மவுசு குறைந்த மணிரத்னம்.. போன வருஷம் ஃபர்ஸ்ட்.. இந்த வருஷம் எந்த இடம்.. நம்பர் ஒன் யாரு?

சென்னை: 2023 Top 5 Favorite Directors - இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக வசூல் வேட்டை நடத்திய படங்களை இயக்கிய டாப் 5 ஃபேவரைட் இயக்குநர்கள் யார் யார் என சின்னதாக ஒரு அலசலை இங்கே அலசுவோம்.

கடந்த ஆண்டு விக்ரம் படத்தின் மூலம் கமல்ஹாசனுக்கு லோகேஷ் கனகராஜ் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார். 400 கோடிக்கும் மேல் விக்ரம் திரைப்படம் வசூல் ஈட்டியது. ஆனால் அந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸை அதே ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் முறியடித்தது.

500 கோடி வரை அந்த படம் வசூல் செய்த நிலையில் இரண்டாம் பாகம் ஆயிரம் கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மணிரத்னம் சொதப்பி விட்டார். பொன்னியின் செல்வன் படத்திற்கு அவர் வைத்த கிளைமேக்ஸ் பல வாசகர்களுக்கே பிடிக்காமல் போனது தான் அதற்கு காரணம் என்றனர். கடந்த ஆண்டு நம்பர் ஒன் இடத்தில் இருந்த மணிரத்னம் இந்த ஆண்டு எந்த இடத்தை பிடித்துள்ளார் என்றும் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ள கோ்லிவுட்டின் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க..

Top 5 Favorite Directors of Tamil Cinema in 2023

5. ஆதிக் ரவிச்சந்திரன் - மார்க் ஆண்டனி: விஷால், எஸ் ஜே சூர்யா, ரிது வர்மா, அபிநயா உள்ளிட்டோர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான போன்ல டைம் டிராவலா என பலரையும் திரும்பி பார்க்க வைத்த மார்க் ஆண்டனி படத்தை கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறிய பட்ஜெட்டில் படமெடுத்து சுமார் 100 கோடி வசூல் வரை வசூல் செய்து மாஸ் காட்டியிருந்தார். விஷாலுக்கும் ஆதிக் ரவிசந்திரனுக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய கம்பர் படமாக அமைந்தது. மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவையும் இயக்குநர் ரீ-க்ரியேட் செய்த விதம் மற்றும் ரெட்ரோ பாடல்களை பயன்படுத்திய விதம் என ஆதிக் ரவிச்சந்திரன் அசத்தி இருந்தார்.

Top 5 Favorite Directors of Tamil Cinema in 2023

4. அ. வினோத் - துணிவு: நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் அஜித்துடன் இணைந்து அ. வினோத் பணியாற்றிய துணிவு திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. நடிகர் அஜித் குமாரை செம மாஸாக காட்டி அஜித் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி இருந்தா்ர் அ. வினோத். மேலும், வங்கிகளில் நடைபெறும் மோசடிகளை துணிவுடன் எடுத்துக் கூறி்யிருந்தார்.

Top 5 Favorite Directors of Tamil Cinema in 2023

3. மணிரத்னம் - பொன்னியின் செல்வன்: அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு 500 கோடி வசூலை அள்ளிய நிலையில், இந்த ஆண்டு வெறும் 300 கோடி வசூலை மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் பெற்றது. இயக்குநர் மணிரத்னம் இந்த ஆண்டும் இண்டஸ்ட்ரி ஹிட் சம்பவம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால், பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டி பலர் பல ஆண்டுகளாக கண்டு வந்த கனவை நனவாக்கி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். அடுத்து தக் லைஃப் காட்ட காத்திருக்கிறார்.

Top 5 Favorite Directors of Tamil Cinema in 2023

2. லோகேஷ் கனகராஜ் - லியோ: தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய படமாக மாறிய நிலையிலும், லோகேஷ் கனகராஜின் இயக்கம் ரசிகர்கள் பலருக்கும் பூரண திருப்தியை அளிக்கவில்லை. விஜய்யிடம் இருந்து ஒரு மிரட்டலான நடிகரை வெளிக்காட்டிய விதம், ஹாலிவுட் அளவுக்கு ஹைனா சீன் அமைத்தது, சண்டைக் காட்சிகளில் அதிர வைத்தது என அட்டகாசம் செய்தாலும் 100 சதவீத லோகேஷ் படத்தை அவர் இந்த ஆண்டு கொடுக்க சற்றே தவறிவிட்டார். தலைவர் 170 படத்தில் தரமான சம்பவம் இருக்கும் என நம்புவோம்.

Top 5 Favorite Directors of Tamil Cinema in 2023

1. நெல்சன் - ஜெயிலர்: விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படம் இயக்குநர் நெல்சனை பயங்கரமாக ட்ரோல் செய்த படமாக மாறியது. அதையெல்லாம் பார்த்த பின்னரும் நெல்சன் மீது ரஜினிகாந்த் நம்பிக்கை வைத்து நடித்த ஜெயிலர் திரைப்படம் இந்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், என்டர்டைன்மென்ட் மற்றும் பக்கா மாஸ் படமாக மாறியது. இந்த ஆண்டின் ஃபேவரைட் கோலிவுட் இயக்குநராக நம்பர் ஒன் இடத்தை நெல்சன் பிடிக்கிறார். அடுத்த ஆண்டு ஏகப்பட்ட இயக்குநர்களுக்கு இடையே இந்த போட்டி இருக்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X