twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதுமுக இயக்குனர்களை டாப் நடிகர்கள் மதிக்க வேண்டும்... இயக்குனர் சிபி சக்கரவர்த்தி வேண்டுகோள்!

    |

    சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் டான்

    Recommended Video

    புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு குடுங்க | Sibi Speech | Don Success Meet *Kollywood

    டான் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி

    சமீபத்தில் பட விழா ஒன்றில் பேசிய சிபி சக்கரவர்த்தி புதுமுக இயக்குனர்களை டாப் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

    100 கோடி வசூல் எனக்கு வராது.. டான் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?100 கோடி வசூல் எனக்கு வராது.. டான் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?

     இயக்குனராக அறிமுகம்

    இயக்குனராக அறிமுகம்

    சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் புது புது இளம் இயக்குனர்கள் அறிமுகம் ஆகிக் கொண்டே இருக்கின்றார்கள் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. டாக்டர் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வந்த டான் திரைப்படம் முழுக்க முழுக்க கல்லூரி காலத்தில் உருவாகி வந்தது. சிவகார்த்திகேயன்,பிரியங்கா அருள்மோகன், எஸ் ஜே சூர்யா,முனீஸ்காந்த்,காளி வெங்கட்,சூரி,ராதாரவி, மயில்சாமி, ஆர்ஜே விஜய் , சிவாங்கி, பாலசரவணன் என பலர் இந்த படத்தில் நடித்திருக்க மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வந்த இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரோடக்சன்ஸ் மற்றும் லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது

     சிவகார்த்திகேயன் பள்ளி மாணவனாக

    சிவகார்த்திகேயன் பள்ளி மாணவனாக

    சிவகார்த்திகேயனின் வழக்கமான படங்களில் இருப்பது போலவே டான் படமும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்க்கும் அனைவரையும் ரசிக்கவைத்தது குறிப்பாக இப்படத்தில் இடம் பெறும் கல்லூரி மற்றும் பள்ளி காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராகவும் பள்ளி மாணவனாக வேறுபடுத்தி நடித்திருந்தது மிகவும் புதுமையாக ரசிக்கும்படியும் இருந்தது

     தந்தை மகன் பாசத்தை

    தந்தை மகன் பாசத்தை

    டான் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமான சிபிச்சக்கரவர்த்தி இயக்குனர் அட்லீ உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். கலகலப்பான கல்லூரி கதைக்களமாக மட்டுமல்லாமல் தந்தை மகனுக்கு இடையே உள்ள இதுவரை எந்த படத்திலும் சொல்லப்படாத பாசத்தை மிகவும் அழுத்தம் திருத்தமாக இப்படத்தில் கூடியிருந்தது அனைவரையும் ரசிக்க வைத்தது இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றுள்ளது

     புதுமுக இயக்குனர்களை மதிக்க வேண்டும்

    புதுமுக இயக்குனர்களை மதிக்க வேண்டும்

    டான் வெற்றிக்குப் பிறகு அனைவராலும் அறியப்பட்ட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி படவிழா ஒன்றில் பேசுகையில் டாப் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் புதுமுக இயக்குனர்களை மதிக்க வேண்டும். வெறும் 10 நிமிடத்தில் எல்லாராலும் மிகச்சிறப்பாக கதை சொல்லி விட முடியாது குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது தரவேண்டும் அப்பொழுதுதான் சொல்ல வந்த கதையை முழுமையாக சொல்ல முடியும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English summary
    Top Heros Should Respect Young Directors in Tamil Cinema Saya Cibi Chakkaravarthy
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X