UK top 10-

By Staff

இங்கிலாந்தின் டாப் டென் திரைப்படங்களில் சிவாஜிக்கு 9வது இடம் கிடைத்துள்ளது.

யாராலும் முடியாத சாதனைகளை சர்வ சாதாரணமாக செய்து அசத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை இங்கிலாந்தில் எந்த இந்தியப் படமும், செய்திராத புதிய சாதனையை சிவாஜி படைத்துள்ளது.

இங்கிலாந்தின் டாப் டென் படங்களில் ரஜினியின் சிவாஜி இடம் பெற்றுள்ளது. அதில் சிவாஜிக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் டாப் டென் வரிசையில் ஒரு இந்தியப் படம், அதிலும் தமிழ்ப் படம் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

கனடாவில் சிவாஜிக்கு 2வது இடம் கிடைத்துள்ளதை ஏற்கனவே சொல்லியுள்ளோம்.

இங்கிலாந்தில் சிவாஜி பெரும் வசூல் சாதனை படைத்துள்ளதாம். இதுகுறித்து இங்கிலாந்தில் இப்படத்தைத் திரையிட்டுள்ள அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் கூறுகையில், 12 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்ட முதல் வாரத்தில் மொத்தம் ரூ. 1.37 கோடி அளவுக்கு சிவாஜி வசூல் செய்துள்ளது.

இங்கிலாந்தில் ஒரு இந்தியப் படம் இந்த அளவுக்கு வசூல் செய்துள்ளது இதுவே முதல் முறை என்கிறார்கள். தற்போது இங்கிலாந்தில் ஓடிக் கொண்டுள்ள பன்டாஸ்டிக் போர், ஓஸன்ஸ் தர்ட்டீன், பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் ஆகிய படங்களை விட சிவாஜி சிறப்பாக ஓடிக் கொண்டுள்ளது.

பன்டாஸ்டடிக் போர் படத்தின் நான்கு நாள் வசூல் ரூ. 6 லட்சத்து 33 ஆயிரத்து 210 மட்டுமே. ஆனால் சிவாஜியின் வசூல் ரூ. 11 லட்சத்து 45 ஆயிரத்து 314.

அனைத்து நாடுகளிலும் சிவாஜி வசூல் சாதனை படைத்துள்ளது. இது ரஜினி என்ற பெயருக்காக கிடைத்த வசூல். தமிழ் சினிமாவுக்கு சர்வதேச சந்தையில் புதிய வழியைக் காட்டியுள்ளார் ரஜினி. ஜெர்மனியில், சிவாஜிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது என்கிறார் அய்ங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தி.

சென்னையில் இதுவரை ரூ.3 கோடி வசூல்!:

தலைநகர் சென்னையில், சிவாஜி படம் இதுவரை ரூ. 3 கோடியை வசூல் செய்துள்ளதாம். இதுகுறித்து சென்னை நகர விநியோகஸ்தரான அபிராமி ராமநாதன் கூறுகையில், சென்னையில் சிவாஜி ஓடும் 17 தியேட்டர்களிலும் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் திரையிடப்பட்டு இன்றுடன் ஐந்து நாட்களாகிறது. இதுவரை ரூ. 3.10 கோடி அளவுக்கு வசூலாகியுள்ளது. எனது 34 ஆண்டு கால திரையுலக வரலாற்றில், இப்படி ஒரு கூட்டத்தையும், வசூலையும் கண்டதே இல்லை.

அதிக பணம் கொடுத்து நான் (ரூ. 6.7 கோடி) சிவாஜியை வாங்கியது குறித்து பலரும் கவலைப்பட்டனர், கேலி செய்தனர். ஆனால் ரஜினியின் சக்தி எனக்குத் தெரியும். ரஜினி படத்துக்காக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

அபிராமி மெகா மாலில், நேற்று மீண்டும் முன்பதிவு கவுண்டரைத் திறந்துள்ளோம். ஜூலை முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகளை மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து சென்றனர். 10 ரூபாய் டிக்கெட்டுக்களைப் பெறுவற்காக இரவு முதலே ரசிகர்கள் காத்திருந்து வாங்கிச் சென்றனர் என்றார்.

ஆனால் புறநகர்ப் பகுதிகளில் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. தியேட்டர்காரர்களே பிளாக்கில் டிக்கெட்டுக்களை விற்று காசு பார்த்து வருகின்றனர். ரூ. 200 முதல் 300 ரூபாய் வரை கள்ளச் சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன.

சிவாஜியைரப் பார்த்தால்தான் விமோச்சனம் என்று சிலர் நினைப்பதால் தியேட்டர்கள் முன்பு கூடும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் இருக்கிறது.

பாஸ்டனில் புது சாதனை:

அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலும் சிவாஜி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு பாஸ்டன் பகுதியில் ஒரு தமிழ்ப் படத்துக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை. பாஸ்டனா, சென்னையா என்று சந்தேகப்படும் அளவுக்கு கூட்டம் கட்டி ஏறி காதைக் கிழிக்கிறது.

பாஸ்டன் தமிழ் மையம் சார்பில், சிவாஜி அங்கு திரையிடப்பட்டுள்ளது. படத்தின் மூலம் கிடைக்கும் அனைத்துத் தொகையும் பாஸ்டன் தமிழ் மையத்தின் வளர்ச்சிகாக பயன்படுத்தப்படவுள்ளது.

காம்பிரிட்ஜ், பெல்மாண்ட், மேற்கு நியூட்டன் ஆகிய மூன்று மையங்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது.

பஹ்ரைனில் விறுவிறுப்பு ..

இதேபோல வளைகுடா நாடான பஹ்ரைனிலும் சிவாஜி அலை படு வேகமாக இருக்கிறது. முதலில் அங்குள்ள அல் ஹம்ரா தியேட்டரில் மட்டும் திரையிடப்பட்டது. ஆனால் கூட்டத்தைப் பார்த்ததும், அவால் சினிமா தியேட்டரில் கூடுதலாக சிவாஜி திரையிடப்பட்டுள்ளது.

இரண்டு தியேட்டர்களிலும் தலா நான்கு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. நான்கு காட்சிகளுமே ஹவுஸ் புல்லாக இருக்கிறதாம்.

பஹ்ரைனில் இந்தியப் படம் ஒன்று ஒரு தியேட்டருக்கு மேல் திரையிடப்பட்டது இதுவே முதல் முறையாம். அதேபோல ஒரு காட்சி மட்டுமே திரையிடுவார்களாம். ஆனால் சிவாஜி, இரண்டு தியேட்டர்களிலும் அனைத்துக் காட்சிகளும் திரையிடப்பட்டுள்ளது அங்குள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

இருக்கும் கூட்டத்தைப் பார்த்தால் இன்னும் ஒரு மாதத்திற்கு பஹ்ரைனில் சிவாஜி ஓடும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X