தமிழில் அதிக ரேட்டிங் பெற்ற முதல் ஐந்து திரைப்படங்கள்!

சென்னை : சினிமாவை பொறுத்த வரையிலும் தரமான திரைப்படங்களும் கமர்சியல் படங்களும் ஆண்டுதோறும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்திக்கொண்டு வருகிறது.

வருடாவருடம் ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகின்ற நிலையில் அதில் மிக சொற்ப படங்களே வெற்றி பெற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது.

அவ்வாறு மக்களால் சிறந்த படமாக கொண்டாடப்படும் தரமான திரைப்படங்கள் ரேட்டிங்கின் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டு ஐஎம்டிபி என்ற உலக திரைப்படங்களை மதிப்பீடு செய்யும் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது சிறந்த 5 தமிழ் திரைப்படங்களின் ரேட்டிங்கினை அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

ஹாலிவுட்

ஹாலிவுட்

உலக அளவில் பல்வேறு மொழிகளில் பல்வேறு விதமான திரைப்படங்கள் அவரவர் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறும், அதிக பொருட்செலவில் பிரம்மாண்ட திரைப்படங்களையும் ஹாலிவுட் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உருவாக்கி வெளியிட்டு வருகிறது.

ஐஎம்டிபி

ஐஎம்டிபி

அந்தவகையில் இந்திய திரைப்படங்களும் தற்போது உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று, உலகின் பல்வேறு நாடுகளிலும் கவனத்தைப் பெற்று வருகிறது. இவ்வாறு வெளியாகும் திரைப்படங்களை ஐஎம்டிபி என்ற நிறுவனம் மதிப்பீடு செய்து அதன் ரேட்டிங்கை வெளியிட்டு வருகிறது.

 உற்சாகத்தில் ரசிகர்கள்

உற்சாகத்தில் ரசிகர்கள்

அந்த வகையில் தற்போது இந்திய அளவில் ரேட்டிங்கின் அடிப்படையில் சிறந்த 5 படங்களின் பட்டியலையும், சிறந்த 5 தமிழ் திரைப்படங்களின் பட்டியலையும் தற்பொழுது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மக்களால் சிறந்த திரைப்படமாக கொண்டாடப்பட்ட திரைப்படங்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராட்சசன்

ராட்சசன்

அவ்வாறு ஐஎம்டிபி வெளியிட்ட சிறந்த 5 தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் முதலாவது இடத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான "ராட்சசன்" திரைப்படம் இடம்பெற்றுள்ளது. முண்டாசுப்பட்டி திரைப்படத்தை இயக்கிய படக்குழு மீண்டும் இணைந்த சைக்கோ த்ரில்லர் திரைப்படமான ராட்சசன் தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வசூலை வாரி குவித்த நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கிலும் ராட்சசடு என்ற பெயரில் வெளியாகி அங்கேயும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

விக்ரம் வேதா

விக்ரம் வேதா

இரண்டாவது இடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஆர். மாதவன் நடிப்பில் வெளியான "விக்ரம் வேதா" திரைப்படம் உள்ளது. புஷ்கர் அண்ட் காயத்ரி இயக்கி இருந்த இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய அளவில் பல்வேறு மொழி ரசிகர்களையும் கவர்ந்து பாராட்டுக்களை பெற்றது மட்டுமன்றி திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் விக்ரம் வேதா திரைப்படம் தற்போது ஹிந்தியில் பிரபல நடிகர்களை வைத்து தயாராக உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

நாயகன்

நாயகன்

இந்தியாவில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக போற்றப்பட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "நாயகன்" திரைப்படம் இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. கமல்ஹாசன் நடித்த பல்வேறு திரைப்படங்கள் இன்றளவும் சிறந்த திரைப்படங்களாக பேசப்பட்டு வரும் நிலையில் நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவின் பென்ச் மார்க் ஆக விளங்கி வருகிறது.

அன்பே சிவம்

அன்பே சிவம்

தமிழ் சினிமாவின் சாபக்கேடாக கூறப்படும் ஒரு சில நிகழ்வுகளில் ஒன்று, சில தரமான திரைப்படங்கள் திரையில் வெளியாகும்போது அதை கொண்டாடாமல் தோல்வி படமாக்கிய ரசிகர்கள் பின்னாளில் அதே திரைப்படத்தை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடி ஆஹா ஓஹோ என பாராட்டி வருவது வழக்கமாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது பலரின் பாவரிட் மூவியாக இருக்கும் திரைப்படம் "அன்பே சிவம்".

தோல்வியை தழுவியது

தோல்வியை தழுவியது

ஐஎம்டிபி தரவரிசையில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ள இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியானபோது ரசிகர்களால் கவனிக்கப்படாமல் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. மேலும் இந்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும் மற்றும் இயக்குனருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி திரைப்படமாக அமைந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை ரசிகர்கள் சிறந்த திரைப்படம் என கொண்டாடி வருகின்றனர்.

பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள்

இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கும் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியான "பரியேறும் பெருமாள்". அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்றளவும் நடந்து வரும் சாதிக் கொடுமையை அடிப்படையாகக் கொண்டும், கல்வியைப் போற்றியும், "கல்வி தான் உன்னை உயர்த்தும் சாதி அல்ல" என்பதை தீர்மானமாக சொல்லியிருந்த இந்த திரைப்படம் இளம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X