For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அமெரிக்காவில் அஜக் மஜக் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு கலைப் பயணம் மேற்கொண்டகுழுவினரிடையே ஏகப்பட்ட அஜக்கா மஜக்கா வேலைகள் நடந்து பெரும் கூத்தேநடந்து விட்டதாக கோலிவுட்டே கூடி உட்கார்ந்து கும்மியடித்துக் கொண்டிருக்கிறதப. தமிழ் சினிமா உலகில் கலைப் பயணம் என்ற வார்த்தை ரொம்ப பாப்புலர்.சினிமாவில் லேசாக தலையைக் காட்டியவர்கள், தலை காட்டியும் தேறாதவர்கள்,ஹீரோக்களால் கைவிடப்பட்டவர்கள் என ஒரு சில கேட்டகிரிக்காரர்கள் ஒன்று கூடிஅவ்வப்போது ஏதாவது வெளிநாட்டுக்கு கலைப் பயணம் என்ற பெயரில்போவார்கள்.ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடத்தி துட்டு பார்த்து விட்டு சென்னைக்குதிரும்புவார்கள். இதில் சிலர் போன இடத்தில் எக்ஸ்ட்ரா வேலைகளிலும் ஈடுபட்டுபணம் ஈடுபடுவார்கள்.இப்படி கலைஞர்களை கூட்டிக் கொண்டு போய் திரும்பக் கொண்டு வந்துவிடுவதற்காகவே சென்னையில் ஏகப்பட்ட பேர் உள்ளனர்.அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் புவனா. இவர் வேறு யாருமல்ல, ரைட்டா தப்பாஎன்ற படத்தை இயக்கியவர்தான் இந்த புவனா.இவர் சமீபத்தில் சென்னையிலிருந்து ஒரு குழுவை அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்றார். அமெரிக்கா வாழ் தமிழ்ச் சங்கங்கள் இணைந்து நடத்திய இசை விழாவில்நம்ம ஊர் குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடந்தது.இதற்காக பாய்ஸ் ஹீரோக்களில் ஒருவரான மணிகண்டன், ஒற்றைக் கால் கொண்டடான்சர் குட்டி, நடிகைகள் வினோதினி, தேவிப்பிரியா உள்ளிட்டோரை புவனாஅமெரிக்காவுக்கு கூட்டிச் சென்றார்.கலை நிகழ்ச்சியை முடித்து விட்டு ஊர் திரும்பியுள்ள புவனா, நடிகர், நடிகையர் மீதுஏகப்பட்ட புகார் பட்டியலை வாசிக்கிறார்.இதுவரை இப்படி ஒரு அனுபவம் எனக்கு நேர்ந்ததில்லை. நம்ம ஊர் பெயரையேகெடுத்து விட்டார்கள் இவர்கள். சென்னை விமான நிலையத்தில் விமானத்தில்ஏறும்போதே ரகளை ஆரம்பித்து விட்டது. நல்ல போதையுடன்தான் மணிகண்டனும்,குட்டியும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.அத்தோடு விட்டார்களா? நியூயார்க் நகரில் என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஊர்சுற்ற ஆரம்பித்து விட்டனர். மேலும், நடன நிகழ்ச்சி நடந்த அன்று கலை நிகழ்ச்சியைரசித்துப் பார்க்க வந்திருந்த ஒரு பெண்ணிடம், வா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்என மணிகண்டன் கூப்பிட பெரும் அசிங்கமாகி விட்டது.இவர்கள்தான் இப்படி என்றால், நடிகைகள் வினோதினியும், தேவிப்பிரியாவும் நடந்துகொண்ட விதத்தை வெளியில் சொல்ல முடியாது. ஆண்களுக்கு சற்றும்சளைத்தவர்கள் இல்லை என்பது போல இருவரும் மிக அசிங்கமாக நடந்துகொண்டார்கள்.அதிலும் இந்த பாய்ஸ் மணிகண்டன், நான் ஊருக்கு வரலை இங்கேயே தங்கியிருந்துஊர் சுத்தப் போறேன்னு ஒரே டார்ச்சர் செய்தார்.நன்றாக நடந்திருக்க வேண்டிய கலை நிகழ்ச்சிக்கு பெரும் கரும்புள்ளிகளாகஅமைந்து விட்டார்கள் இந்த நான்கு பேரும் என்று அழாத குறையாக புலம்புகிறார்புவனா.என்னப்பா ஆச்சு என்று பாய்ஸ் மணிகண்டனிடம் போய் கேட்டால், அட நீங்க வேற,இப்படி ஒரு பொம்பளையை (புவனா) நான் பார்த்ததே இல்லைங்க. இந்த கலைநிகழ்ச்சிக்காக ஒன்றரை வருடங்களுக்கு முன்பே அக்ரிமென்ட் போட்டாச்சு.ஆனால் இப்பத்தான் கூட்டிட்டுப் போனார். மத்தவங்களைப் பற்றி நான் எதுவும்சொல்ல விரும்பவில்லை. நானும், குட்டியும் கீழ் தளத்தில் இருந்தோம். எங்களுடன்வந்த மற்றவர்கள் 14வது தளத்தில் தங்கியிருந்தனர்.நான் பொதுவாக குடிப்பதில்லை. எப்போதாவது பீர் அடிப்பேன், அதுவும் வெளிநாடுசெல்லும்போதுதான், எப்போதாவது இப்படி ஜாலியாக இருப்பதில் தப்பில்லை தானே.புரோகிராம்படி, நாங்கள் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்து கொடுத்துவிட்டோம். நாடு விட்டு நாடு வந்துள்ளோம். மீண்டும் வர வாய்ப்பு கிடைக்குமோ,கிடைக்காதோ, இருந்து இரண்டு நாள் ஊரை சுற்றிப் பார்த்து விட்டு போகலாமேஎன்றுதான் நான் சொன்னேன்.அதுக்கு அந்தம்மா மறுத்து விட்டார். இதனால் புரோகிராம் முடிந்த அடுத்த நாளே,நான், வினோதினி, தேவிப்பிரியா, குட்டி ஆகியோர் ஊருக்கு திரும்பி விட்டோம். 15நாள் டூரை 4 நாளில் முடித்துக் கொண்டு திரும்பி விட்டோம்.சரியா சாப்பாடு கூட போடலீங்க, அவ்வளவு டார்ச்சர் அந்த அம்மாவால. ஹோட்டல்காரிடாரிலேயே ரிகர்சல் பாருங்கன்றாங்க. எப்படிங்க இருக்கும்? அவருக்குஎங்களைப் பிடிக்கவில்லை. வினோதினி, தேவிப்பிரியாவையும் பிடிக்கல. ஆனால்கூடவே கூட்டிட்டு வந்த சுவாதியை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டு விட்டுஎங்களை ஊருக்கு திருப்பி அனுப்பி விட்டார்.குடுமிப்பிடி சண்டை மட்டும்தான் நடக்கலீங்க, மற்றபடி கேவலமாகி விட்டது.இனிமேல் அந்தம்மா எனக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் சத்தியமா போக மாட்டேன்என்று புலம்பி விட்டார் பாய்ஸ் பார்ட்டி.

  By Staff
  |

  சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு கலைப் பயணம் மேற்கொண்டகுழுவினரிடையே ஏகப்பட்ட அஜக்கா மஜக்கா வேலைகள் நடந்து பெரும் கூத்தேநடந்து விட்டதாக கோலிவுட்டே கூடி உட்கார்ந்து கும்மியடித்துக் கொண்டிருக்கிறதப.

  தமிழ் சினிமா உலகில் கலைப் பயணம் என்ற வார்த்தை ரொம்ப பாப்புலர்.சினிமாவில் லேசாக தலையைக் காட்டியவர்கள், தலை காட்டியும் தேறாதவர்கள்,ஹீரோக்களால் கைவிடப்பட்டவர்கள் என ஒரு சில கேட்டகிரிக்காரர்கள் ஒன்று கூடிஅவ்வப்போது ஏதாவது வெளிநாட்டுக்கு கலைப் பயணம் என்ற பெயரில்

  போவார்கள்.ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடத்தி துட்டு பார்த்து விட்டு சென்னைக்குதிரும்புவார்கள். இதில் சிலர் போன இடத்தில் எக்ஸ்ட்ரா வேலைகளிலும் ஈடுபட்டுபணம் ஈடுபடுவார்கள்.

  இப்படி கலைஞர்களை கூட்டிக் கொண்டு போய் திரும்பக் கொண்டு வந்துவிடுவதற்காகவே சென்னையில் ஏகப்பட்ட பேர் உள்ளனர்.

  அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் புவனா. இவர் வேறு யாருமல்ல, ரைட்டா தப்பாஎன்ற படத்தை இயக்கியவர்தான் இந்த புவனா.

  இவர் சமீபத்தில் சென்னையிலிருந்து ஒரு குழுவை அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்றார். அமெரிக்கா வாழ் தமிழ்ச் சங்கங்கள் இணைந்து நடத்திய இசை விழாவில்நம்ம ஊர் குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடந்தது.

  இதற்காக பாய்ஸ் ஹீரோக்களில் ஒருவரான மணிகண்டன், ஒற்றைக் கால் கொண்டடான்சர் குட்டி, நடிகைகள் வினோதினி, தேவிப்பிரியா உள்ளிட்டோரை புவனாஅமெரிக்காவுக்கு கூட்டிச் சென்றார்.

  கலை நிகழ்ச்சியை முடித்து விட்டு ஊர் திரும்பியுள்ள புவனா, நடிகர், நடிகையர் மீதுஏகப்பட்ட புகார் பட்டியலை வாசிக்கிறார்.

  இதுவரை இப்படி ஒரு அனுபவம் எனக்கு நேர்ந்ததில்லை. நம்ம ஊர் பெயரையேகெடுத்து விட்டார்கள் இவர்கள். சென்னை விமான நிலையத்தில் விமானத்தில்ஏறும்போதே ரகளை ஆரம்பித்து விட்டது. நல்ல போதையுடன்தான் மணிகண்டனும்,குட்டியும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

  அத்தோடு விட்டார்களா? நியூயார்க் நகரில் என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஊர்சுற்ற ஆரம்பித்து விட்டனர். மேலும், நடன நிகழ்ச்சி நடந்த அன்று கலை நிகழ்ச்சியைரசித்துப் பார்க்க வந்திருந்த ஒரு பெண்ணிடம், வா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்என மணிகண்டன் கூப்பிட பெரும் அசிங்கமாகி விட்டது.

  இவர்கள்தான் இப்படி என்றால், நடிகைகள் வினோதினியும், தேவிப்பிரியாவும் நடந்துகொண்ட விதத்தை வெளியில் சொல்ல முடியாது. ஆண்களுக்கு சற்றும்சளைத்தவர்கள் இல்லை என்பது போல இருவரும் மிக அசிங்கமாக நடந்துகொண்டார்கள்.

  அதிலும் இந்த பாய்ஸ் மணிகண்டன், நான் ஊருக்கு வரலை இங்கேயே தங்கியிருந்துஊர் சுத்தப் போறேன்னு ஒரே டார்ச்சர் செய்தார்.

  நன்றாக நடந்திருக்க வேண்டிய கலை நிகழ்ச்சிக்கு பெரும் கரும்புள்ளிகளாகஅமைந்து விட்டார்கள் இந்த நான்கு பேரும் என்று அழாத குறையாக புலம்புகிறார்புவனா.

  என்னப்பா ஆச்சு என்று பாய்ஸ் மணிகண்டனிடம் போய் கேட்டால், அட நீங்க வேற,இப்படி ஒரு பொம்பளையை (புவனா) நான் பார்த்ததே இல்லைங்க. இந்த கலைநிகழ்ச்சிக்காக ஒன்றரை வருடங்களுக்கு முன்பே அக்ரிமென்ட் போட்டாச்சு.

  ஆனால் இப்பத்தான் கூட்டிட்டுப் போனார். மத்தவங்களைப் பற்றி நான் எதுவும்சொல்ல விரும்பவில்லை. நானும், குட்டியும் கீழ் தளத்தில் இருந்தோம். எங்களுடன்வந்த மற்றவர்கள் 14வது தளத்தில் தங்கியிருந்தனர்.

  நான் பொதுவாக குடிப்பதில்லை. எப்போதாவது பீர் அடிப்பேன், அதுவும் வெளிநாடுசெல்லும்போதுதான், எப்போதாவது இப்படி ஜாலியாக இருப்பதில் தப்பில்லை தானே.

  புரோகிராம்படி, நாங்கள் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்து கொடுத்துவிட்டோம். நாடு விட்டு நாடு வந்துள்ளோம். மீண்டும் வர வாய்ப்பு கிடைக்குமோ,கிடைக்காதோ, இருந்து இரண்டு நாள் ஊரை சுற்றிப் பார்த்து விட்டு போகலாமேஎன்றுதான் நான் சொன்னேன்.

  அதுக்கு அந்தம்மா மறுத்து விட்டார். இதனால் புரோகிராம் முடிந்த அடுத்த நாளே,நான், வினோதினி, தேவிப்பிரியா, குட்டி ஆகியோர் ஊருக்கு திரும்பி விட்டோம். 15நாள் டூரை 4 நாளில் முடித்துக் கொண்டு திரும்பி விட்டோம்.

  சரியா சாப்பாடு கூட போடலீங்க, அவ்வளவு டார்ச்சர் அந்த அம்மாவால. ஹோட்டல்காரிடாரிலேயே ரிகர்சல் பாருங்கன்றாங்க. எப்படிங்க இருக்கும்? அவருக்குஎங்களைப் பிடிக்கவில்லை. வினோதினி, தேவிப்பிரியாவையும் பிடிக்கல. ஆனால்கூடவே கூட்டிட்டு வந்த சுவாதியை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டு விட்டுஎங்களை ஊருக்கு திருப்பி அனுப்பி விட்டார்.

  குடுமிப்பிடி சண்டை மட்டும்தான் நடக்கலீங்க, மற்றபடி கேவலமாகி விட்டது.இனிமேல் அந்தம்மா எனக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் சத்தியமா போக மாட்டேன்என்று புலம்பி விட்டார் பாய்ஸ் பார்ட்டி.

   Read more about: tamil film stars fight in us
   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X