இயக்குநர் மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி... என்ன காரணம் ?
சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களுடைய வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கிக் கொண்டிருக்கும் படம் மாமன்னன். கடந்த மார்ச் மாதம் இதனுடைய பணிகள் தொடங்கியது
உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். முதன் முறையாக மாரி செல்வராஜின் படத்திற்கு AR ரகுமான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 23-ஆம் தேதி முடிந்துள்ளது. இன்னும் இறுதிக் கட்ட படப்பிடிப்பு மட்டுமே இருப்பதாக தயாரிப்பளர் உதயநிதி தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

மாமன்னன்
மாரி செல்வராஜ், வடிவேலு, உதயநிதி, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், AR ரகுமான் என்று முற்றிலும் சம்மந்தமே இல்லாத ஆட்கள் ஒரு படத்தில் பணிபுரிவதால், படத்தின் துவக்கத்தில் இருந்தே அதிக எதிர்ப்பார்ப்பு உண்டாகியுள்ளது. இதில் வடிவேலுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் வித்யாசமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின்
தற்சமயம் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் உதயநிதி அவர்கள் இன்னொரு பக்கம் படம் தயாரிப்பு, விநியோகம், நடிப்பு என பல்வேறு துறைகளில் பிசியாக உள்ளார். உதயநிதியின் தலையீட்டால்தான் இப்போது படங்களை விநியோகிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை என்று தயாரிப்பாளர்கள் பலர் கூறி வருகின்றனர். மாமன்னன் திரைப்படம், தான் நடிக்கும் கடைசி படமாகக் கூட இருக்கலாம், இன்னும் முடிவு செய்யவில்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்தார்உதயநிதி .

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்த கையோடு தனது சமூக வலைதளத்தில், உதயநிதி ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், இன்னும் இறுதிக் கட்ட படப்பிடிப்பு மட்டுமே இருக்கிறது. அது நடக்க கீர்த்தி சுரேஷ் மேடமும், ஃபகத் ஃபாசிலும் கால் ஷீட் தர வேண்டும். கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொடுங்கள் என்று கிண்டலடிக்கும் பாணியில் சொல்லி, ஷூட்டிங்கின் பொழுது அதிக டேக்குகள் எடுத்ததிற்காகவும், நிறைய டார்ச்சர் கொடுத்ததிற்காகவும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று மாரி செல்வராஜிடம் கூறியுள்ளார்.

வடிவேலு ரீ என்ட்ரி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாய் சேகர் ரிடர்ன்ஸ், மாமன்னன் திரைப்படங்களில் வடிவேலு நடிக்கிறார். இதில் மாமன்னன் திரைப்படம் கிராமத்துக் கதையம்சம் உள்ள படம் என்பதால் அவருடைய கதாப்பாத்திரம் வலுவாக எழுதப்பட்டுள்ளதாம். சேலத்தில் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் அவருக்கு மாலை அணிவித்து படக்குழுவினர் வரவேற்றதும், படத்தினுடைய ஃபர்ஸ்ட் லூக்கில் வடிவேலினுடைய பெயர் முதலில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











