twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்களுக்கும் வில்லத்தனம் வரும்...நடிகர்களுக்கு டஃப் கொடுத்த தமிழ் சினிமா வில்லிகள்

    |

    சென்னை : பெண்கள் மென்மையானவர்கள், அழகானவர்கள், அவர்களின் பாசம், தியாகம் காட்டப்பட்டதுடன், கவர்ச்சியாக, அழகு பதுமைகளாக காட்டப்பட்டுவது தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடந்து வருகிறது. பல படங்களில் ஹீரோயின்கள், காதல் சீன்கள் மற்றும் டூயட் பாடல்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டதும் உண்டு.

    ஆனால் பெண்களுக்கும் வில்லத்தனம் வரும் என காட்டி பிள்ளையார்சுழி போட்டு வைத்தார் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர். அவரைத் தொடர்ந்து பல டைரக்டர்களும் தங்கள் படங்களில் வில்லனுக்கு பதிலாக வில்லி கதாபாத்திரங்களை கொண்டு அறிமுகம் செய்தனர். பெண்களை வில்லிகளாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளனர். அப்படி அழகிய வில்லிகளாக வந்து தமிழ் ரசிகர்களின் மனதில் அழுத்தமான இடம் பிடித்து நடிகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

     சினிமா மற்றும் விளம்பர படங்களில் புதிய அதிர்வலைகளை உருவாக்கும் Josh App ஸ்டார் மேகன்! சினிமா மற்றும் விளம்பர படங்களில் புதிய அதிர்வலைகளை உருவாக்கும் Josh App ஸ்டார் மேகன்!

    ரம்யா கிருஷ்ணன்

    ரம்யா கிருஷ்ணன்

    வில்லி கேரக்டர் என்றாலே பலரக்கும் சட்டென்று மனதில் வருவது படையப்பா நீலாம்பரி தான். நீலம்பரி கேரக்டரில் மிக இயல்பாக நடித்து, வில்லத்தனத்தை வித்தியாசமாக காட்டி, ரஜினியையே மிஞ்சும் அளவிற்கு பெயர் வாங்கினார் ரம்யா கிருஷ்ணன். ஸ்டைல்லாக, கெத்தாக வில்லியாக நடித்த முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்து விட்டார்.

    சகுந்தலா

    சகுந்தலா

    நீலம்பரியை போல் தமிழ் சினிமாவில் அழுத்தமான, மறக்க முடியாத வில்லி கேரக்டர் என்றால் அது தூள் படத்தில் வரும் சொர்ணாக்கா தான். தெலுங்கு நடிகையான சகுந்தலா, தூள் படத்தில் லோக்கல் பெண் தாதா கேரக்டரில் வாழ்ந்திருந்தார். இப்படி கூட ஒரு பெண்ணால் வில்லத்தனம் காட்ட முடியுமா என அனைவரையம் மளைக்க வைத்தார் சகுந்தலா.

    ஷ்ரேயா ரெட்டி

    ஷ்ரேயா ரெட்டி

    நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த ஷ்ரேயா ரெட்டி, திமிரு படத்தில் கொடூரமான இளம் வயது வில்லியாக வந்து அனைவரும் மிரட்டினார். சாமுராய் படத்தில் கெஸ்ட் ரோலில் வந்து போன ஸ்ரேயா, முதல் படமான திமிரு படத்திலேயே இப்படி ஒரு நடிப்பா...இவரும் ஒரு பெண் தானா என கேட்கும் அளவிற்கு வில்லத்தனம் செய்திருப்பார். பஞ்ச் டயலாக் ஏதும் பேசாத வில்லி என்றால் அது ஷ்ரேயா ரெட்டியாக தான் இருப்பார்.

    ரீமா சென்

    ரீமா சென்

    கிளாமர் ஹீரோயினாக வந்து ரசிகர்களை கவர்ந்த ரீமா சென், திடீரென சிம்புவின் வில்லவன் படத்தில் வில்லி அவதாரம் எடுத்தார். அதுவும் பள்ளி பருவ காதலனுக்காக வில்லத்தனம் செய்யும் பள்ளி மாணவியாக நடித்திருப்பார். அழகிய தோற்றத்துடன் ரீமா செய்த வில்லத்தனம் வேற லெவல் தான்.

    சிம்ரன்

    சிம்ரன்

    தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக, டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த சிம்ரன், பார்த்தேன் ரசித்தேன் படத்தில் அழகிய வில்லியாக மாறி, நெகடிவ் ரோலும் செய்தார். இதற்கு முன் ஒன்ஸ்மோர் படத்திலும் நெகடிவ் ரோலில் நடத்திருப்பார். பார்த்தேன் ரசித்தேன் படத்தில் பிரஷசாந்திடம் அமைதியான நட்பையும், அவரின் காதலியான லைலாவிடம் வில்லத்தனத்தையும் காட்டி நடித்திருப்பார்.

    த்ரிஷா

    த்ரிஷா

    யாருமே எதிர்பாராத வகையில் கொடி படத்திற்கு தனுஷிற்கு வில்லியாக நடித்தார் த்ரிஷா. தனது அரசியல் வாழ்க்கைக்காக காதலனையே கொல்லும் வில்லி கேரக்டர். கொடியில் அவர் நடித்த ருத்ரா கேரக்டர், அதுவரை த்ரிஷாவை தேவதையாக பார்த்த ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை தந்தது.

    Recommended Video

    Valimai படத்தில் Karthikeya -விற்கு ஜோடியாக நடித்த Sara யார்?? | Valimai Banij
    வரலட்சுமி சரத்குமார்

    வரலட்சுமி சரத்குமார்

    ஹீரோயினாக பல படங்களில் நடித்தும் கிடைக்காத பெயரை சண்டைக்கோழி 2 படத்தில் வில்லி கேரக்டரில் நடித்து தட்டி சென்று விட்டார் வரலட்சுமி. யாரும் எதிர்பாராத வரலட்சுமியின் இந்த ரீஎன்ட்ரி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து சர்கார் படத்தில் மாடர்ன் வில்லியாக வந்து வேற லெவலில் மாஸ் காட்டினார் வரலட்சுமி.

    English summary
    Popular actresses who gives unexpected negative shade come back also attracts tamil cinema lovers. Here we disscussed about some female villains in tamil cinema on the occassion of international women's day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X