»   »  த்ரிஷா.. அதுல ரெண்டு, இதுல ரெண்டு படு வேகத்தில் உச்சாணிக்குப் போன நேரத்தில், ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் அடிபட்டு அடிபட்டு வெறுத்துப்போன த்ரிஷா இப்போது தனது பழைய மகிழ்ச்சிக்குத் திரும்பி, புத்தணர்வுடன் புது நடை போட ஆரம்பித்துள்ளார்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நாயகியாகத் திகழும் த்ரிஷா, தனக்கு எதிராக குவிந்து வரும் கேரளத்து போட்டிநாயகிகளை சமாளிக்க பல்வேறு வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளார்.இந்தப் புத்தாண்டு முதல் புதிய த்ரிஷாவைக் காணப் போகிறீர்கள் என்று தன்னை சந்திப்பவர்களிடம் எல்லாம் சொல்லி வருகிறார்.அப்படி என்னதான் செய்யப் போகிறாராம்?இந்த வருஷம் முதல் தமிழ், தெலுங்கு சினிமாக்களுக்கு சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாராம் த்ரிஷா. அதாவதுதமிழில் இரண்டு படங்கள், அதேபோல தெலுங்கில் இரண்டு படங்களில் மட்டும் நடிப்பாராம். ஆண்டுக்கு நாலு படத்தில் மட்டும்நடித்தாலும், நாலும் நச்சென்று ரசிகர்களை கவரும் வகையில் இருக்குமாம்.நல்ல கேரக்டர், குத்தாட்டம், கிளாமர் என அத்தனையையும் சம அளவில் கலந்து, ரசிகர்களை தொடர்ந்து தன்பக்கம் ஈர்த்துக்கொள்ளும் வகையில், தனது கதாபாத்திரங்களை செலக்ட் செய்து அசத்தப் போகிறாராம் த்ரிஷா. தனது சம்பளத்தையும் கூட தெளிவாக வகுத்து விட்டார். தமிழ்ப் படத்தில் நடிக்க 50 லகரம் சம்பளமாம், தெலுங்கு என்றால் 75லகரமாம்.தெலுங்கில் ரூ. 1 கோடியை நோக்கி தனது ரேட்யை எகிற வைத்த த்ரிஷா, இனிமேலும் சம்பளத்தை குண்டக்க மண்டக்கஉயர்த்துவதில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டாராம். எல்லாம் போட்டிகள் தான் காரணம் என்கிறார்கள்.அதே போல தெலுங்கில் காசுக்கு ஆசைப்பட்டு ஏகப்பட்ட படங்களை கமிட் செய்து கொண்டு, குப்பாச்சு, குழப்பாச்சு என்றுகுழம்பித் தவிப்பதற்குப் பதில் இவ்வாறு தானே ஒரு கட்டுப்பாட்டைக் போட்டுக் கொள்வது ரொம்பவும் நிம்மதி தரும் என்பதால்இந்த முடிவாம்.இப்போது தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் ஆதி படம் வழக்கம்போல் பெரிய ஹிட் ஆகும் என நம்பும் த்ரிஷா, இப்படம்மூலம் தமிழில் தன்னை முழுமையாக நிலை நிறுத்தும் மூடில் இருக்கிறார்.அதேபோல தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடிக்கப் போகும் படமும், தனது தெலுங்கு மார்க்கெட்டை இன்னும் ஸ்டிராங் ஆக்கும்என்று தெம்பாகாக இருக்கிறார் த்ரிஷா.எல்லாம் கிழக்குக் கடற்கரைச் சாலையும், கேரளக் குவியல்களும் செய்யும் வேலை.இன்னொரு விஷயம் தெரியுமோ, சிவாஜி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்காததால் மிகவும் நொந்து போயிருந்த த்ரிஷா அதுதொடர்பாக ரஜினியிடமே வருத்தத்தைத் தெரிவித்தாராம். உடனே, உனக்கு ஒரு ஸ்வீட் ஷாக் தருகிறேன் என்று சொன்னாராம்ரஜினி.சொன்னபடியே சிரஞ்சீவியிடம் பேசி, அவரது அடுத்த படத்தில் த்ரிஷாவை புக் செய்ய வைத்தாராம். இதை சொல்லிச் சொல்லிமகிழ்கிறார் த்ரிஷா.

த்ரிஷா.. அதுல ரெண்டு, இதுல ரெண்டு படு வேகத்தில் உச்சாணிக்குப் போன நேரத்தில், ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் அடிபட்டு அடிபட்டு வெறுத்துப்போன த்ரிஷா இப்போது தனது பழைய மகிழ்ச்சிக்குத் திரும்பி, புத்தணர்வுடன் புது நடை போட ஆரம்பித்துள்ளார்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நாயகியாகத் திகழும் த்ரிஷா, தனக்கு எதிராக குவிந்து வரும் கேரளத்து போட்டிநாயகிகளை சமாளிக்க பல்வேறு வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளார்.இந்தப் புத்தாண்டு முதல் புதிய த்ரிஷாவைக் காணப் போகிறீர்கள் என்று தன்னை சந்திப்பவர்களிடம் எல்லாம் சொல்லி வருகிறார்.அப்படி என்னதான் செய்யப் போகிறாராம்?இந்த வருஷம் முதல் தமிழ், தெலுங்கு சினிமாக்களுக்கு சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாராம் த்ரிஷா. அதாவதுதமிழில் இரண்டு படங்கள், அதேபோல தெலுங்கில் இரண்டு படங்களில் மட்டும் நடிப்பாராம். ஆண்டுக்கு நாலு படத்தில் மட்டும்நடித்தாலும், நாலும் நச்சென்று ரசிகர்களை கவரும் வகையில் இருக்குமாம்.நல்ல கேரக்டர், குத்தாட்டம், கிளாமர் என அத்தனையையும் சம அளவில் கலந்து, ரசிகர்களை தொடர்ந்து தன்பக்கம் ஈர்த்துக்கொள்ளும் வகையில், தனது கதாபாத்திரங்களை செலக்ட் செய்து அசத்தப் போகிறாராம் த்ரிஷா. தனது சம்பளத்தையும் கூட தெளிவாக வகுத்து விட்டார். தமிழ்ப் படத்தில் நடிக்க 50 லகரம் சம்பளமாம், தெலுங்கு என்றால் 75லகரமாம்.தெலுங்கில் ரூ. 1 கோடியை நோக்கி தனது ரேட்யை எகிற வைத்த த்ரிஷா, இனிமேலும் சம்பளத்தை குண்டக்க மண்டக்கஉயர்த்துவதில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டாராம். எல்லாம் போட்டிகள் தான் காரணம் என்கிறார்கள்.அதே போல தெலுங்கில் காசுக்கு ஆசைப்பட்டு ஏகப்பட்ட படங்களை கமிட் செய்து கொண்டு, குப்பாச்சு, குழப்பாச்சு என்றுகுழம்பித் தவிப்பதற்குப் பதில் இவ்வாறு தானே ஒரு கட்டுப்பாட்டைக் போட்டுக் கொள்வது ரொம்பவும் நிம்மதி தரும் என்பதால்இந்த முடிவாம்.இப்போது தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் ஆதி படம் வழக்கம்போல் பெரிய ஹிட் ஆகும் என நம்பும் த்ரிஷா, இப்படம்மூலம் தமிழில் தன்னை முழுமையாக நிலை நிறுத்தும் மூடில் இருக்கிறார்.அதேபோல தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடிக்கப் போகும் படமும், தனது தெலுங்கு மார்க்கெட்டை இன்னும் ஸ்டிராங் ஆக்கும்என்று தெம்பாகாக இருக்கிறார் த்ரிஷா.எல்லாம் கிழக்குக் கடற்கரைச் சாலையும், கேரளக் குவியல்களும் செய்யும் வேலை.இன்னொரு விஷயம் தெரியுமோ, சிவாஜி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்காததால் மிகவும் நொந்து போயிருந்த த்ரிஷா அதுதொடர்பாக ரஜினியிடமே வருத்தத்தைத் தெரிவித்தாராம். உடனே, உனக்கு ஒரு ஸ்வீட் ஷாக் தருகிறேன் என்று சொன்னாராம்ரஜினி.சொன்னபடியே சிரஞ்சீவியிடம் பேசி, அவரது அடுத்த படத்தில் த்ரிஷாவை புக் செய்ய வைத்தாராம். இதை சொல்லிச் சொல்லிமகிழ்கிறார் த்ரிஷா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

படு வேகத்தில் உச்சாணிக்குப் போன நேரத்தில், ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் அடிபட்டு அடிபட்டு வெறுத்துப்போன த்ரிஷா இப்போது தனது பழைய மகிழ்ச்சிக்குத் திரும்பி, புத்தணர்வுடன் புது நடை போட ஆரம்பித்துள்ளார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நாயகியாகத் திகழும் த்ரிஷா, தனக்கு எதிராக குவிந்து வரும் கேரளத்து போட்டிநாயகிகளை சமாளிக்க பல்வேறு வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளார்.

இந்தப் புத்தாண்டு முதல் புதிய த்ரிஷாவைக் காணப் போகிறீர்கள் என்று தன்னை சந்திப்பவர்களிடம் எல்லாம் சொல்லி வருகிறார்.அப்படி என்னதான் செய்யப் போகிறாராம்?


இந்த வருஷம் முதல் தமிழ், தெலுங்கு சினிமாக்களுக்கு சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாராம் த்ரிஷா. அதாவதுதமிழில் இரண்டு படங்கள், அதேபோல தெலுங்கில் இரண்டு படங்களில் மட்டும் நடிப்பாராம். ஆண்டுக்கு நாலு படத்தில் மட்டும்நடித்தாலும், நாலும் நச்சென்று ரசிகர்களை கவரும் வகையில் இருக்குமாம்.

நல்ல கேரக்டர், குத்தாட்டம், கிளாமர் என அத்தனையையும் சம அளவில் கலந்து, ரசிகர்களை தொடர்ந்து தன்பக்கம் ஈர்த்துக்கொள்ளும் வகையில், தனது கதாபாத்திரங்களை செலக்ட் செய்து அசத்தப் போகிறாராம் த்ரிஷா.

தனது சம்பளத்தையும் கூட தெளிவாக வகுத்து விட்டார். தமிழ்ப் படத்தில் நடிக்க 50 லகரம் சம்பளமாம், தெலுங்கு என்றால் 75லகரமாம்.


தெலுங்கில் ரூ. 1 கோடியை நோக்கி தனது ரேட்யை எகிற வைத்த த்ரிஷா, இனிமேலும் சம்பளத்தை குண்டக்க மண்டக்கஉயர்த்துவதில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டாராம். எல்லாம் போட்டிகள் தான் காரணம் என்கிறார்கள்.

அதே போல தெலுங்கில் காசுக்கு ஆசைப்பட்டு ஏகப்பட்ட படங்களை கமிட் செய்து கொண்டு, குப்பாச்சு, குழப்பாச்சு என்றுகுழம்பித் தவிப்பதற்குப் பதில் இவ்வாறு தானே ஒரு கட்டுப்பாட்டைக் போட்டுக் கொள்வது ரொம்பவும் நிம்மதி தரும் என்பதால்இந்த முடிவாம்.

இப்போது தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் ஆதி படம் வழக்கம்போல் பெரிய ஹிட் ஆகும் என நம்பும் த்ரிஷா, இப்படம்மூலம் தமிழில் தன்னை முழுமையாக நிலை நிறுத்தும் மூடில் இருக்கிறார்.


அதேபோல தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடிக்கப் போகும் படமும், தனது தெலுங்கு மார்க்கெட்டை இன்னும் ஸ்டிராங் ஆக்கும்என்று தெம்பாகாக இருக்கிறார் த்ரிஷா.

எல்லாம் கிழக்குக் கடற்கரைச் சாலையும், கேரளக் குவியல்களும் செய்யும் வேலை.

இன்னொரு விஷயம் தெரியுமோ, சிவாஜி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்காததால் மிகவும் நொந்து போயிருந்த த்ரிஷா அதுதொடர்பாக ரஜினியிடமே வருத்தத்தைத் தெரிவித்தாராம். உடனே, உனக்கு ஒரு ஸ்வீட் ஷாக் தருகிறேன் என்று சொன்னாராம்ரஜினி.

சொன்னபடியே சிரஞ்சீவியிடம் பேசி, அவரது அடுத்த படத்தில் த்ரிஷாவை புக் செய்ய வைத்தாராம். இதை சொல்லிச் சொல்லிமகிழ்கிறார் த்ரிஷா.

Read more about: trishas new year resolutions

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil