10வது ஆண்டு கொண்டாட்டத்தில் தேசிய விருது திரைப்படம்

சென்னை : இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் வாகை சூட வா.

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்ற படம் வாகை சூட வா.

படத்தின் 10வது ஆண்டு கெண்டாட்டத்தை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

வாகை சூட வா படம்

வாகை சூட வா படம்

நகைச்சுவை காதல் படமாக கடந்த 2011 செப்டம்பர் 30ம் தேதி வெளியான படம் வாகை சூட வா. விமல், இனியா, பாக்யராஜ் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்தப் படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை தட்டிச் சென்றது.

 இயக்குநர் சற்குணத்தின் 2வது படம்

இயக்குநர் சற்குணத்தின் 2வது படம்

சற்குணத்தின் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படமான வாகை சூட வா,1960களின் காலகட்டத்தை நம்முடைய கண்முன்னால் நிறுத்திச் சென்றது. அப்பாவி ஆசிரியர் வேடத்தில் முத்திரை பதித்திருந்தார் விமல். வேலுத்தம்பி என்ற கதாபாத்திரமாகவே அவரை அந்தப் படத்தில் காண முடிந்தது.

சிறப்பான கதைக்களம்

சிறப்பான கதைக்களம்

செங்கல் சூளையில் வேலை செய்யும் குழந்தைகளின் அவலம் படத்தில் தெளிவாக்கப்பட்டிருந்தது. சான்றிதழுக்காக வேண்டா வெறுப்பாக ஒரு கிராமத்திற்கு செல்லும் ஆசிரியர் பயிற்சி பெற்ற விமல், அந்த மக்களின் நலனுக்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணிக்க முன்வருவதாக செல்லும் கதைக்களம் அனைவரையும் கவர்ந்தது.

சிறப்பான இனியா கதாபாத்திரம்

சிறப்பான இனியா கதாபாத்திரம்

குறிப்பாக துடுக்கான பெண்ணாக படத்தில் நடித்திருந்த இனியாவின் கதாபாத்திரமும் பேசப்பட்டது. சர சர சாரக் காத்து வீசும்போது என்ற பாடலில் மட்டுமின்றி படம் முழுவதும் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் போறானே என்ற பாடலும் ரசிகர்களின் ஹிட் லிஸ்ட்டில் என்றும் இடம் பெறும் வகையில் அமைந்துள்ளது.

10வது ஆண்டு கொண்டாட்டம்

10வது ஆண்டு கொண்டாட்டம்

இந்நிலையில் அந்த படத்தின் 10வது ஆண்டு கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். சற்குணம், விமல், இனியா உள்ளிட்டவர்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் இதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X