»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
த்ரிஷாவின் கால்ஷீட் காட்டில் அடை மழை பெய்து வருவது தெரிந்த செய்தி. புதிய செய்தி, அவரை ஹீரோயினாக போடஹீரோக்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறதாம்.

தெலுங்கில் "கோடி தருவதால் தமிழை விட தெலுங்குக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் த்ரிஷா. பிறந்தவீட்டை மறக்கக் கூடாது என்பதற்காக தமிழிலும் அவ்வப்போது தலை காட்டி வருகிறார்.

தெலுங்கில் படு பிசியாக இருக்கும் த்ரிஷாவுக்கு இப்போது தமிழில் ஹீரோக்கள் மத்தியில் பயங்கர கிரேஸ் ஏற்பட்டுள்ளது.த்ரிஷாவுடன் ஜோடி போட ஹீரோக்கள் கடுமையாக முயற்சித்து வருகிறார்கள்.

அப்படித்தான் இப்போது இரண்டு புதிய வாய்ப்புகள் வந்து த்ரிஷாவை திருகி வருகின்றன. முதல் வாய்ப்புஏ.எம்.ரத்னத்திடமிருந்து வந்துள்ளது. இரண்டாவது வாய்ப்பு கவிதாலயாவிடமிருந்து வந்துள்ளது.

விஜய்யை வைத்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் த்ரிஷாவை ஜோடியாகப் போட விஜய்யே சிபாரிசு செய்துள்ளாராம்.(மார்க்கெட்டை தக்க வைக்க வேறு வழி இல்லையோ என்னவோ)

இதனால் த்ரிஷாவை அணுகியுள்ளார் ரத்னம். அதேபோல, கவிதாலயா தயாரிப்பில் தான் நடிக்கப் போகும் புதிய படத்தில்த்ரிஷாவைப் போடுமாறு கோரியுள்ளாராம் ஜெயம் ரவி.

இரண்டு படத்தயாரிப்பாளர்களும் பெரிய ஆட்கள் என்பதால் யாருக்கு ஓகே சொல்வது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் த்ரிஷா.ரத்னம் படம் என்பதால் நிச்சயம் அது தெலுங்கிலும் டப் ஆகும் என்பதால் தனக்கு அது வசதியாக இருக்கும் என்று த்ரிஷாநினைப்பதாக கடைசியாக கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

அதேசமயம், கவிதாலயாவின் "சாமி படம்தான் தனக்கு பெரிய பிரேக் கொடுத்தது என்பதால் அதையும் தட்ட த்ரிஷாவிரும்பவில்லை. எனவே யாருக்கு கால்ஷீட் கொடுப்பது என்பதை இப்போதைக்கு முடிவு செய்யாமல் கிடப்பில் போட்டுவைத்துள்ளாராம் த்ரிஷா.

திரிசங்கு சொர்க்கத்தில் தவிப்பது என்பது இதுதானோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil