உதயா-கீர்த்திகா கல்யாணம்

By Staff

படத் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனும், கிரீடம் பட இயக்குநர் விஜய்யின் அண்ணனும், நடிகருமான உதயாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.

திருநெல்வேலி படம் மூலம் நடிகரானவர் உதயா. தொடர்ந்து ஷக்கலக்க பேபி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக முயன்று அது முடியாததால் உதயாவின் மார்க்கெட் சூடுபிடிக்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் உதயாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கே.கே.ரத்னத்தின் மகள் கீர்த்திகாவுக்கு உதயாவை நிச்சயித்துள்ளனர்.

இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். உதயா, கீர்த்திகா திருமணம் வருகிற ஆகஸ்ட் 24ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. கிண்டி ரேஸ்கோர்ஸ் கிளப்பில் கல்யாணம் நடைபெறவுள்ளது.

தனக்கேற்ற பெண்ணாக பெற்றோர் கீர்த்திகாவைப் பார்த்துள்ளனர் என்று உதயா சந்தோஷம் தெரிவித்துள்ளார். கீர்த்திகாவின் வரவு, தனது திரையுலக வாழ்க்கையின் ஏற்றத்துக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆல் தி பெஸ்ட் உதயா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X