ஸ்பெஷல்ஸ்
டி.ராஜேந்தர் தனது அடுத்த படத்திற்கு பளபளவென 3 முத்தான ஹீரோயின்களைத் தேடி வருகிறாராம்.
மோனிஷா என் மோனலிசாவில் அவர் அறிமுகப்படுத்திய மும்தாஜ் இன்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குமிகப் பெரிய ரேஞ்சுக்குப் போய் விட்டதால், பல இளம் பெண்களும் டி.ஆடம் தங்களது அப்ளிகேஷனைப்போட்டு வருகிறார்களாம்.
இதனால் டி.ஆர். அலுவலக வாசலில் கண்ட உடைகளிலும் பல சைஸ் பெண்களும் குவிந்தவண்ணம் உள்ளனர்.அவர்களிடம படத்தை மட்டும் வாங்கிக் கொண்டு திருப்பி அனுப்பி வைத்துவிடுகிறார்களாம்.
இந்த முறையும் மும்பைக்கு அந்தப் புறமாகப் போய்த்தான் இரு ஹீரோயின்களைத் தேட திட்டமிட்டுள்ளாராம்டி.ஆர். இன்னொரு ஹீரோயின் ஒரு தமிழ்ப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம்.
தன்னிடம் நடிக்க சான்ஸ் கேட்டு வரும் பெண்களின் அப்ளிகேஷன்கள் மற்றும் படங்களை மகன் சிம்புவிடம்தள்ளி விட்டு, எப்படி இருக்கு இது என்று கருத்தும் கேட்கிறார் டி.ஆர்.
கொசுறு: மோனிஷா என் மோனலிசாவை இந்தியில் தயாரித்துள்ள டி.ஆர். அந்தப் படத்தை விரைவில் ரிலீஸ்செய்யும் வேலைகளில் மும்ரமாக இறங்கியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











