மிஸ் சின்னத்திரையாக ஸ்வேதா தேர்வு-தேவிப்பிரியாவுக்கு 3வது இடம்

By Sudha

Devipriya
சென்னையில் நடந்த மிஸ் சின்னத்திரை 2010 அழகிப் போட்டியில் ஸ்வேதா முதலிடத்தைப் பிடித்தார். 3வது இடம் நடிகை தேவிப்பிரியாவுக்குக் கிடைத்தது.

2010ம் ஆண்டிற்கான சின்னத்திரை அழகி போட்டி சென்னையில் நடிகர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களான விலாசினி, மோனிகா, லாவண்யா, மோபின், ஸ்வேதா, காயத்ரி, தேவிப்பிரியா, மணிமேகலை, அன்னபூரணி, ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

3 சுற்றுக்களாக போட்டி நடந்தது. முதலில் சேலை அணிந்தபடியும், பின்னர் மேற்கத்திய உடைகளிலும் அழகிகள் நடைபோட்டனர். அவர்களிடம் நடுவர்களாக கலந்து கொண்ட நடிகை சமீதா, நடிகர் நட்ராஜ், டைரக்டர் ரவிமரியா, ஆடை அலங்கார நிபுணர் சுனில்மேனன், மிஸ் சென்னை திவ்யா, அழகுகலை நிபுணர் மது ஆகியோர் தனித் தனியாக கேள்விகள் கேட்டனர்.

இதன் அடிப்படையில் 2010ம் ஆண்டு சின்னத்திரை அழகியாக ஸ்வேதா தேர்வானார். இவருக்கு நடிகை கீர்த்தி சாவ்லா கிரீடம் சூட்டினார்.

2வது இடம் ரஜினிக்கும், 3வது இடம் நடிகை தேவிப்பிரியாவுக்கும் கிடைத்தது.

கூந்தல் அழகியாக மணிமேகலை, மெல்லிய தோல் அழகியாக லாவண்யா, அழகான உடல்வாகு உடையவராக விலாசினி, போட்டோ முக அழகியாக அன்னபூரணி, அழகான முக அழகியாக மோனிகா, திறமையாளராக மோபின், அழகான கண் அழகியாக காயத்ரி ஆகியோர் தேர்வானார்கள்.

நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை,நடன நிகழ்ச்சிகளும் களை கட்டின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X