twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆசின், த்ரிஷா ஆட்டம்! முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் நடத்தப்படவுள்ள பிரமாண்டபாராட்டு விழாவில் நடிகர், நடிகையரின் கலை நிகழ்ச்சிகளுக்கு விரிவான ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. திமுக அரசு பதவியேற்றவுடன் வெளிப்புறப் படப்பிடிப்புக் கட்டணம் குறைப்புஉள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. பெரியார் படத்திற்கு ரூ. 95லட்சம் நிதியுதவியையும் அரசு அறிவித்துள்ளது.இதையடுத்து கருணாநிதிக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர்சங்கம், ஃபெப்சி, நடிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இணைந்து வரும்23ம்தேதி மாலை 5 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன.இந்த விழாவுக்கு மகாராஷ்டிர ஆளுநர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமை தாங்குகிறார்.நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், விஜய், விக்ரம், நடிகைகள்மனோரமா, குஷ்பு உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த விழாவையொட்டி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளுக்கு படப்பிடிப்புகளுக்குவிடுமுறை விடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நடிகைகள் த்ரிஷா, ஆசின், மும்தாஜ், சதா,நயனதாரா, ரீமா சென், ஷ்ரேயா உள்ளிட்டோரின் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது. இதுதவிர வடிவேலு, பார்த்திபன், பாக்யராஜ், சிம்பு, அப்பாஸ், விவேக், பிரகாஷ் ராஜ்,நெப்போலியன், கார்த்திக், தியா, சிந்து துலானி, ரகஸ்யா உள்ளிட்ட நடிகர், நடிகைகள்பலர் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடனம் மற்றும்நாடகத்திற்கான ரிகர்சலில் நடிகர், நடிகையர் ஈடுபட்டுள்ளனர். விழாவை நடத்த சத்யராஜ், பிரஷாந்த், சிம்பு, சார்லி, ஸ்ரீபிரியா உள்ளிட்டோர்அடங்கிய விழாக் குழு அமைக்கப்பட்டுள்ளது.தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், இயக்குனர் சங்கத் தலைவர்எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டுவருகின்றனர்.

    By Staff
    |

    முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் நடத்தப்படவுள்ள பிரமாண்டபாராட்டு விழாவில் நடிகர், நடிகையரின் கலை நிகழ்ச்சிகளுக்கு விரிவான ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

    திமுக அரசு பதவியேற்றவுடன் வெளிப்புறப் படப்பிடிப்புக் கட்டணம் குறைப்புஉள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. பெரியார் படத்திற்கு ரூ. 95லட்சம் நிதியுதவியையும் அரசு அறிவித்துள்ளது.

    இதையடுத்து கருணாநிதிக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர்சங்கம், ஃபெப்சி, நடிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இணைந்து வரும்23ம்தேதி மாலை 5 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

    இந்த விழாவுக்கு மகாராஷ்டிர ஆளுநர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமை தாங்குகிறார்.நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், விஜய், விக்ரம், நடிகைகள்மனோரமா, குஷ்பு உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.


    இந்த விழாவையொட்டி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளுக்கு படப்பிடிப்புகளுக்குவிடுமுறை விடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நடிகைகள் த்ரிஷா, ஆசின், மும்தாஜ், சதா,நயனதாரா, ரீமா சென், ஷ்ரேயா உள்ளிட்டோரின் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதுதவிர வடிவேலு, பார்த்திபன், பாக்யராஜ், சிம்பு, அப்பாஸ், விவேக், பிரகாஷ் ராஜ்,நெப்போலியன், கார்த்திக், தியா, சிந்து துலானி, ரகஸ்யா உள்ளிட்ட நடிகர், நடிகைகள்பலர் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடனம் மற்றும்நாடகத்திற்கான ரிகர்சலில் நடிகர், நடிகையர் ஈடுபட்டுள்ளனர்.

    விழாவை நடத்த சத்யராஜ், பிரஷாந்த், சிம்பு, சார்லி, ஸ்ரீபிரியா உள்ளிட்டோர்அடங்கிய விழாக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், இயக்குனர் சங்கத் தலைவர்எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டுவருகின்றனர்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X