டி.விக்களுக்கு எதிராக முண்டா தட்டும் திரையுலகம் தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு எதிராக, குறிப்பாக சன் டிவிக்கு, எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும்வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு இணைந்து பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளன.தமிழில் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகள் இருந்தாலும் சன் டிவிதான் அனைத்துத் துறையிலும் ஏகபோக ஆதிக்கம்செலுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் தயாராகும் முக்கால்வாசித் திரைப்படங்களை பூஜையன்றே வாங்கி விடும் வழக்கத்தையும்சன் டிவி வைத்துள்ளது.இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே புதிதாக வெளியான படங்களில் முக்கால்வாசிப் படங்கள் சன் டிவியிடம்தான்உள்ளது. மேலும், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று சொல்லி அவ்வப்போது புத்தம் புதுத்திரைப்படங்களைப் போடுவதாலும், சன் டிவியின் உப நிறுவனமான கே.டிவி காராணமாகவும் திரையரங்குகளில் பெருமளவில்வசூல் பாதிக்கப்படுவதாக திரையுலகினர் புலம்புகின்றனர். (காசுக்காக படத்தை டிவியிடம் விற்பதும் இவர்கள் தான்)இருந்தாலும், சன் டிவியின் வேகத்திற்குத் தடை போட முடியாமல் திரையுலகினர் திகைத்து வந்தனர். இந் நிலையில் கோலிவுட்வரலாற்றில் முதல் முறையாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பளர் சங்கமும், வினியோகஸ்தர்கள் சங்கம் சேர்ந்து சில அதிரடிமுடிவுகளை அறிவித்துள்ளன.இதனால் தனியார் தொலைக்காட்சிகள் கடுமையாக பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. இரு அமைப்பின் கூட்டுக் கூட்டம் சென்னை திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமுடிவுகள்:1. தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள 15 பெரிய நடிகர்கள், நடித்த திரைப்படங்கள், அத்திரைப்படம் வெளியாகி 3ஆண்டுகளுக்குப் பிறகுதான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். ரைட்ஸை விற்கும்போது இதுதொடர்பாக ஒப்பந்தத்தில்கையெழுத்துப் பெறப்படும்.2. மற்ற நடிகர்கள் (அப்பாஸ், குணால், பிரபு, முரளி போன்றோர்) நடித்த படங்களை படம் வெளியான தேதியிலிருந்து ஒருஆண்டுக்குப் பின்னர்தான் டிவியில் ஒளிபரப்ப வேண்டும்.3. டாப் 10, சூப்பர் டென் என்ற பெயரில் திரைப்படப் பாடல்களை வரிசைப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு இனிமேல் பாடல்காட்சிகள் வழங்கப்படாது. அதேபோல திரை விமர்சனம் நிகழ்ச்சிக்கும் படக் காட்சிகள் வழங்கப்பட மாட்டாது. இந்த இருநிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சி நிறுவனங்கள் அறவே ஒழித்து விட வேண்டும். (படம் நல்லா இல்லை என்று சொல்லகூடாதாம்)4. நடிகர், நடிகையர் தொலைக்காட்சிகள், இணையத் தளங்கள், வேறு மீடியாக்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது. டிவிநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் கூடாது. அரசு விழா அல்லது ஆடியோ கேசட் வெளியீட்டு விழா என்றால் தொகுத்துவழங்கத் தடை இல்லை.5. தொலைக் காட்சிகளுக்கு இனிமேல் அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரையிலான படக் காட்சிகளே வழங்கப்படும்.6. நடிகர்களின் மார்க்கெட் நிலவரத்தை மதிப்பிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு நடிகரின்மார்க்கெட் மதிப்பை அறிய 8 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்தக் குழு ஆறு மாதத்திற்கு ஒருமுறை கூடி நடிகர்களின்மார்க்கெட் மதிப்பை ஆராயும். அதன் அடிப்படையில் அவர்களது படத்தை சின்னத் திரையில் வெளியிடுவதற்குரிய காலஅவகாசத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்.இந்தத் தீர்மானங்கள் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்றுவர்ணிக்கப்படுகிறது. குறிப்பாக சன்டிவி மற்றும் கேடிவி ஆகியவற்றுக்கு பெரும் அடியாக அமையும்.டிவிகளில் ஒளிபரப்பாகும் திரை விமர்சனங்கள் மற்றும் பாடல்களை வரிசைப்படுத்தும் நிகழ்ச்சிகள் மிகவும் பாரபட்சமாகஇருப்பதாகவும், பிடித்தவர், பிடிக்காதவர் என்று பாகுபாடு பார்த்து விமர்சிக்கப்படுவதாகவும் திரையுலகில் நீண்ட காலமாக புகார்உள்ளது.இதைக் கருத்தில் கொண்டே டிவிகளுக்கு பாடல் காட்சிகளே கிடையாது என்ற அதிரடியான முடிவை தயாரிப்பாளர்கள் மற்றும்வினியோகஸ்தர்கள் எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.மேலும் நடிகர்களின் மார்க்கெட் மதிப்பை ஆராய குழு நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதும் முக்கியத்துவம் பெறுகிறது.நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்க தயாரிப்பாளர்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். ஆனாலும் ஒரு சில தயாரிப்பாளர்கள்,தேவையில்லாமல் சம்பளத்தைக் கொட்டிக் கொடுப்பதன் காரணமாகவே நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளவிரும்பவில்லை.இந் நிலையில் மார்க்கெட் மதிப்பை ஆராயும் முடிவு, நடிகர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை என்றேகருதப்படுகிறது. இப்போதைக்கு அவர்களின் படங்கள் டிவியில் எப்போது ஒளிபரப்பாகலாம் என்பதை நிர்ணயிப்பதற்கானஅளவுகோல் என்று தயாரிப்பாளர்கள் கூறினாலும், எதிர்காலத்தில் நடிகர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கவும் இந்த ஸ்கேல்பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.இந்தக் கூட்டத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

By Staff
தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு எதிராக, குறிப்பாக சன் டிவிக்கு, எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும்வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு இணைந்து பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளன.

தமிழில் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகள் இருந்தாலும் சன் டிவிதான் அனைத்துத் துறையிலும் ஏகபோக ஆதிக்கம்செலுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் தயாராகும் முக்கால்வாசித் திரைப்படங்களை பூஜையன்றே வாங்கி விடும் வழக்கத்தையும்சன் டிவி வைத்துள்ளது.

இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே புதிதாக வெளியான படங்களில் முக்கால்வாசிப் படங்கள் சன் டிவியிடம்தான்உள்ளது. மேலும், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று சொல்லி அவ்வப்போது புத்தம் புதுத்திரைப்படங்களைப் போடுவதாலும், சன் டிவியின் உப நிறுவனமான கே.டிவி காராணமாகவும் திரையரங்குகளில் பெருமளவில்வசூல் பாதிக்கப்படுவதாக திரையுலகினர் புலம்புகின்றனர். (காசுக்காக படத்தை டிவியிடம் விற்பதும் இவர்கள் தான்)

இருந்தாலும், சன் டிவியின் வேகத்திற்குத் தடை போட முடியாமல் திரையுலகினர் திகைத்து வந்தனர். இந் நிலையில் கோலிவுட்வரலாற்றில் முதல் முறையாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பளர் சங்கமும், வினியோகஸ்தர்கள் சங்கம் சேர்ந்து சில அதிரடிமுடிவுகளை அறிவித்துள்ளன.

இதனால் தனியார் தொலைக்காட்சிகள் கடுமையாக பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளது.

இரு அமைப்பின் கூட்டுக் கூட்டம் சென்னை திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமுடிவுகள்:

1. தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள 15 பெரிய நடிகர்கள், நடித்த திரைப்படங்கள், அத்திரைப்படம் வெளியாகி 3ஆண்டுகளுக்குப் பிறகுதான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். ரைட்ஸை விற்கும்போது இதுதொடர்பாக ஒப்பந்தத்தில்கையெழுத்துப் பெறப்படும்.

2. மற்ற நடிகர்கள் (அப்பாஸ், குணால், பிரபு, முரளி போன்றோர்) நடித்த படங்களை படம் வெளியான தேதியிலிருந்து ஒருஆண்டுக்குப் பின்னர்தான் டிவியில் ஒளிபரப்ப வேண்டும்.

3. டாப் 10, சூப்பர் டென் என்ற பெயரில் திரைப்படப் பாடல்களை வரிசைப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு இனிமேல் பாடல்காட்சிகள் வழங்கப்படாது. அதேபோல திரை விமர்சனம் நிகழ்ச்சிக்கும் படக் காட்சிகள் வழங்கப்பட மாட்டாது. இந்த இருநிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சி நிறுவனங்கள் அறவே ஒழித்து விட வேண்டும். (படம் நல்லா இல்லை என்று சொல்லகூடாதாம்)

4. நடிகர், நடிகையர் தொலைக்காட்சிகள், இணையத் தளங்கள், வேறு மீடியாக்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது. டிவிநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் கூடாது. அரசு விழா அல்லது ஆடியோ கேசட் வெளியீட்டு விழா என்றால் தொகுத்துவழங்கத் தடை இல்லை.

5. தொலைக் காட்சிகளுக்கு இனிமேல் அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரையிலான படக் காட்சிகளே வழங்கப்படும்.

6. நடிகர்களின் மார்க்கெட் நிலவரத்தை மதிப்பிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு நடிகரின்மார்க்கெட் மதிப்பை அறிய 8 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்தக் குழு ஆறு மாதத்திற்கு ஒருமுறை கூடி நடிகர்களின்மார்க்கெட் மதிப்பை ஆராயும். அதன் அடிப்படையில் அவர்களது படத்தை சின்னத் திரையில் வெளியிடுவதற்குரிய காலஅவகாசத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்.

இந்தத் தீர்மானங்கள் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்றுவர்ணிக்கப்படுகிறது. குறிப்பாக சன்டிவி மற்றும் கேடிவி ஆகியவற்றுக்கு பெரும் அடியாக அமையும்.

டிவிகளில் ஒளிபரப்பாகும் திரை விமர்சனங்கள் மற்றும் பாடல்களை வரிசைப்படுத்தும் நிகழ்ச்சிகள் மிகவும் பாரபட்சமாகஇருப்பதாகவும், பிடித்தவர், பிடிக்காதவர் என்று பாகுபாடு பார்த்து விமர்சிக்கப்படுவதாகவும் திரையுலகில் நீண்ட காலமாக புகார்உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டே டிவிகளுக்கு பாடல் காட்சிகளே கிடையாது என்ற அதிரடியான முடிவை தயாரிப்பாளர்கள் மற்றும்வினியோகஸ்தர்கள் எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

மேலும் நடிகர்களின் மார்க்கெட் மதிப்பை ஆராய குழு நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதும் முக்கியத்துவம் பெறுகிறது.நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்க தயாரிப்பாளர்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். ஆனாலும் ஒரு சில தயாரிப்பாளர்கள்,தேவையில்லாமல் சம்பளத்தைக் கொட்டிக் கொடுப்பதன் காரணமாகவே நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளவிரும்பவில்லை.

இந் நிலையில் மார்க்கெட் மதிப்பை ஆராயும் முடிவு, நடிகர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை என்றேகருதப்படுகிறது. இப்போதைக்கு அவர்களின் படங்கள் டிவியில் எப்போது ஒளிபரப்பாகலாம் என்பதை நிர்ணயிப்பதற்கானஅளவுகோல் என்று தயாரிப்பாளர்கள் கூறினாலும், எதிர்காலத்தில் நடிகர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கவும் இந்த ஸ்கேல்பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Read more about: kollywood vs satellite tvs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X