twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீராசாமி -நறநற சாமி!

    By Staff
    |

    தமிழில் ஒரு ஹாலிவுட் படம் என்று எல்லோரும் அடித்துக் கலக்கிக் கொண்டிருக்க, ஷகீலா பட ரேஞ்சுக்குவீராசாமி படத்தைத் தயாரித்து ரசிகர்களை தாறுமாறாக மென் டலாக்கி இருக்கிறார் விஜய டி.ராஜேந்தர்.

    கட்டறுத்து விட்ட காளையாக இன்னும் அடங்காமல் அழ வைக்கிறார்!. வீராசாமி அந்த வகையில் இன்னொருஇம்சை. இப்படத்தில் ராஜேந்தர்தான் ஹீரோ. வக்கீலாகவும், எம்.எல்.ஏவாகவும் வருகிறார். தன்னைச்சுற்றியிருப்பவர்களுக்கு நல்லதை மட்டுமே செய்யும் சூப்பர் மனிதர் ராஜேந்தர்.

    அவரது தங்கச்சி ஷீலா. விபச்சார புரோக்கர் பாபியின் தம்பியான அஜீஸை காதலிக்கிறார். இது ராஜேந்தருக்குத்தெரிய வருகிறது. மேட்டர் தெரிந்ததும் தடதடக்கிறது ராஜேந்தரின் தாடி, படபடக்கிறது பாடி,நடுநடுங்குகிறது நாடி, கடைசியில் காட்டுகிறார் பச்சைக் கொடி!

    ராஜேந்தர் பச்சைக் கொடி காட்டினாலும், பாபி கணக்கு வேறு மாதிரியாக இருக்கிறது. மேக்னாவுக்கு அஜீஸைக்கட்டிக் கொடுக்க முடிவு செய்கிறார். தம்பியைக் காதலிக்குமாறு மேக்னாவைத் தூண்டுகிறார் பாபி. அவரும்,ஷீலாவிடமிருந்து அஜீஸைப் பிரிக்க நாடகமாடுகிறார். இது ஒரு டிராக்.

    இன்னொரு டிராக்கில் ராஜேந்தரின் காதலைச் சொல்லியுள்ளார். வீராசாமியை (ராஜேந்தர்) சின்னப் புள்ளையாகஇருந்தபோதிருந்தே கவனித்துக், காதலித்து வருபவர் மும்தாஜ். அவர் செய்யும் நல்ல விஷயங்களால் வீராசாமிமீது ஈர்க்கப்படுகிறார். ஆனால் மும்தாஜின் காதலை அவரது குடும்பம் கொடூரமாக எதிர்க்கிறது.

    ஆனால் காதலுக்கு முன்னால் மத்ததெல்லாம் மண்ணாச்சே!. குடும்பத்தை விட்டுப் பிரிந்து வருகிறார் மும்தாஜ்.இந்த நிலையில் லோக்கல் ரவுடி ஒருவன், வீராசாமியை எதிர்த்து தேர்தலில் நின்று, மொள்ளமாரி,முடிச்சவிக்கத்தனம் செய்து ஜெயித்து விடுகிறான்.

    அத்தோடு நில்லாமல் மும்தாஜையும் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டு விடுகிறான். ஆனால் இந்தக்கல்யாணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மும்தாஜ், அவனை விட்டு விலகி விர முடிவு செய்கிறார். ஆனால் அதுதவறு என்று கண்ணீர் மல்க கலங்கி தடுக்கிறார் வீராசாமி.

    தங்கச்சி காதல் மற்றும் மும்தாஜின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை, புயல்களை எப்படி அவர் சரிசெய்கிறார், அதில் ஜெயிக்கிறாரா அல்லது என்ன ஆகிறார் என்பதுதான் படத்தின் கதையே.

    இதற்கு முன்பு வந்த ராஜேந்தர் படங்களுடன் இந்தப் படத்தை ஒப்பிட்டால் பெரிய குப்பை என்றுதான் சொல்லவேண்டும். படத்தில் திருப்தியான ஒரு விஷயம் பாடல்களும், இசையும்தான். ராஜேந்தர் பாணி பாடல்களில்ரசம் சொட்டுகிறது.

    அதேசமயம், முரட்டு ஜீன்ஸ் அணிந்து கொண்டு (பட்டனை போட ரொம்ப சிரமப்பட்டிருப்பார், அவ்ளோபெரிய தொந்தி!), பெரிய பெரிய உருட்டுக் கட்டைகளை தூக்கி ஸ்டைலாகப் போட்டுக் கொண்டு நடப்பது,மரத்தைச் சுற்றிச் சுற்றி டூயட் பாடுவது, காதல் காட்சிகள், ஸ்லோமோஷனில் ஓடி வருவது என ரசிகர்களைரொம்பவே பயமுறுத்தியிருக்கிறார் ராஜேந்தர்.

    முந்தைய படங்களில் அப்பப்ப சில சீன்களில் வந்து ரசிகர்களை அப்பி விட்டுப் போயிருப்பார் ராஜேந்தர்.ஆனால் இந்தப் படத்திலோ, முதல் காட்சியிலிருந்து கடைசிக் காட்சி வரை அப்பி எடுத்திருக்கிறார்.

    படத்தின் முதல் பாதியில் மக்கள் போற்றும் தலைவனாக வருகிறார் ராஜேந்தர். பிற்பாதியில் உணர்ச்சிகரமானவசனங்களும், சென்டிமென்டுகளையும் போட்டுத் தாக்கியுள்ளார்.

    சென்சார் போர்டு மட்டும் இல்லாவிட்டால், மும்தாஜையும், மேக்னா நாயுடுவையும் டிரஸ்ஸே போடாமல் நடிக்கவிட்டிருப்பார் போலும். அந்த அளவுக்கு இருவருக்கும் பிட்டுத் துணிகளைக் கொடுத்து டிரஸ் என்ற பெயரில்ஆங்காங்கே ஒட்டி வைத்துள்ளார். அதிலும் மும்தாஜின் காஸ்ட்யூம்கள் கண்களை மட்டுமல்லாது அதன்கண்மணிகளையும் கூட கூசச் செய்கிறது.

    மேக்னா நாயுடுவுக்கோ சொல்லவே வேண்டாம், ஜொள்ளு மன்னர்களுக்கு நல்ல விருந்து படைத்துள்ளார்.அம்மாம் பெரிய உடம்பை வைத்துக் கொண்டு, கிளாமர் டிரஸ்ஸுடன் மும்தாஜ் படம் முழுக்க ஷகீலா ரேஞ்சுக்குநீக்கமற கிளாமர் காட்டி ரசிகர்களை இம்சித்துள்ளார்.

    படத்தில் நிறைய எஸ்.எஸ்.சந்திரன் ரக இரட்டை அர்த்த வசனங்கள் வேறு.

    காதல், கிளாமர், மோதலுடன் அரசியலும் சேர்த்து காக்டெயில் படைத்துள்ளார் ராஜேந்தர். தலைவா நீதான்தலைவா அடுத்த கிங் மேக்கர், அடுத்த முதல்வர் என கூடச் சுற்றும் ஜால்ராக்கள் ஜிங்கி அடிப்பதும்,எம்.ஜி.ஆரைப் பாராட்டி சீன்கள் வைத்திருப்பதும், தனது கட்சியான லட்சிய திமுக குறித்த பிரசாரமும்ராஜேந்தரின் அரசியல் தொண்டர்களுக்கு போடப்பட்டுள்ள அவல். சிம்புவைப் பற்றியும் சீன் வைத்துள்ளார்.

    படத்தில் ஒரு விஷேம், மும்தாஜை ராஜேந்தர் காதலிப்பார் என்றாலும் ஒரு காட்சியில் கூட மும்தாஜைதொடாமல் நடித்துள்ளார்.

    படத்தில் மும்தாஜ் காட்டியுள்ள கிளாமர், எதிர்காலத்தில் பல குத்துப் பாட்டுக்களுக்கு நல்ல முதலீடாக அமையும்.இவர்கள் தவிர லொள்ளு சபா சந்தானமும் படத்தில் இருக்கிறார்.

    கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கேமரா, கலை, சண்டைப் பயிற்சி, இசை, இயக்கம் என ராஜேந்தரின் பலதுறைகளில் இசையமைப்பாளர் ராஜேந்தர் மட்டுமே வீராசாமியில் எடுப்பாக தெரிகிறார்.

    படத்தில் 11 பாடல்கள். சிம்புவும் ஒரு பாட்டைப் பாடியுள்ளார், அதுவும் ராஜேந்தருக்காக.

    படத்தைப் பார்த்து விட்டு ரத்தம் சிந்தியபடி வெளியே வரும் ரசிகர்களில் சிலர், தங்கை காதலுக்காக உயிரைத்தியாகம் செய்வது போல நடித்திருக்கும் ராஜேந்தர் அந்த சீனை முதலிலேயே வைத்திருந்தால், இவ்வளவு நேரம்நாம் இப்படி ரணகளப்பட்டிருக்க நேர்ந்திருக்காது என்று கூறுவதை கேட்க முடிகிறது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X