»   »  அஜாக் குஜால் ஐசக்: சப்போர்ட் தேவிப்பிரியா

அஜாக் குஜால் ஐசக்: சப்போர்ட் தேவிப்பிரியா

Subscribe to Oneindia Tamil

டிவி நடிகை தேவிப்பிரியா மணக்க இருந்த சென்னையைச் சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் ஐசக் மீது அவரது முதல் மனைவி பரபரப்பு புகார்களைசுமத்தியுள்ளார். இதையடுத்து கோழிப்பண்ணை அதிபரின் தாயாரை போலீஸார் கைது செய்தனர். ஐசக் தலைமறைவாகி விட்டார்.

பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளவர் தேவிப்பிரியா. மதுரையைச் சேர்ந்த இவர் இப்போது டிவி தொடர்களில் பிசியான நடிகையாக உள்ளார்.அண்ணாமலை, முகூர்த்தம், சொர்க்கம் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் வில்லியம் ஐசக் என்பவரைக் காதலித்த தேவிப்பிரியா வருகிற 19ம் தேதி அவரைமணந்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் வில்லியம் ஐசக் மீது அவரது முதல் மனைவி ஸ்டெல்லா போலீஸில் பரபரப்பு புகார்களைத் தெரிவித்துள்ளார். தாம்பரத்தைச் சேர்ந்தஇஸ்ரவேல் தேவதாசனின் மகள்தான் ஸ்டெல்லா. இவருக்கும் ஐசக்குக்கும் கடந்த 1999ம் ஆண்டு கல்யாணம் நடந்தது.

கல்யாணமாகி 3 மாதங்கள்தான் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். இந்த 3 மாத காலத்திற்குள் மனக் கசப்பு உருவாகி இருவரும் பிரிந்தனர். பின்னர்ஐசக்கிடமிருந்து விவாகரத்தும் பெற்றார் ஸ்டெல்லா.

அதன் பின்னர் ஐசக்குக்கு வரதட்சணையாக கொடுத்த 46 பவுன் நகைகள், 45 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திரும்பத் தரக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஸ்டெல்லா.

இந்த வழக்கில் வரதட்சணையாகக் கொடுத்த பொருட்களை திரும்பத் தருமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஐசக்கின் குடும்பம் அதைத்திருப்பித் தரவில்லை என்று தெரிகிறது.

ஐசக்கின் பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் மூக்குப்பிறி கிராமம் ஆகும். அவரது தாயார் குளோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் (மூப்பனார் கட்சி)கவுன்சிலராக இருந்தவர். இதனால் அரசியல் தொடர்புகள் அதிகம்.

அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி ஸ்டெல்லாவுக்குத் தர வேண்டிய வரதட்சணைப் பொருட்களைத் தராமல் இருந்து வந்தார். மேலும்,இதுதொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் ஸ்டெல்லா கொடுத்த புகார்களையும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தடுத்து விட்டார்.

தாம்பரம், அடையாறு மகளிர் காவல் நிலையங்கள், உயர்நீதிமன்றம், முதல்வர் அலுவலகம் என பல இடங்களிலும் ஸ்டல்ெலா முறையிட்டும்அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை.

இந் நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகினார் ஸ்டெல்லா. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஐசக், குளோரி மீது நடவடிக்கைஎடுக்க உத்தரவிட்டது. இந்த நிலையில்தான் ஐசக், நடிகை தேவிப்பிரியாவை கல்யாணம் செய்யும் தகவல் ஸ்டெல்லாவுக்குக் கிடைத்தது.

இதையடுத்து ஐசக் மீது அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ஸ்டெல்லா. இந்த முறை சுறுசுறுப்பான போலீஸார்(நீதிமன்றத்திடம் டோஸ் கிடைக்கும் என்பதால்) வழக்குப் பதிவு செய்து ஐசக்கிடம் விசாரணை நடத்தச் சென்றனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.குளோரியை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர்.

அப்போது பழைய கவுன்சிலர் நினைப்பில் அடாவடிாயக பேசியுள்ளார் குளோரி. ஆனால் அசராத போலீஸார், குளோரியைக் கைது செய்தனர்.சிறையிலும் அடைத்தனர். தாயார் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்துதம் ஐசக் தப்பி விட்டார்.

போலீஸ் நடத்திய விசாரணையின்போது ஸ்டெல்லாவைத் தவிர மேலும் 3 பெண்களை தனது மகன் ஐசக் கல்யாணம் செய்து கொண்டுள்ள குளோரிதெரிவித்துள்ளார்.

ஐசக்கின் ஆபாச போக்கு - ஸ்டெல்லா வாக்குமூலம்:

இதற்கிடையே, ஐசக்கின் குண நலன்கள் குறித்து ஸ்டெல்லா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஸ்டெல்லா கூறியுள்ளதாவது:

எனது தந்தையின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளான்விளை கிராமம். தாயார் ஊரும் அதே மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி ஆகும்.

எனது தந்தை சென்னையில் பாதிரியாராக இருந்தார். இதனால் தாம்பரத்தில் வீடு கட்டி குடியேறினோம்.

எனக்கும், ஐசக்குக்கும் கல்யாணம் ஆனபோது அவர் காண்டிராக்ட் தொழில் செய்வதாக கூறினார்கள். அவரது தாயார் குளோரி கவுன்சிலராகஇருந்தார்.

அரசியல் குடும்பம் என்பதால் எனக்கு பயமாக இருந்தது. ஆனால் எனது குடும்பத்தினர் என்னை சமாதானப்படுத்தி கல்யாணம் செய்து வைத்தனர்.முழு சம்மதம் இல்லாத நிலையில் ஐசக்கை மணந்து கொண்டேன்.

கல்யாணத்திற்குப் பிறகுதான் அவருக்கு குடிப்பழக்கம், பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் அவரது குணங்களும் படுமோசமாக இருந்தது.

கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எனது மாமியார் குளோரி எனது வீட்டுக்கு வந்து 46 பவுன் நகை போட வேண்டும். இல்லாவிட்டால்கல்யாணம் நடக்காது என்று மிரட்டினார். அதன்படி எனது தந்தையும் நகை போட்டார். அந்த நகையின் தரத்தையும் எடையையும் சோதித்துப்பார்த்து விட்டுத்தான் கல்யாணத்தை நடத்தவே சம்மதித்தார்.

எனக்கும், ஐசக்குக்கும் முதலிரவு மட்டுமே சரியாக நடந்தது. ஆனால் அடுத்த நாளே தனது ஆபாச புத்தியைக் காட்டத் தொடங்கி விட்டார். மறுவீட்டுக்கு அழைக்க வந்த ன்ெ சித்தப்பா, தம்பியை திட்டி அனுப்பி விட்டனர்.

எனது கணவரும், மாமியாரும் சேர்ந்து என்னை திட்டுவார்கள், அடிப்பார்கள். இவள் ஒரு கருப்பி, இவளை குடும்ப கவுரவுத்துக்காத்தான் கல்யாணம்செய்து வைத்தேன். நீ எத்தனை பெண்களை வேண்டுமானாலும் சின்ன வீடாக வைத்துக் கொள் என்று குளோரி தனது மகனிடம் கூறினார்.

இரவு 1 மணிக்கு மேல்தான் ஐசக் வீட்டுக்கு வருவார். வந்த பிறகும் செல்போனில் பல பெண்களுடன் பேசிக் கொண்டிருப்பார். மது அருந்தச் சொல்லிஎன்னைக் கட்டாயப்படுத்துவார், ஆபாசப் படத்தை டிவியில் போட்டு விட்டு என்னை கொடுமைப்படுத்துவார். அதில் உள்ளதைப் போல என்னையும்நடந்து கொள்ளக் கூறிக் கொடுமைப்படுத்துவார்.

எனது கணவர், மாமியார்தான் கொடுமைக்காரர்களாக இருந்தனர். ஆனால் மாமனார், கணவரின் தம்பி, தங்கை ஆகியோர் மிகவும் நல்லவர்கள்.அதனால்தான் என்னால் 3 மாதம் வரை வாழ முடிந்தது.

கல்யாணத்திற்குப் பிறகு நான் கர்ப்பம் தரித்தேன். அதையும் கலைத்து விட்டனர். இதனால்தான் நான் கோபமடைந்து விவாகரத்து கோரி பெற்றேன்.

என்னைப் போலவே மாம்பலத்தைச் சேர்ந்த ஹேமமாலினி, நடிகை தேவிப்பிரியாவின் தங்கை பிரியா ஆகியோரையும் ஐசக் பதிவுத் திருமணம்செய்துள்ளார். இப்போது தேவிப்பிரியாவையும் கல்யாணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதனால்தான் போலீஸில் புகார் கொடுத்தேன்.

அவர் நடத்தி வந்த வீடியோ கடையில் வலை பார்த்து வந்த பெண்களையும் அவர் விடவில்லை. என் கண் முன்னாலேயே அவர்களுடன் ஆபாசசெயல்களில் ஈடுபடுவார். இதுதவிர பெண்களை ஆபாசமாக படம் எடுத்து விற்பதும், இன்டர்நெட்டில் புழக்கத்தில் விடுவதையும் அவர் செய்துவந்தார் என்று கூறியுள்ளார் ஸ்டெல்லா.

ஐசக் ரொம்ப நல்லவரு-தேவிப்பிரியா:

இதற்கிடையே, ஐசக் நல்லவர் என்று நடிகை தேவிப்பிரியா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐசக் மீதான ஸ்டெல்லாவின் புகார்களில்உண்மை இல்லை. எனக்கு ஐசக் குடும்பத்தை 11 ஆண்டுகளாக தெரியும். அவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்க முயற்சித்தார்.

அதற்கு முன்பு டெலிபிலிம் ஒன்றைத் தயாரித்தார். அதில் நானும் அவரும் இணைந்து நடித்தோம். அப்போதுதான் இருவரும் நண்பர்கள் ஆனோம்.இருவரும் வாடா, போடா என்றுதான் பேசிக் கொள்வோம்.

எங்களது நட்பு காதலாக மாற இருந்த நிலையில்தான் ஸ்டெல்லாவுடன் அவருக்கு கல்யாணம் நடந்தது. இருந்தாலும் நான் எனது தாயாருடன்சென்று திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினேன்.

பின்னர் எனக்கும் இயக்குநர் சுரேஷுக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார். அதேநேரத்தில் ஸ்டெல்லாவும், ஐசக்கும்பிரிந்து விட்டனர். இதனால் ஏமாற்றத்தில் இருந்த இருவரும் இணையலாம் என ஐசக் கூறினார். நானும் ஏற்றுக் கொண்டேன்.

ஐசக்கின் தாயார் குளோரி மிகவும் நல்லவர். என்னை கல்யாணத்திற்கு முன்பே மருமகளாக ஏற்றுக் கொண்டு விட்டார் (இது எப்டி இருக்கு?). இந்தநிலையில்தான் ஸ்டெல்லா புகார் கொடுத்துள்ளார்.

அவர் கூறியபடி ஹேமமாலினியை ஐசக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஹேமமாலினிக்குகல்யாணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். இதேபோல எனது தங்கை என்று ஸ்டெல்லா கூறும் பிரியா உண்மையில் எனது தங்கையே கிடையாது.இதுதான் உண்மை.

ஐசக்கை நான் உயிருக்கு உயிரோக நேசிக்கிறேன். அவருடன் மனதளவில் குடும்பம் நடத்தி வருகிறேன். இந்தத் திருமணத்தைத் தடுக்க ஸ்டெல்லாமுட்டுக்கட்டை போட நினைக்கிறார். ஆனால் நான் ஐசக்கை கண்டிப்பாக கல்யாணம் செய்வேன் என்று கூறியுள்ளார் தேவிப்பிரியா.

ஸ்டெல்லா கொடுத்த புகாரின் பேரில் ஐசக்கை போலீஸார் தேடி வருவதால் திட்டமிட்டபடி 19ம் தேதி ஐசக், தேவிப்பிரியா கல்யாணம் நடக்குமாஎன்பது கேள்விக்குறியாகியுள்ளது.

நீச்சல் உடையில் தேவிப்ரியா-ஐசக்:

இதற்கிடையே ஐசக்குடன் தேவிப்பிரியாவும், அவரது தங்கை என்று கூறப்படும் பிரியாவும் கடற்கரையிலும், நீச்சல் குளத்திலும் நீச்சல் உடையில்கும்தலக்கா போஸ் கொடுக்கும் புகைப் படங்களும் வெளியாகியுள்ளன.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil