ஸ்பெஷல்ஸ்
அலை படத்திற்குப் பிறகு மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேருகிறார் நடிகை த்ரிஷா.
சாமி படத்தில் மாமியாக நடித்து ரசிகர்களை வென்ற த்ரிஷா இப்போது ரொம்ப பிஸி. சாமியைத் தொடர்ந்து தமிழில் த்ரிஷாவுக்குமளமளவென வாய்ப்புக்கள்.
இப்படி வந்த ஒரு வாய்ப்பு தான் ஜி படம். ஆனால், அந்தப் படம் லேட்டானதால் அதற்குப் பிறகு ஒத்துக் கொண்ட கில்லி வேகமாகவெளியாகி வெற்றிக் கொடி நாட்டியது.
கில்லி வெற்றிக்குப் பிறகு த்ரிஷாவுக்கு தெலுங்கிலும் நிறைய வாய்ப்புகள் நிறைய வர ஆரம்பித்துவிட்டன. அங்கு அவர் அரை குறைஆடையுடன் ஆட்டம் போட்ட வர்ஷம் பெரும் வெற்றியைப் பெற்றதால் த்ரிஷாவைத் தேடி ஹைதராபாத் தயாரிப்பாளர்கள் ஓடிவந்தவண்ணம் உள்ளனர்.
தமிழை விட டப்பு அதிகம் என்பதால் தெலுங்குப் படங்களை ஒத்துக் கொள்கிறார் த்ரிஷா. இதனால் அவரது கையில் இப்போது தெலுங்குப்படங்கள்தான் அதிகம் உள்ளன.
இந்த டைட் கால்ஷீட்டுக்கு இடையே த்ரிஷா ஒப்புக் கொண்ட தமிழ்ப் படங்கள் இரண்டு. ஒன்று ஜி, இன்னொன்று திருப்பாச்சி.
இந்த முறையும் இப்பவும் விஜய் முந்திக் கொண்டார். திருப்பாச்சி படம் வெளியாகி விட்டது. ஆனால் அஜீத்தின் ஜி ரொம்பவே ஸ்லோவாகஇருக்கிறதாம். காரணம் த்ரிஷா தான் என்கிறார்கள்.
முன்பு தனக்கு மார்க்கெட் இல்லாதபோது மிகக் குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதால் ஜி படத்தை அவர் பின்னுக்குத்தள்ளிவைத்துவிட்டு, டப்பு அதிகம் கொடுக்கும் தெலுங்குப் படங்கள் மற்றும் திருப்பாச்சிக்கு அதிக முன்னுரிமை கொடுத்தாராம்.
இதனால் ஜி பட இயக்குநர் லிங்குச்சாமி கடுப்பாக இருக்கிறார்.
இதற்கிடையே சம்பளத்தைக் கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று அதன் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியிடம் வேறு கொக்கிபோட்டுள்ளாராம் த்ரிஷா.
இன்னுமா என்று வாய் பிளந்து நிற்கிறார் சக்கரவர்த்தி.
இந் நிலையில், தமிழில் வாய்ப்புகள் இல்லாது போன பிரபுதேவா தெலுங்கில் த்ரிஷா, பிரபாஷ் ஆகியோரை வைத்து ஒரு படம் இயக்கிமுடித்துள்ளார்.
இதற்கு அடுத்ததாக த்ரிஷா சிம்புவின் இயக்கத்தில் ஒரு படததில் நடிக்கிறார். அலை படத்தில் சிம்புவுடன் நடித்தபோது இருவருக்கும்இடையே லவ் பத்திக்கிச்சு என்று கோலிவுட் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் அதையடுத்து இருவரும் ஜோடி சேராததால் அந்த கிசுகிசு அப்படியே அடங்கிவிட்டது. இப்போது சிம்புவின் இயக்கத்தில்பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் உருவாகும் மலை படத்தில் த்ரிஷா நடிக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.


Click it and Unblock the Notifications











