twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பீட்ரூட் உதயதாரா! நயனதாரா, கோபிகா, அசின் உள்ளிட்ட மலையாள வகையறாக்களை வீழ்த்த அதேமலையாளத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ளார் உதயதாரா. புத்தம் புதுப் புளியைப்போட்டு விளக்கி வைத்த வெண்கலக் குத்து விளக்கு மாதிரிபடு அம்சமாக இருக்கிறார் உதயதாரா. அழகான தேவதைகளை அடுத்தடுத்துஅனுப்பிக் கொண்டிருக்கும் மலையாள தேசத்திலிருந்து கோலிவுட் வந்துள்ளலேட்டஸ்ட் நேந்திரன் பழம்தான் உதயதாரா.நயனதாரா எடுப்பு, கோபிகா அழகு, அசின் வடிவு என அத்தனை முன்னணிநடிகைகளின் கலவையாக படு கலக்கலாக இருக்கும் உதயதாரா, கண்ணும் கண்ணும்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் டப்பு சேர்க்க வந்துள்ளார்.ஆண், பெண் உறவுகளுக்கான நாகரீக எல்லைக்கோடு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கும் அபாய கட்டத்தில், அதைப் புதுப்பிக்கும் வகையில் உருவாகும்படம்தானாம் கண்ணும் கண்ணும்.கலாசார மரியாதையையும், மனித நேயம் மிக்க காதலை சொலவதுதான் கண்ணும்கண்ணும் படத்தின் கதையாம். கத்தியின்றி, ரத்தமின்றி நடக்கும் ஒரு காதல்யுத்தம்தான் இந்த படம்.நிறைவேறிய காதல் வாழக்கையாகிறது. நிறைவேறாத காதல் காவியமாகிறது என்றகருவை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.உதயதாராவுக்கு இதில் ஜோடி போடுபவர் பிரசன்னா நடிக்கிறார்.படத்தின் விசேஷம் என்னன்னா, உடும்பன் என்ற கதாபத்திரத்தில் வடிவேல்அட்டகாசமாக காமெடி செய்துள்ளாராம்.கவித்துவமான இந்த காதல் படத்தில், வைரமுத்து எழுதிய 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. வாராயோ தோழி வாராயோ என்ற பாடலைப் போல் ஒரு கல்யானபாடல் இந்த படத்தில் இடம் பெறுகிறது.குற்றாலம் குற்றாலம் எங்கும் கலக்க மத்தாளம் கொட்டி முழக்க என்ற அந்தபாடலை ஹரீஸ் ராகவேந்திராவும் குழுவினரும் பாடியுள்ளனர்.தினா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் கவனிக்கிறார். ராஜ்கிரண்,எஸ்ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்த ஜி.மாரிமுத்து கதை,திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.ஏங்க உதயதாரா, நயனதாரா உங்களுக்கு அக்காவா,தங்கச்சியா என்று கேட்டால்விழிவிழியென முழிக்கிறார். ஏன்அப்படி என்று காதலுக்கு மரியாதை ஷாலினி மாதிரிஒன்னும் புரியாமல் பதில் கேள்வி கேட்ட உதயாவிடம்,நயனதாரா மாதிரி உங்க பேருலயும் தாரா இருக்கே என்று வெளக்கம் சொன்னால்ஹையோ என்று ரொம்ப வெட்கப்பட்டு சிரிக்கிறார்.அவருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லா. நான் நல்லா நடிப்பேன், கதைக்குப்பொருத்தமான கிளாமர் என்றால் ஓ.கே. நல்ல படங்களில் நடிப்பதுதான் என் லட்சியம்என்று பூ மாதிரி பேசுகிறார்.நயனதாராவை பீட் பண்ண வந்திருக்கும் இந்த கேரளத்து பீட்ரூட், எத்தனைஇளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கப் போகிறதோ!

    By Staff
    |

    நயனதாரா, கோபிகா, அசின் உள்ளிட்ட மலையாள வகையறாக்களை வீழ்த்த அதேமலையாளத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ளார் உதயதாரா.

    புத்தம் புதுப் புளியைப்போட்டு விளக்கி வைத்த வெண்கலக் குத்து விளக்கு மாதிரிபடு அம்சமாக இருக்கிறார் உதயதாரா. அழகான தேவதைகளை அடுத்தடுத்துஅனுப்பிக் கொண்டிருக்கும் மலையாள தேசத்திலிருந்து கோலிவுட் வந்துள்ளலேட்டஸ்ட் நேந்திரன் பழம்தான் உதயதாரா.

    நயனதாரா எடுப்பு, கோபிகா அழகு, அசின் வடிவு என அத்தனை முன்னணிநடிகைகளின் கலவையாக படு கலக்கலாக இருக்கும் உதயதாரா, கண்ணும் கண்ணும்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் டப்பு சேர்க்க வந்துள்ளார்.

    ஆண், பெண் உறவுகளுக்கான நாகரீக எல்லைக்கோடு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கும் அபாய கட்டத்தில், அதைப் புதுப்பிக்கும் வகையில் உருவாகும்படம்தானாம் கண்ணும் கண்ணும்.

    கலாசார மரியாதையையும், மனித நேயம் மிக்க காதலை சொலவதுதான் கண்ணும்கண்ணும் படத்தின் கதையாம். கத்தியின்றி, ரத்தமின்றி நடக்கும் ஒரு காதல்யுத்தம்தான் இந்த படம்.

    நிறைவேறிய காதல் வாழக்கையாகிறது. நிறைவேறாத காதல் காவியமாகிறது என்றகருவை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.உதயதாராவுக்கு இதில் ஜோடி போடுபவர் பிரசன்னா நடிக்கிறார்.

    படத்தின் விசேஷம் என்னன்னா, உடும்பன் என்ற கதாபத்திரத்தில் வடிவேல்அட்டகாசமாக காமெடி செய்துள்ளாராம்.

    கவித்துவமான இந்த காதல் படத்தில், வைரமுத்து எழுதிய 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. வாராயோ தோழி வாராயோ என்ற பாடலைப் போல் ஒரு கல்யானபாடல் இந்த படத்தில் இடம் பெறுகிறது.

    குற்றாலம் குற்றாலம் எங்கும் கலக்க மத்தாளம் கொட்டி முழக்க என்ற அந்தபாடலை ஹரீஸ் ராகவேந்திராவும் குழுவினரும் பாடியுள்ளனர்.

    தினா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் கவனிக்கிறார். ராஜ்கிரண்,எஸ்ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்த ஜி.மாரிமுத்து கதை,திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.

    ஏங்க உதயதாரா, நயனதாரா உங்களுக்கு அக்காவா,தங்கச்சியா என்று கேட்டால்விழிவிழியென முழிக்கிறார். ஏன்அப்படி என்று காதலுக்கு மரியாதை ஷாலினி மாதிரிஒன்னும் புரியாமல் பதில் கேள்வி கேட்ட உதயாவிடம்,

    நயனதாரா மாதிரி உங்க பேருலயும் தாரா இருக்கே என்று வெளக்கம் சொன்னால்ஹையோ என்று ரொம்ப வெட்கப்பட்டு சிரிக்கிறார்.

    அவருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லா. நான் நல்லா நடிப்பேன், கதைக்குப்பொருத்தமான கிளாமர் என்றால் ஓ.கே. நல்ல படங்களில் நடிப்பதுதான் என் லட்சியம்என்று பூ மாதிரி பேசுகிறார்.

    நயனதாராவை பீட் பண்ண வந்திருக்கும் இந்த கேரளத்து பீட்ரூட், எத்தனைஇளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கப் போகிறதோ!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X