Don't Miss!
- News
ஹை-பை தர கூட ஆள் இல்லை! அவமானங்களுக்கு பேட்டால் பதிலடி தந்த ராஜத் படிதார்! யார் இந்த ஆர்சிபி புயல்?
- Automobiles
இந்த இ-ஸ்கூட்டருல போகும்போது லைசென்ஸ் கையில வச்சிருக்கணும்னு அவசியம் இல்ல! போலீஸ் பிடிச்சாலும் பயப்பட வேண்டாம்
- Finance
உக்ரைன் மீதான போர் எதிரொலி: ரஷ்யாவில் இருந்து வெளியேறுகிறதா மார்க்ஸ் & ஸ்பென்ஸர் நிறுவனம்?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Technology
16எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த ஆண்டு இளைஞர்களை தூங்க விடாமல் பண்ண டாப் 10 கனவுக்கன்னிகள்.. இணையத்தை தெறிக்கவிட்ட பிக்ஸ்!
சென்னை: 2021ம் ஆண்டுக்கு பை சொல்லவும் 2022ம் ஆண்டுக்கு ஹாய் சொல்லவும் இன்னும் சில தினங்களே உள்ளன.
சினிமா படங்கள் வருகிறதோ இல்லையோ, ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து ஏகப்பட்ட நடிகைகள் டச்சில் உள்ளனர்.
லாக்டவுன் நேரத்திலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை ஷேர் செய்து இளைஞர்களை தூங்க விடாமல் செய்த டாப் 10 கனவுக்கன்னிகள் யார்? என இங்கே பார்ப்போம்.
விவாகரத்திற்கு பின் நேருக்கு நேர் சந்தித்த சமந்தா – நாக சைதன்யா...அப்புறம் நடந்ததை பாருங்க

லேடி சூப்பர்ஸ்டார்
பல ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை கவர்ந்த கனவுக்கன்னியாக நடிகை நயன்தாரா அசத்தி வருகிறார். இந்த ஆண்டு நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கானின் படத்தில் நடித்து வரும் அப்டேட் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் நயன்தாரா இல்லையென்றாலும் காதலர் விக்னேஷ் சிவன் ஷேர் செய்யும் புகைப்படங்களே இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

செக்ஸி சமந்தா
2021ம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேற லெவல் கிளாமரில் ரசிகர்களை கிறங்கடித்தவர் நடிகை சமந்தா. லூயிஸ் வூட்டன் விளம்பரத்திற்காக சிக்கென இடையழகை காட்டி ஒட்டுமொத்த இணையத்தையும் தெறிக்கவிட்ட சமந்தாவின் ஊ சொல்றியா பாடல் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், லேட்டஸ்ட்டாக நீச்சல் உடையில் இவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தை தீப்பிடிக்க வைத்துள்ளது. 20.5 மில்லியன் ரசிகர்கள் சமந்தாவை ஃபாலோ செய்து வருகின்றனர்.

பூஜா ஹெக்டே
டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என படு பிசியாகி உள்ள மெகா பட்ஜெட் ஹீரோயின் பூஜா ஹெக்டே இந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட அல்ட்ரா கிளாமர் போட்டோக்களை அடுக்கி ரசிகர்களை அதிர வைத்துள்ளார். தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டேவுக்கு ஏகப்பட்ட ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் குவிந்து வருகின்றனர். புட்டபொம்மாவை இன்ஸ்டாகிராமில் 16.8 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

மாளவிகா மோகனன்
ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தார். தனுஷின் மாறன் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

நேஷ்னல் கிரஷ்
நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியான புஷ்பா படத்திலும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். 26.3 மில்லியன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் உலகை கலக்கி வருகிறார் நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா.

கீர்த்தி சுரேஷ் கலக்கல்
ஒடிடி, தியேட்டர் என இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் வேற லெவலில் டிரெண்டாகி வருகின்றன. இன்ஸ்டாகிராமில் கீர்த்தி சுரேஷை 11.2 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

ரசிக்க வைக்கும் ராஷி கன்னா
7.7 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை ராஷி கன்னா தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். ஹோம்லி லுக்கில் நடித்து வந்த ராஷி கன்னா நீச்சல் குளத்தில் வெளியிட்ட பிகினி புகைப்படங்களால் அதிகமான ரசிகர்களால் பின் தொடரப்பட்டார். தொடர்ந்து அட்டகாசமான போட்டோக்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

அமலா பால் அட்டகாசம்
4 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை அமலா பால் ஆன்மிக சுற்றுலா புகைப்படங்களுக்கு நடு நடுவே கவர்ச்சி புகைப்படங்களையும் பிகினி புகைப்படங்களையும் பதிவிட்டு இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் டச்சில் உள்ளார் அமலா பால்.

ரகுல் ப்ரீத் சிங்
18.2 மில்லியன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமை கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என படுபிசியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி உள்ள சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படம் வெளியாகாதது ஏமாற்றத்தையே தந்தது. அதனை ஈடு செய்யும் விதமாக பிகினி புகைப்படங்களை களமிறக்கி கலக்கி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

தர்ஷா குப்தா
குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா இந்த ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்திலும் தர்ஷா குப்தா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் சூப்பர் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார்.