம்.

ஹரிஷ் கல்யாண்: இளம் நடிகர்களில் சாக்லேட் பாய் என்றால் உடனே நியாபகத்துக்கு வருவது ஹரிஷ் கல்யாண்தான். சிந்து சமவெளி படத்தில் நடித்து அறிமுகமான அவர் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. கலந்துகட்டி நடிக்கும் ஹரிஷை ரசிகைகள் தங்களது கனவு கண்ணனாகவே ஏற்றிருக்கிறார்கள். அடுத்ததாக நூறு கோடி வானவில், டீசல் ஆகிய படங்களில் நடித்துவருகிறார் சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாண்.

கவின்: ஹரிஷ் கல்யாணுக்கு அடுத்ததாக இருப்பவர் கவின். சின்னத்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கி பிக்பாஸுக்குள் சென்று ஃபேமஸாகி இப்போது ரைஸிங் ஸ்டாராகவும், ரைஸிங் சாக்லேட் பாயாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார் கவின். அடர்ந்த தாடி, தாடி இல்லாவிட்டாலும் அழகான முகம், க்யூட்டான ஸ்மைல் என சாக்லேட் பாயாக ரசிகைகளை கவரக்கூடிய அனைத்து அம்சங்களையும் பெற்றிருப்பவர் அவர். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ப்ளெடி பெக்கர், ஸ்டார், டாடா ஆகிய மூன்று படங்களில் டாடா படத்தை தவிர்த்து மற்ற இரண்டு படங்கள் தோல்விதான். டாடா படம்தான் கவினை ரசிகைகள் மத்தியில் அதிகம் கொண்டு சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

பிரதீப் ரங்கநாதன்: இந்த லிஸ்ட்டில் கடைசி இடத்தில் இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தை இயக்கி இயக்குநராக இருந்த அவர் லவ் டுடே படத்தை இயக்கி அதில் தானே நடித்து நடிகராகவும் மாறினார். 2கே கிட்ஸை பொறுத்தவரை பிரதீப் ரங்கநாதனுக்கு ஏகப்பட்ட மவுசு இருக்கிறது. அதற்கு காரணம் லவ் டுடே படம்தான். அந்தப் படத்திலிருந்து பிரதீப் ரங்கநாதனும் சாக்லேட் பாய் என்ற இமேஜுக்குள் வந்துவிட்டார். அடுத்ததாக அவரது நடிப்பில் டிராகன், LIK ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. தொடர்ந்து காதல் சப்ஜெக்ட்டை தேர்ந்தெடுத்து அவர் நடிப்பதால் கண்டிப்பாக இன்னும் சில வருடங்களுக்கு சாக்லேட் பாய் இமேஜோடு அவர் வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X