»   »  த்ரிஷாவுக்கு அரசியல் மிரட்டல்!

த்ரிஷாவுக்கு அரசியல் மிரட்டல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேர்தல் செலவுக்குப் பணம் கேட்டு த்ரிஷாவையும், அவரது குடும்பத்தினரையும் ஒருஅரசியல் கட்சி மிரட்டி வருகிறதாம்.

இதனால் த்ரிஷாவும், அவரது குடும்பத்தினரும் தற்காலிகமாக தமிழ்நாட்டை விட்டுஇடம் பெயர முடிவு செய்திருக்கிறார்களாம்.

தேர்தல் வந்து விட்டால் போதும் உண்டியல் ஏந்தாத குறையாக, நிதி கேட்டு தெருத்தெருவாக கரை வேட்டித் தொண்டர்கள் படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பெரும்பாலும் அவர்கள் குறி வைப்பது பெரும் பணக்காரர்கள், வர்த்தகர்கள்ஆகியோரைத்தான். உரிமையோடு பணத்தைப் பிடுங்கிக் கொண்டு போவார்கள்.

அப்படித்தான் ஒரு முக்கிய கட்சியைச் சேர்ந்த சிலர் த்ரிஷா வீட்டுக் கதவையும்தட்டியுள்ளனர்.

கதவைத் திறந்த த்ரிஷா குடும்பத்தார் (த்ரிஷா அப்போது வீட்டில் இல்லையாம்!)வெள்ளையும், சொள்ளையுமாக அரசியல் கூட்டம் வாசலில் குழுமியிருப்பதைப்பார்த்து ஆச்சரியம் கலந்த குரலில் என்ன இந்தப் பக்கம் என்று கேட்டுள்ளனர்.


ஹிஹி என்று சிரித்தவாறே அந்த அரசியல் கும்பல், தேர்தல் வருதுல்ல, அதான் நிதிதிரட்டி வருகிறோம். உங்க பங்குக்கு ரொம்ப வேண்டாம், ஒரு 60 (லட்சம்) மட்டும்குடுத்திடுங்க என்று கூறியுள்ளனர்.

அதைக் கேட்டதும் த்ரிஷாவின் குடும்பம் அதிர்ந்து போய் விட்டதாம்.

அவ்வளவு பெரிய தொகையெல்லாம் தர முடியாது. அதுவும் இல்லாம த்ரிஷாஇப்போது வீட்டில்லை, அப்புறம் பார்க்கலாம் போய் வாருங்கள் என்று விரட்டாதகுறையாக அனுப்பி விட்டனர்.

ஆனால் அத்தோடு முடியவில்லை ரோதனை.

இரவில் மீண்டும் அதே கும்பல் வந்துள்ளது. இப்போது கொஞ்சம் மிரட்டல்தொனியுடன் அவர்கள் பேசியுள்ளனர். 60 குறைச்சு ஒரு பைசா கூட வாங்கமாட்டோம். 60 கொடுத்தே ஆக வேண்டும்.

இல்லாவிட்டால் அடுத்து நீங்கள் மறைமுகமாக தயாரித்து வரும் படத்தை வெளியிடவிட முடியாது, எங்களைப் பத்தி தெரியும்ல என்று மிரட்டியுள்ளனர்.

இந்த மிரட்டலால் அரண்டு போன த்ரிஷாவின் குடும்பத்தார் பணமெல்லாம் கொடுக்கமுடியாது என்று தைரியமாக சொல்லி கதவைப் பூட்டி விட்டனர்.


இதனால் கடுப்பாகிப் போன அந்தக் கும்பல், வீட்டின் ஜன்னல் கதவை கல்லால்அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து கிளம்பிப் போனார்களாம்.

இந்தக் கும்பல் மீண்டும் வந்தாலும் வரும் என்று பயந்து போயிருக்கிறார்களாம்த்ரிஷாவும், அவரது அப்பா, அம்மாவும். எனவே தேர்தல் முடியும் வரை ஹைதராபாத்அல்லது பெங்களூரில் போய் தற்காலிகமாக செட்டிலாகி விடலாமா என்றயோசனையில் உள்ளார்களாம் அவர்கள்.

தோழியரோடு (தண்ணியடித்துவிட்டு) ஆடப் போனாலும் பிரச்சினை, பாத்ரூம்போனாலும் பிரச்சினை (த்ரிஷா மாதிரியே ஒருவரை வைத்து பரப்பப்பட்ட எம்எம்எஸ்பைல்), என்னப்பா இது த்ரிஷாவுக்கு வந்த சோதனை...


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil