»   »  ரகளையான உதயதாரா!

ரகளையான உதயதாரா!

Subscribe to Oneindia Tamil

நயனதாராவுக்கு கடும் போட்டியைக் கொடுக்க கேரளாவிலிருந்து கிளம்பி வந்துள்ளார் உதயதாரா.

படு பாலிஷாக இருக்கிறார் உதயதாரா. கருப்பு என்றும் சொல்ல முடியால், வெளுப்பு என்றும் எண்ண முடியாமல்ஒரு கலவையாக, படு ரகளையாக இருக்கிறார்.

முதலில் கண்ணும் கண்ணும் படத்தில் பிரன்னாவுடன் ஜோடி போட்டு நடிக்க வந்த உதயதாராவுக்கு அந்தப் படம்முடியும் முன்பே கரண் ஜோடியாக தீ நகர் படத்தில் திறமை காட்ட சான்ஸ் அடித்துவிட்டது. பளிச்சிடும் முட்டைவிழிகள், பன் பட்டர் ஜாம் போல மெத்தென இருக்கும் கன்னங்கள், விரிந்த நெற்றி, குவிந்த நாசி என ஜோராகஇருக்கிறார்.

சேலையைக் கட்டி விட்டுப் பார்த்தால் ரதம் போல அம்சமாக இருக்கிறார். மாடர்ன் டிரஸ்ஸில் ஆட விட்டுப்பார்த்தால், அப்ஸரஸ் போல அழகாக இருக்கிறார்.

உங்களது கோலிவுட் வருகையின் நோக்கம் என்னவோ என்று உதயாவிடம் கேட்டால், வேறென்ன ரசிகர்களைதூங்க விடாமல் ஏங்கச் செய்வதுதான் என்று குறும்பாக கொப்பளிக்கிறார். சிரிக்கும்போது சில்லுன்னு ஒருகுளுமை நம்மைச் சுத்தி நாட்டியமாடுவதைத் தடுக்க முடியவில்லை.

அய்யோடா என்று நாம் ஆச்சரியம் காட்டினால், பயந்துடாதீங்க. நல்ல நடிப்பைக் கொடுக்கவே இங்குவந்துள்ளேன். வெறும் கிளாமர் டால் ஆக மட்டும் நான் இருக்க மாட்டேன். நல்ல நடிப்பையும் தருவேன்.

தமிழ் சினிமா திறமையாளர்களுக்கு நல்ல தீனி கொடுக்கும் என்று கூறினார்கள். அதனால்தான் தமிழுக்குவந்துள்ளேன். தமிழில் சிறந்த நடிகை என்ற பெயரைப் பெறுவதுதான் எனது முதல் வேலை என்று படுஅடக்கமாக கூறுகிறார்.

அது ஏன் உதயதாரா என்று ஒரு பெயர்? நயனதாரவை பீட் செய்யும் எண்ணமோ என்றால் அப்படியெல்லாம்இல்லை. கேரளாவில் இதுபோல பல வகை தாராக்கள் உள்ளனர். அதில் நான் ஒரு தாரா என்று பெயர்க் காரணம்கூறுகிறார்.

Read more about: udhayatara in thee nagar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil