For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |

  நடிகை ராதிகா தயாரித்து, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணாமலை டிவி சீரியலில் நடித்து வரும் அனிதாமாத்யூஸ் என்ற நடிகையை இயக்குனரும், அவரது தூண்டுதலின் பேரில் உடன் நடிக்கும் நடிகரும் அடித்துதுன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

  சன் டிவியில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகா சீரியல்அண்ணாமலை. நடிகை ராதிகாவின் ரேடன் டிவி இந்த சீரியலைத் தயாரித்து ஒளிபரப்பாகி வருகிறது.

  அவரது முந்தையை தொடரான சித்தி அளவுக்கு இதுவும் பாப்புலராகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்எதிர்பார்ப்பை விட மிகவும் மோசமான நலையில் இந்த தொடர் சென்று கொண்டுள்ளது.

  இந் நிலையில், அண்ணாமலை தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவர், அண்ணாமலை இயக்குனர் சி.ஜே. பாஸ்கர்மற்றும் உடன் நடிக்கும் நடிகர் நந்தகுமார் குறித்து பரபரப்பான புகார் கூறியுள்ளார்.

  சென்னை தூர்தர்ஷன் டிவியில் ஆரம்பகாலத்தில் இருந்து நடித்து வருபவர் அனிதா மாத்யூஸ். தூர்தர்ஷனில் ஏகிரேட் ஆர்ட்டிஸ் என்ற தகுதியுடன் இருப்பவர் இவர்.

  அண்ணாமலை தொடரில் செட்டியார் என்ற கதாபாத்திரத்தின் மனைவியாக நடித்து வருகிறார். நேற்று இவர்பரபரப்பான பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

  கே.பாலச்சந்தரின் தொடர்கள் உள்பட இதுவரை 45 க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளேன்.சிலபடங்களிலும் நடித்துள்ளேன்.

  அண்ணாமலை தொடரில் நந்தகுமார் என்பவருக்குச் ஜோடியாக நடித்து வருகிறேன். கடந்த 7ம் தேதிசைதாப்பேட்டை ரேகா ஹவுஸில் ஷூட்டிங் நடந்தது. தாமதமாக கார் அனுப்பியதால் நானும் படப்பிடிப்பில்தாமதமாக கலந்து கொள்ள நேரிட்டது.

  ஆனால் ரேகா ஹவுஸ் போய் சேர்ந்ததும் டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் பலரின் முன்னிலையில் என்னைத் தாறுமாறாகதிட்டத் தொடங்கினார். சம்பள பாக்கி கொடுத்தால்தான் ஷூட்டிங் வருவாயா, நீ என்ன பெரியா ஆளா என்றுஒருமையில் திட்ட ஆரம்பித்தார்.

  இதையடுத்து, கம்பெனி சம்பந்தமான விவகாரங்களில் நீங்கள் தலையிட வேண்டாம். நடிப்பு சம்பந்தமாக மட்டும்பேசுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் இனிமே சம்பளம் என்று வாயைத் திறந்தால் சீரியலை விட்டு தூக்கிவிடுவேன் என்று எச்சரித்தார்.

  பலர் முன்னிலையில் திட்டியதால் அவமானமடைந்த நான் அவருக்கு கடுமையாகவே பதில் தந்தேன். இதனால்எனக்கு அன்று முழுவதும் நடிக்க வாய்ப்பு தராமல் வெறுமனே உட்கார வைத்து விட்டார்.

  அன்று இரவு மீண்டும் ஷூட்டிங்கிற்குக் கூப்பிட்டார். நந்தகுமார் என்னை அடிப்பது போன்ற காட்சியைவேண்டுமென்றே படமாக்கினார். அப்போது நந்தகுமார் வேண்டும் என்றே என்னே மிக வேகமாக அடித்தார்.

  அடிப்பது போலத்தான் நடிக்க வேண்டிய நீங்கள் ஏன் என்னை வேண்டும் என்றே அடித்தீர்கள் என்றுநந்தகுமாரிடம் கேட்டேன்.

  அதற்கு நந்தகுமார், நான் அடிக்கும் போது நீங்கதான் விலகிப் போயிருக்க வேண்டும். அதை விட்டு அடித்துவிட்டீர்களே என்று கேட்டால் எப்படி என்று கூறிவிட்டு ஒரு ஸாரி கூட சொல்லாமல் போய் விட்டார்.

  டைரக்டர் பாஸ்கர் தூண்டிவிட்டுத் தான் அவர் என்னை அடித்ததார்.

  இந் நிலையில் எனது இரண்டு மாத சம்பள பாக்கிப் பணம் குறித்து ரேடன் நிறுவனத்தில் கேட்டபோது, 14ம் தேதிவந்து விடுங்கள் செக் தருகிறோம் என்று கூறினார்கள்.

  இதையடுத்து 14ம் தேதி ஷூட்டிங்கிற்குப் போனேன். அன்றும் நந்தகுமார் என்னை அடிப்பது போல காட்சிஅமைத்தார்கள். அன்றும் நந்தகுமார் என்னை வேண்டும் என்றே மீண்டும் அறைந்தார். இதனால் எனக்குஅழுகையே வந்து விட்டது.

  அப்போது, இதெல்லாம் ஒரு நடிப்பா, உன்னைப் போய் யார் புக் செய்தார்கள் என்று டைரக்டர் பாஸ்கர் மறுபடியும்தாறுமாறாக திட்டினார்.

  எல்லார் முன்பும் நான் அவமானப்பட வேண்டும் என்பதற்காகவே நந்தகுமார் மூலம் பாஸ்கர் தனது கோபத்தைத்தீர்த்துக் கொண்டார் என்பதை புரிந்து கொண்டேன். இருந்தாலும் ராதிகாவுக்காக பொறுத்துக் காண்டேன்.

  இன்னொரு நாள் கோவிலில் அங்கப் பிரதட்சனம் செய்வது போல நடிக்கச் சொன்னார்கள். ஆனால்முதுகெலும்பில் ஆபரேஷன் செய்துள்ளதால் அப்படி நடிக்க இயலாது என்று கூறினேன்.

  அப்போது என்னிடம் வந்த டைரக்டர் பாஸ்கர், எனக்கு பிராந்தி வாங்கிக் கொடு. இல்லாவிட்டால் காட்சியை மாற்றமாட்டேன் என்றார். அப்போது சிவக்குமார் சாரும் அருகில் இருந்தார். மூத்த நடிகரான சிவக்குமார்முன்னிலையிலேயே அவர் என்னிடம் அப்படிக் கூறியது எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

  என்னை மட்டுமல்லாது, தொடரில் நடிக்கும் பல நடிகர், நடிகைகளையும் பாஸ்கர் துன்புறுத்தி வருகிறார்.ராதிகாவிடம் இதுகுறித்துத் தெரிவிக்கலாம் என்று போனால் என்னை அவர் பார்க்கவே முடியாது என்றுகூறிவிட்டார்.

  இந் நிலையில் தொடர்ந்து என்னால் நடிக்க முடியாது என்று கூறி விட்டு வந்து விட்டேன்.

  ஆனால் நான் வீட்டுக்கு வந்ததும் தொலைபேசியில் கூப்பிட்டு மிரட்டினார்கள். யாருடன் மோதுகிறாய், உயிருடன்இருக்க மாட்டாய், உன்னால் எங்களுக்கு ரூ. 2 லட்சம் நஷ்டம் ஆகி விட்டது. அதை உன்னுடைய சம்பளத்தில்கழித்து விடுவேம் என்று தாறுமாறாக மிரட்டினார்கள்.

  இதையடுத்து எனக்கு பயம் ஏற்பட்டது. தற்போது இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார்கொடுத்துள்ளேன். எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன் என்றார் அனிதா மேத்யூஸ்.

  ராதிகா தயாரிக்கும் இந்தத் தொடரின் இயக்குனர் பாஸ்கர் குறித்து ஏற்கனவே பலவாறு புகார்கள் உள்ளன. சித்திதொடர் எதிர்பாராத விதமாக நன்றாகப் போய் விட்டதால் தன்னை மிகப் பெரிய டைரக்டர் என்று அவர்நினைத்துக் கொண்டுள்ளதாகவும், இதனால், தன்னுடைய தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகளை அவர் அடிமைபோல நடத்துவதாகவும் பலரும் கூறுகின்றனர்.

  இருந்தாலும் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர்கள் அமைதி காத்து வருகின்றனர். பல நடிகர்,நடிகைகளை தன்னுடைய இஷ்டம் போல அவர் மாற்றுவதாகவும் புகார்கள் உள்ளன.

  இதற்கு முன் சீரியலில் நடித்து வந்த நடிகர் ரியாஸ் கான், இவரது அகம்பாவ போக்கு பிடிக்காத காரணத்தால்தான்பாதியிலேயே விலகி விட்டதாக கூறப்படுகிறது.

  இதே தொடரில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் இதுவரை 3 நடிகைகள் மாற்றப்பட்டுள்ளனர். இதன்பின்னணியிலும் பாஸ்கரே இருப்பதாக கூறப்படுகிறது.

  பாஸ்கரின் கடுமையான போக்குக்கு அனிதா மேத்யூஸ் முடிவு கட்டியுள்ளதாக சின்னத்திரை நட்சத்திரங்கள்நினைக்கிறார்கள்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X