»   »  த்ரிஷா போனார் மம்தா வந்தார்

த்ரிஷா போனார் மம்தா வந்தார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டான்ஸ் மாஸ்டராக இருந்து இயக்குனராக மாறியுள்ள லாரன்ஸ் ராகவேந்திரா இயக்கும்தெலுங்கு டான் படத்திலிருந்து நடிகை த்ரிஷா விலகி விட்டார்.

தமிழில் ராஜ்கிரணை வைத்து, தானே ஹீரோவாக நடித்து முனி என்ற படத்தை இயக்கிவருகிறார் லாரன்ஸ்.

தெலுங்கில் மாஸ், ஸ்டைல் என இரு படங்களை இயக்கியுள்ள லாரன்ஸ் தற்போதுடான் என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் நாகார்ஜூனாதான் ஹீரோ. த்ரிஷாஹீரோயினாக புக் செய்யப்பட்டிருந்தார்.

தற்போது படத்திலிருந்து விலகிக் கொள்வதாக த்ரிஷா கூறி விட்டாராம். ஏன் இந்ததிடீர் விலகல் என்று த்ரிஷாவிடம் கேட்டபோது, நாகார்ஜூனாவுடன் ஜோடி சேரஆவலாக இருந்தேன்.

ஆனால் இப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்றபடங்களுக்கு நிறைய கால்ஷீட் ஒதுக்கி விட்டதால் டான் படத்துக்கு தேதிகள்இல்லாமல் போய் விட்டது. இதனால் லாரன்ஸ் படத்தில் என்னால் நடிக்கஇயலவில்லை. வேறு காரணம் எதுவும் இல்லை என்று கூறுகிறார் த்ரிஷா.

த்ரிஷா விலகியதைத் தொடர்ந்து இப்போது மம்தா மோகன்தாஸிடம் கேட்டுள்ளனர்.அவரும் சரி என்று கூறி விட்டாராம். சட்டுப்புட்டென்று கிளம்பி வாருங்கள் எனஅழைப்பு வரவே அவரும் ஹைதராபாத் பறந்துள்ளார்.

முனி முடிவடையவுள்ளதால் டான் படப்பிடிப்பை தொடங்கவுள்ளாராம் லாரன்ஸ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil