»   »  நீ இன்றி திரிஷா!

நீ இன்றி திரிஷா!

Subscribe to Oneindia Tamil

முட்டைக் கண் பிரதாப் மீண்டும் இயக்க வருகிறார். திரிஷாதான் அவரது நாயகி. கூட நடிக்கவிருப்பவர் மாதவன். படத்திற்குப் பெயர் நீ இன்றி.

நடிகராக அறிமுகமாகி பின்னர் காமெடியனாக, இயக்குநராக பல்வேறு அவதாரம் எடுத்தவர் கேரளத்தைச் சேர்ந்த பிரதாப் போத்தன். சிறிது காலம்ராதிகாவின் கணவராகவும் இருந்தார்.

சில தமிழ்ப் படங்களை இயக்கிய பிரதாப் போத்தன் நீண்ட நாட்களாக எங்கும் காணாமல் அமைதியாக இருந்தார். இப்போது மீண்டும் இயக்குநராகஅவதாரம் எடுத்துள்ளார்.

மாதவன், திரிஷா நடிக்க நீ இன்றி என்ற பெயரில் புதிய படத்தை இயக்கப் போகிறார் பிரதாப். இது ஒரு சுத்தமான, வித்தியாசமான காதல் கதைஎன்று கூறுகிறார் பிரதாப்.

படத்தை முழுக்க முழுக்க கனடாவில் வைத்து சுடவுள்ளாராம். இதற்காக மாதவன், திரிஷா சகிதம் 40 நாட்கள் கனடாவில் முகாமிட உள்ளார்.படத்துக்கு சங்கர் மகாதேவன், ஈசான், லாய் கூட்டணி இசையமைக்கிறது.

வைரமுத்து பாடல்களை எழுதவுள்ளார். வெங்கடேஷ், பயத் ஆகியோர் இணைந்துத் தயாரிக்கின்றனர். மீடியம் பட்ஜெட் படமாக இதுஉருவானாலும் உலகத் தரத்துடன் படம் இருக்குமாம்.

சமீபத்தில் வெளியான மணிரத்தினத்தின் குரு படத்தில் பிரதாப் தலையைக் காட்டியுள்ளார். அரசு அதிகாரியாக சின்ன வேடத்தில் வந்துபோயிருப்பார் இதில்.

நீ இன்றி மூலம் தமிழ் ரசிகர்களை மீண்டும் வசீகரிக்க வரும் பிரதாப், திரிஷாவுக்கு எப்படிப்பட்ட காட்சிகளை வடிவைமத்துள்ளாராம்? கண்டிப்பாகதிரிஷா ரசிகர்களுக்கு ஏமாற்றம் இருக்காது. இந்தக் கால இளைஞர்களுக்கேற்ற வகையில் படத்தின் கதையை அமைத்துள்ளேன். நிச்சயம் இப்படம்அவர்களைக் கவரும் என்கிறார்.

மீண்டும் ஒரு காதல் கதை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil