என் உச்சி மண்டையில சுர்ருங்குது.. அனுஷ்காவே நினைச்சாலும் இப்போ ஆட முடியாத டாப் 5 ஹாட் சாங்ஸ்!

சென்னை: யோகா டீச்சராக இருந்து சினிமாவில் அறிமுகமான அனுஷ்கா மொபைலா மொபைலா பாடலிலேயே உடம்பை வில்லாக வளைத்து நெளித்து ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் பித்துப் பிடிக்க வைத்திருப்பார்.

சினிமாவுக்காக நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஏகப்பட்ட தியாகங்கள் செய்து வரும் நிலையில், இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்கா உடல் எடையை அதிகரித்து நடித்தது அவருக்கு அடுத்த அடுத்த பட வாய்ப்புகளே பறிபோகும் அளவுக்கு பெரிய சிக்கலில் கொண்டு வந்து விட்டது.

அனுஷ்காவே நினைத்தாலும் இனி இப்படி ஆட முடியுமா என தெரியாத அளவுக்கு அவர் ஆட்டம் போட்ட 5 ஹாட்டான பாடல்கள் பற்றி இங்கே பார்ப்போம்..

மொபைலா மொபைலா

கடந்த 2006ம் ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா நடிப்பில் வெளியான ரெண்டு படத்தில் இடம்பெற்ற " மொபைலா மொபைலா" பாடலில் கவர்ச்சி பொங்க செம டான்ஸ் போட்டு இருப்பார் நடிகை அனுஷ்கா. அந்த பாடலுக்கு பின்னர் தான் ஏகப்பட்ட ரசிகர்கள் அனுஷ்காவின் தீவிர ஃபேன்களாகவே மாறினர்.

என் உச்சி மண்டையில

2009ல் பாபு சிவன் இயக்கத்தில் விஜய், அனுஷ்கா நடித்த வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி இசையில் வெளியான "என் உச்சி மண்டையில" பாடலிலும் அனுஷ்காவின் அதிரடியான ஆட்டத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் வாயடைத்துப் போனார்கள். என்னடா இந்த ஆட்டம் போடுறாங்களே அனுஷ்கா என பலரும் வியந்து பார்த்தனர்.

காதல் வந்தாலே

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தில் இடம்பெற்ற ஷீ ஸ்டோல் மை ஹார்ட் பாடலில் கவர்ச்சி உடையில் கலக்கலாக தியேட்டரையே தெறிக்கவிட்ட அனுஷ்கா காதல் வந்தாலே பாடலில் சூர்யாவுடன் இணைந்து செம குத்தாட்டம் போட்டிருப்பார். என்ன அழகுடா அனுஷ்கா என வர்ணிக்காத ரசிகர்களே இல்லை.

நோ மணி நோ ஹனி

வேட்டைக்காரன் படத்தை தொடர்ந்து சிம்புவுடன் இணைந்து 2011ல் வானம் படத்தில் அனுஷ்கா போட்ட நோ மணி.. நோ ஹனி பாடல் இன்னமும் பார்ட்டிகளிலும் வீட்டு விழாக்களிலும் போடப்பட்டு ஆடப்பட்டு வருகிறது. சேலையில் செம ஹாட்டாக அனுஷ்கா தனது ஸ்லிம்மான இஞ்சி இடுப்பை காட்டி அசத்தல் ஆட்டம் போட்டிருப்பார்.

ஒரே ஒரு ஊரில்

ரஜினியுடன் லிங்கா படத்தில் மோனா மோனா மோனாலிசா பாடலில் ஆட்டம் போட்ட அனுஷ்கா, பாகுபலி 2ம் பாகத்தில் பிரபாஸ் உடன் இணைந்து ஒரே ஒரு ஊரில் பாடலில் செம ரொமான்ட்டிக்காக ஆட்டம் போட்டிருப்பார். பில்லா தெலுங்கு ரீமேக்கில் பிரபாஸ் உடன் இணைந்து அந்த பிகினி சீனிலும் வெயிட்டு காட்டி இருப்பார் அனுஷ்கா. மீண்டும் பழைய அனுஷ்காவை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X