தமிழ் சினிமாவில் திருநங்கை வேடத்தில் அசத்திய நடிகர்கள்...

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகள் எப்படி விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனரோ அதேபோல நடிகர்கள் திருநங்கை வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

திருநங்கையாக நடிப்பது சற்று சவாலான விசயம். எனவேதான் இதுபோன்ற கதாபாத்திரங்களைத் தேர்தெடுந்து நடிக்கின்றனர்.

அதுவும் கம்பீரமாக இருக்கும் ஆண் நடிகர்கள் பெண்மை கலந்த பாத்திரத்திரத்தில் நடிக்கும் போது ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருக்கும்.

அப்பு பிரகாஷ் ராஜ்

அப்பு பிரகாஷ் ராஜ்

வில்லன் நடிகராக மட்டுமே அறியப்பட்ட பிரகாஷ் ராஜ் வசந்த் இயக்கத்தில் அப்பு படத்தில் திருநங்கை பாத்திரத்தில் நடித்திருப்பார். அதுவும் சிவப்பு விளக்குப் பகுதியில் வில்லன் திருநங்கையாக அசத்தியிருப்பார்.

அஜீத் வரலாறு

அஜீத் வரலாறு

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வரலாறு படத்தில் அஜீத் பெண்மையோடு கூடிய நளினமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

விவேக்– வையாபுரி

விவேக்– வையாபுரி

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நகைச்சுவை நடிகர் வையாபுரி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதேபோல் முரட்டுக்காளை ரீமேக் படத்தில் நடிகர் விவேக்கிற்கு திருநங்கை பாத்திரம் அசத்தலாக பொருந்தியிருக்கும்.

அவன் இவனில் விஷால்

அவன் இவனில் விஷால்

பாலாவின் இயக்கத்தில் அவன் இவன் படத்தில் மாறுகண்ணோடு கூடிய திருநங்கையாக நடித்திருப்பார் விஷால்.

காஞ்சனா சரத்குமார்

காஞ்சனா சரத்குமார்

கம்பீரமான தோற்றம் கொண்ட சரத்குமார் காஞ்சனா படத்தில் புடவை கட்டி நடித்து திருநங்கையாகவே வாழ்ந்திருப்பார்.

லாரன்ஸ் ராகவேந்திரா

லாரன்ஸ் ராகவேந்திரா

காஞ்சனா படத்தினை இயக்கிய லாரன்ஸ் ராகவேந்திராவிற்கு திருநங்கை பாத்திரம் சுமாரான பொருத்தம்தான் என்றாலும் கிளைமாக்ஸ் நடனத்தில் அசத்தியிருப்பார்.

தொட்டுப்பார் ரமணா

தொட்டுப்பார் ரமணா

வில்லன் நடிகர் ரமணா தொட்டுப்பார் படத்தின் மூலம் திருநங்கை பாத்திரத்தில் வில்லத்தனம் செய்திருப்பார்.

ஜெயம் ரவி– ஆதி பகவான்

ஜெயம் ரவி– ஆதி பகவான்

அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி பகவான் பாத்திரத்தில் திருநங்கையாக நடித்திருப்பார். படத்திற்கு சுமாரான வரவேற்புதான் இருந்தாலும் ஜெயம் ரவியின் நடிப்பு பேசப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X