ராஞ்ஜனா விமர்சனம்.... தனுஷைக் கொண்டாடும் வட இந்திய மீடியாக்கள்!

By Shankar

தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படம் ராஞ்ஜனா (ராஞ்ஜ்ஹனா - இதான் சரியான உச்சரிப்பாம்!) இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதிலும் 2000 அரங்குகளுக்கு மேல் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

ஹீரோ நம்ம ஊர் ஆளாச்சே... சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் அதிக தியேட்டர்களில் படம் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 14 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு அனைத்து விமர்சகர்களுமே நல்ல சாதகமான விமர்சனங்களைத் தந்துள்ளனர்.

தரண் ஆதர்ஷ்

தரண் ஆதர்ஷ்

குறிப்பாக பாலிவுட் ஹங்காமாவின் தரண் ஆதர்ஷ், "எளிமையான கதை, அருமையான படமாக்கம், குறிப்பாக தனுஷின் அவுட்ஸ்டான்டிங் நடிப்பு நம்மை கட்டிப் போடுகிறது," என்று பாராட்டி, 3.5 நட்சத்திர அந்தஸ்து தந்துள்ளார்.

தனுஷுக்கு பாராட்டு

தனுஷுக்கு பாராட்டு

ஜீ நியூஸ், இந்தப் படத்தை மிகச் சிறந்த காதல் படம் எனப் பாராட்டியுள்ளது. தனுஷைத்தான் இவர்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

வழக்கமான பாலிவுட் ஹீரோவாக இல்லை தனுஷ். ஆனால் எடுத்த எடுப்பிலேயே ரசிகர்களை தனது அபார நடிப்பால் சுண்டி இழுத்துவிட்டார். பாலிவுட்டுக்கு நல்ல வரவாக அமைந்துள்ளார் தனுஷ்," எனப் பாராட்டியுள்ளது.

என்டிடிவி

என்டிடிவி

ஒரு முக்கோணக் காதல் கதைதான் என்றாலும் அதைச் சொன்ன விதம், கதைக்குள் வைத்துள்ள சுவாரஸ்யமான முடிச்சுகள் நம்மை அப்படியே ஒன்றிப் போக வைக்கின்றன, எனப் பாராட்டியுள்ளது என்டிடிவி.

தனுஷும் சோனம் கபூரும் மேட் பார் ஈச் அதர் என சொல்லும் அளவுக்கு அழகாகப் பொருந்தியிருக்கிறார்கள் என்றும் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

முதல் பாதி ஆஹா..

முதல் பாதி ஆஹா..

டிஎன்ஏ தனது விமர்சனத்தில், 'படத்தின் முதல் பாதி அபாரமாக உள்ளது. சோனம் மற்றும் தனுஷின் நடிப்பு பிரமாதமாக உள்ளது. ஒன்லைன் வசனங்கள் அருமையாக உள்ளன. தனுஷ் - சோனம் நடிப்புக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்," என்று குறிப்பிட்டுள்ளது.

ரசிகர்கள் பாராட்டு...

ரசிகர்கள் பாராட்டு...

தனுஷுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது வட இந்தியாவில். தென்னிந்திய நடிகர்களில் ரஜினி, கமலுக்குப் பிறகு எடுத்த எடுப்பில் இப்படி ஒரு வரவேற்பைப் பெற்றுள்ளவர் தனுஷ்தான் என்று பாராட்டியுள்ளன மீடியாக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X