மணிரத்தினத்திற்கு சாந்தாராம் விருது

கடந்த 1993ம் ஆண்டு முதல் இந்திய திரைப்படத் துறையின் மாபெரும் மேதைகளில் ஒருவரான வி.சாந்தாராம் பவுண்டேஷன் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
சக்டே படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஷாருக் கானுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. சிறந்த படமாகவும் அது தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறந்த எடிட்டிங்குக்கான விருதுகளும் இப்படத்திற்குக் கிடைத்துள்ளன.
குரு படத்தை இயக்கி மணிரத்தினத்திற்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது. இப்படத்திற்கு சிறந்த இசை மற்றும் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதுகளும் கிடைத்துள்ளன.
லகே ரஹோ முன்னாபாய் படத்திற்கு சிறந்த துணை நடிகர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான விருதுகள் கிடைத்துள்ளன.
Comments


Click it and Unblock the Notifications