twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செட்டில் ஆகும் உமா அந்தக் கால நடிகை சுமித்ராவின் மூத்த மகள்தான் உமா. சீமான் இயக்கத்தில் வீரநடைஎன்ற படம் மூலம் அறிமுகமான உமா, கவர்ச்சி காட்டாமலேயே கோலிவுட்டில் ஒருரவுண்டு வந்து விட்டார்.தங்கர் பச்சானின் இயக்கத்தில் நடித்த தென்றல், உமாவுக்கு புதிய மார்க்கெட்டைஏற்படுத்திக் கொடுத்தது. அதற்கு முன்பு உப்புச் சப்பில்லாத கேரக்டர்களில் நடித்துவந்த உமா, தென்றலுக்குப் பிறகு கேரக்டர்களை செலக்ட் செய்து நடிக்க ஆரம்பித்தார்.தொடர்ந்து சொக்கத் தங்கம் படத்தில் விஜயகாந்த்தின் தங்கையாக வந்து ரசிகர்களைநடிப்பால் கவர்ந்தார். கவர்ச்சி காட்டவே மாட்டேன் என்று வைராக்கியமாக இருந்துவந்த உமா, தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுத்தார்.சூரி, கடல் பூக்கள், அமுதே ஆகியவை உமா நடித்த சில படங்கள்.தற்போது தமிழில் இலக்கணம், ரசிகர் மன்றம் என இரு படங்களில் நடித்து வரும்உமாவுக்கும், அவரது தூரத்து உறவினர் துஷ்யந்த் என்பவருக்கும் திருமணம்நிச்சயிக்கப்பட்டுள்ளது. துஷ்யந்த், மும்பையில் சாப்ட்வேர் என்ஜீனியராகஇருக்கிறார்.உமா-துஷ்யந்த் திருமணம் ஜூன் 15ம் தேதி இவர்களது சொந்த ஊரான பெங்களூரில்நடைபெறுகிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை சுமித்ராவும், அவரது கணவரும்,கன்னடப் படத் தயாரிப்பாளருமான ராஜேந்திர பாபு ஆகியோர் செய்து வருகிறார்கள்.திருமணத்திற்குப் பின்னர் நடிப்புக்கு விடை கொடுக்கிறார் உமா. இப்போது தாய் மொழியான கன்னடத்தில் நடித்து வரும் கள்ளரளி ஹூவாகி என்றசரித்திரப் படம்தான் உமா நடிக்கும் கடைசிப் படமாகும்.உமா திருமணமாகி சென்று விட்டாலும் கூட சுமித்ரா குடும்பத்திற்கும்திரையுலகுக்குமான பந்தம் உமாவின் தங்கை தீபிகா மூலம் தொடரும் எனத்தெரிகிறது. உமாவின் தங்கையான தீபிகா இப்போது பிளஸ்டு படித்து வருகிறார். அவரைநடிகையாக்க சுமித்ரா முடிவு செய்துள்ளார். அதற்கேற்றார்போல ஏராளமான படவாய்ப்புகள் அவரைத் தேடி வருகிறதாம். உமாவை விட படு அழகாக இருக்கிறார்தீபிகா.பிளஸ்டூ படிப்பை முடித்தவுடன் தீபிகாவை களம் இறக்க சுமித்ரா முடிவுசெய்துள்ளாராம். கல்யாணம் குறித்து உமா வெட்கத்துடன் கூறுகையில்,பெரிய நடிகை ஆக வேண்டும் என்ற கனவுடன்தான் நடிக்க வந்தேன். அந்த கனவுநனவாகவில்லை. இருந்தாலும் நல்ல நடிகை, குடும்பப் பாங்கான நடிகை, பிரச்சினைஇல்லாத நடிகை என்ற பெயர்களை வாங்கி விட்டேன். அதுவே போதும்.துஷ்யந்த் எனக்கு முறைப் பையன். பிப்ரவரி 2ம் தேதி எங்களது திருமணநிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்குப் பின் நடிக்க மாட்டேன். சினிமாவில்அழகான கேரக்டர்களில் நடித்தது போல கணவருடன் அழகாக குடும்பம் நடத்தப்போகிறேன் என்றார் உமா.எங்கிருந்தாலும் வாழ்க!

    By Staff
    |
    அந்தக் கால நடிகை சுமித்ராவின் மூத்த மகள்தான் உமா. சீமான் இயக்கத்தில் வீரநடைஎன்ற படம் மூலம் அறிமுகமான உமா, கவர்ச்சி காட்டாமலேயே கோலிவுட்டில் ஒருரவுண்டு வந்து விட்டார்.

    தங்கர் பச்சானின் இயக்கத்தில் நடித்த தென்றல், உமாவுக்கு புதிய மார்க்கெட்டைஏற்படுத்திக் கொடுத்தது. அதற்கு முன்பு உப்புச் சப்பில்லாத கேரக்டர்களில் நடித்துவந்த உமா, தென்றலுக்குப் பிறகு கேரக்டர்களை செலக்ட் செய்து நடிக்க ஆரம்பித்தார்.

    தொடர்ந்து சொக்கத் தங்கம் படத்தில் விஜயகாந்த்தின் தங்கையாக வந்து ரசிகர்களைநடிப்பால் கவர்ந்தார். கவர்ச்சி காட்டவே மாட்டேன் என்று வைராக்கியமாக இருந்துவந்த உமா, தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுத்தார்.

    சூரி, கடல் பூக்கள், அமுதே ஆகியவை உமா நடித்த சில படங்கள்.

    தற்போது தமிழில் இலக்கணம், ரசிகர் மன்றம் என இரு படங்களில் நடித்து வரும்உமாவுக்கும், அவரது தூரத்து உறவினர் துஷ்யந்த் என்பவருக்கும் திருமணம்நிச்சயிக்கப்பட்டுள்ளது. துஷ்யந்த், மும்பையில் சாப்ட்வேர் என்ஜீனியராகஇருக்கிறார்.

    உமா-துஷ்யந்த் திருமணம் ஜூன் 15ம் தேதி இவர்களது சொந்த ஊரான பெங்களூரில்நடைபெறுகிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை சுமித்ராவும், அவரது கணவரும்,கன்னடப் படத் தயாரிப்பாளருமான ராஜேந்திர பாபு ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    திருமணத்திற்குப் பின்னர் நடிப்புக்கு விடை கொடுக்கிறார் உமா.

    இப்போது தாய் மொழியான கன்னடத்தில் நடித்து வரும் கள்ளரளி ஹூவாகி என்றசரித்திரப் படம்தான் உமா நடிக்கும் கடைசிப் படமாகும்.

    உமா திருமணமாகி சென்று விட்டாலும் கூட சுமித்ரா குடும்பத்திற்கும்திரையுலகுக்குமான பந்தம் உமாவின் தங்கை தீபிகா மூலம் தொடரும் எனத்தெரிகிறது.

    உமாவின் தங்கையான தீபிகா இப்போது பிளஸ்டு படித்து வருகிறார். அவரைநடிகையாக்க சுமித்ரா முடிவு செய்துள்ளார். அதற்கேற்றார்போல ஏராளமான படவாய்ப்புகள் அவரைத் தேடி வருகிறதாம். உமாவை விட படு அழகாக இருக்கிறார்தீபிகா.

    பிளஸ்டூ படிப்பை முடித்தவுடன் தீபிகாவை களம் இறக்க சுமித்ரா முடிவுசெய்துள்ளாராம். கல்யாணம் குறித்து உமா வெட்கத்துடன் கூறுகையில்,

    பெரிய நடிகை ஆக வேண்டும் என்ற கனவுடன்தான் நடிக்க வந்தேன். அந்த கனவுநனவாகவில்லை. இருந்தாலும் நல்ல நடிகை, குடும்பப் பாங்கான நடிகை, பிரச்சினைஇல்லாத நடிகை என்ற பெயர்களை வாங்கி விட்டேன். அதுவே போதும்.

    துஷ்யந்த் எனக்கு முறைப் பையன். பிப்ரவரி 2ம் தேதி எங்களது திருமணநிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்குப் பின் நடிக்க மாட்டேன். சினிமாவில்அழகான கேரக்டர்களில் நடித்தது போல கணவருடன் அழகாக குடும்பம் நடத்தப்போகிறேன் என்றார் உமா.

    எங்கிருந்தாலும் வாழ்க!

      Read more about: uma to marry and settle
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X