Don't Miss!
- News
ரயில்வேக்கு மொத்தமாக அள்ளிக் கொடுத்த நிர்மலா.. 2013-14 பட்ஜெட்டை விட 9 மடங்கு அதிக ஒதுக்கீடு
- Finance
பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களுக்கு ரூ.79000 கோடி ஒதுக்கீடு.. சாமானியர்கள் ஹேப்பி!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரிலீஸ் டிரெண்டை மாற்றி வேட்டையாடு விளையாடு...15 ஆண்டுகளாக வெளிவராத ரகசியம்
சென்னை : தமிழில் 2006 ல் வெளியான neo - noir எனப்படும் கிரைம் ஆக்ஷன் த்ரில்லர் படம் வேட்டையாடு விளையாடு. டைரக்டர் கவுதம் மேனன் எழுதி, இயக்கிய படம். இந்த படத்தில் கமல், ஜோதிகா, கமலினி முகர்ஜி ஆகியோர் முக்கிய ரோல்களிலும், இவர்களுடன் பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
ஏகப்பட்ட
வாய்ப்புகளை
வளைத்துப்
போடும்
ராஷி
கன்னா;
தனுஷின்
திருச்சிற்றம்பலம்
ஷூட்டிங்கில்
பிசி!
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்திற்காக கமலுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த படம் ரிலீசாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த படம் பிறகு தெலுங்கில் ராகவன் என்ற பெயரிலும், The Smart Hunt என்ற பெயரில் இந்தியிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.

முதல் சாய்ஸ் மோகன்லால்
2006 ம் ஆண்டே இந்த கதையை மலையாளத்தில் எடுக்க நினைத்த கவுதம் மேனன், மோகன்லாலிடம் கதையை கூறி உள்ளார். ஆனால் அந்த படம் முடிவாகவில்லை. அதற்கு பிறகு தான் கமலிடம் இந்த கதையை சொல்லி ஓகே பெற்றுள்ளார். முதலில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் கதையை தான் கமலிடம் கூறி உள்ளார் கவுதம் மேனன். அந்த கதையை 40 நாட்களில் முழுவதுமாக முடிக்கும்படி கமல் சொல்லி உள்ளார்.

கமலை ஈர்த்த காக்க காக்க
ஆனால் கவுதம் மேனன் கதையை தயார் செய்து முடிப்பதற்குள் கமல் வேறு படங்களில் பிஸியாகி விட்டார். அதனால் மற்ற படத்தில் இணைந்து பணியாற்றலாம் என கூறி உள்ளார். அதற்கு பிறகு கவுதம் மேனனின் காக்க காக்க படம் கமலை மிகவும் கவர்ந்து விட்டதால், அதே போல் விசாரணையின் போது போலீஸ் அதிகாரிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்ட இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லி உள்ளார் கமல்.

முதல் சூப்பர் 35 டெக்னிக் படம்
இந்த படத்திற்கு முதலில் தடையற தாக்க, சிப்பாய் போன்ற பல டைட்டில்கள் வைக்கப்பட்டு, மாற்றப்பட்டுள்ளது. ஆனால் பிறகு தடையற தாக்க என்ற பெயரில் கவுதம் மேனன் வேறு படத்தை எடுத்தார். கடைசியாக கவுதம் மேனன் தான் வேட்டையாடு விளையாடு என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முதலில் சூப்பர் 35 தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

தற்கொலைக்கு முயன்ற தயாரிப்பாளர்
2005 ம் ஆண்டு ஆகஸ்டில் சென்னையில் இந்த படம் துவங்கப்பட்டது. ஆனால் படம் துவங்கிய சிறிது நாட்களிலேயே தயாரிப்பாளர் காஜா மொஹிதீன் நிதி நெருக்கடியால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் கமலும் இந்த படத்தில் இருந்து விலக நினைத்தார். ஆனால் கவுதம் மேனன் தான் கமலை சமாதானம் செய்து, படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

சொந்த பணத்தில் படம்
பிறகு படத்தின் தயாரிப்பை ஏற்பதாக முன் வந்து 90 லட்சங்களை முதலீடு செய்ய இருந்த ஆஸ்கார் ரவிச்சந்திரனும் படம் துவங்கிய 15 நாட்களில் படத்தில் இருந்து விலகினார். இதனால் கவுதம் மேனன் தனது சொந்த பணம் 80 லட்சங்களை முதலீடு செய்து மும்பையில் படப்பிடிப்பை நடத்தினார். படத்தின் பெரும்பாலான பகுதிகள் நியூயார்க் நகரிலேயே படமாக்கப்பட்டது. இந்த படத்தின் வேலைகள் தள்ளிக் கொண்டே போனதால் கமல் கோபமடைந்துள்ளார். கமல் மற்ற படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால், கதையில் சில மாற்றங்களை செய்து படத்தை எடுத்து முடித்துள்ளார் கவுதம் மேனன்.

ஒரே நேரத்தில் 2 படங்கள்
இந்த படத்தில் ஜோதிகாவிற்காக நடிகை ரோஹினியும், கமலினி முகர்ஜிக்காக ஆண்டிரியாவும் டப்பிங் பேசி இருந்தனர். வேட்டையாடு விளையாடு படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை செய்து கொண்டே, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தையும் எடுத்து வந்தார் கவுதம் மேனன். காக்க காக்க படத்தின் சாயல் இதில் இருந்து விடக்கூடாது என மிக கவனமாக கதையை தயார் செய்தாராம் கவுதம் மேனன்.

கமலுடன் இணைந்த ஹாரிஸ்
இந்த படத்தின் 5 பாடல்களையும் கவிஞர் தாமரை எழுதி இருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. கமல் படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தது இதுவே முதல் முறையாகும். இந்த படத்தில் காக்க காக்க பாடலையும் ஆண்டிரியா பாடி இருந்தார்.

ரிலீஸ் டிரெண்டை மாற்றி படம்
மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்த இந்த படம் உலகம் முழுவதும் 500 மில்லியனை வசூலித்தது. சென்னையில் மட்டும் 16 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படி அதிக தியேட்டர்களில் சென்னையில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் வேட்டையாடு விளையாடு தான். படம் ரிலீஸ் செய்யப்படும் டிரெண்டையே மாற்றி அமைத்த படமும் இது தான். தமிழக அரசு விருது, திரைப்பட ரசிகர் சங்க விருது, ஃபிலிம்ஃபேர் விருது என பல விருதுகளை இந்த படம் பெற்றது.